தேர்தல்- 2009 (அல்லது) விடுபட்டவை- 4.மே.09

தேர்தல் சூடு பரபர வென இருக்கிறது. படித்த மேல் தட்டு மக்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பா.ஜ.க அதன் பிரதம வேட்பாளர் அத்வானி பெயரில் தனி தளம் அமைத்திருக்கிறது. ஆங்கிலம், இந்தி மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தளத்தில் பல செய்திகளையும் பாஜக வின் தேர்தல் அறிக்கையையும் கிடைக்கும் படி வடிவமைத்திருக்கிறார்கள். அதே போல வலைப்பதிவையும் உருவாக்கி இருக்கிறார்கள். இதுவும் இருமொழிகளில் இருக்கிறது. அத்வானியே வலைபதிவது போல இருக்கிறது பதிவுகள். கருத்துசொல்லவும் முடிகிறது. இங்கே பல தமிழ் வலைப்பதிவுகளில் அந்த வசதி இல்லை என்பதையும் நினைவு கூறுவது நல்லது.

——–

தேர்தலுக்கு என பாமக ஒரு தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. பா.à®®.க.க்கு ஓட்டுப் போடுங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழோசை நாளிதழின் பி.டி.எப் வடிவம், தேர்தல் அறிக்கை போன்றவையும் நன்றாக இருக்கிறது. வீடியோக்கள் உடனடியாக அப்லோட் செய்யப்படுவதில்லை என்ற குறை இருக்கிறது. வேறு பக்கங்களுக்கான சுட்டிகளை சொடுக்கும் போது.. தனித்தனி சாளரம் விரிவது மிகுந்த எரிச்சலைக்க் கொடுக்கிறது. 🙁 தளத்தில் ஒருங்குறியை பயன்படுத்தி இருப்பது மகிழ்வளைக்கிறது. அப்படியே ஆங்கில வடிவத்திற்கும் முயன்றால் நல்லது. பெரிய, சின்ன மருத்துவர் எவருக்கேனும் வலைப்பதிவையும் தொடங்கினால்.. பின்னாலில் நூல் தொகுதிகளையும் வெளியிட முடியும்.

—————-

இம்முறை தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதனால் தான் திமுக அரசு பஸ்கட்டண குறைப்பில் ஈடுபட்டு, பின் சூடு பட்டு மாறியிருக்கிறது. அதிகார பலம் கொண்டவர்களை பணத்தை வீசியாவது ஓட்டுக்களை பெற்றுவிடும் முனைப்பில் இருக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்யமுடியாத தொகுதிகளில் எதிர்வேட்பாளர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீடியபடி இருக்கிறார்கள். பணபலமிக்கவர்கள் அதிகாரத்தை பிடிக்கும் ஆசையில் அறிக்கைகளையும், சவால்களையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். புதிய பணக்காரர்கள் நடப்பது மத்திய ஆட்சிக்கான தேர்தல் என்பதை மறந்து மாநில அரசை மட்டும் குற்றம் சொல்லி நடக்கின்றார்கள். மு.க. ஸ்டாலின், டாக்டர். அன்புமணியை காய்ச்சினால்.. ஸ்டானினை டாக்டர்.ராமதாஸ் காய்ச்சுகிறார். பெருங்கூட்டத்தில் தனியொருவனாய் அலைந்து வருகிறார் விஜயகாந்த்.

———–

நிச்சயம் இந்த தேர்தலில் ’பெட்’ கட்டி விளையாடுபவர்கள் அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது. நம்ம ஆளுங்களுக்குத் தான் எதுவானாலும் பெட் கட்ட பிடிக்குமே..! 🙂

———

தேர்தல் விளம்பரங்களிலேயே சில காங்கிரஸ் விளம்ம்பரங்கள், பாஜக-வின் மின்சாரவெட்டு குறித்த விளம்பரம், அதிமுக-வின் அனேக விளம்பரங்கள் கவரும்படி எடுக்கப்பட்டிருக்கிறது. திமுக-வின் விளம்பரங்கள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. பின்ன.. சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் தினம் பார்ப்பதை விளம்பரம் என்று கூறி ஒரு பாடகரை பாடவிட்டால் போதுமா…. பேசாம லக்கியிடம் கிரியேட்டிவான ஐடியாவாவது கேட்டிருக்கலாம் இவர்கள்.

—-

முதல்வரின் உண்ணாவிரதத்திற்கு முன் வரை திமுக கூட்டணிக்கு கொஞ்சம் மரியாதை மக்கள் மத்தியில் இருந்தது. அவரின் அந்த ஆறுமணி நேர உண்ணாவிரதத்தால்.. இருந்ததையும் இழந்து விட்டு நிற்கிறார்களோ என்று படுகிறது. பலரிடம் பேசிப் பார்த்ததினால் இப்படி கருத வேண்டியதிருக்கிறது.


Comments

4 responses to “தேர்தல்- 2009 (அல்லது) விடுபட்டவை- 4.மே.09”

  1. அத்வானியின் வலைப்பூவை நான் படித்துவருகிறேன்.
    இந்தியில் வருபவை தவிர்த்து. இந்தி இப்போதான் கத்துகிட்டிருக்கேன். 🙂

    //இருந்ததையும் இழந்து விட்டு நிற்கிறார்களோ என்று படுகிறது//

    !!!

    ஆனால் மதுரையும் = நாயகனின் தொகுதியும் மட்டும் களைகட்டுவதாகக் கேள்விப்பட்டேன்..!!! :)))

  2. //பேசாம லக்கியிடம் கிரியேட்டிவான ஐடியாவாவது கேட்டிருக்கலாம் இவர்கள்.//

    அவர்தான் டெய்லி ஐடியாக்களை வலைப்பூவுல கொட்டிட்டு இருககரே தல 🙂

  3. தகவலுக்கு நன்றி.

    இணைய கொ.ப.செ லக்கியார் வாழ்க….

    ஆமா.. இனி வெறும் ல்க்கின்னு சொல்ல கூடாது…

  4. //இருளில் தவிக்கும் தமிழகத்திற்கு ஒளியேற்ற, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழர்களைக் காக்க, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள். மறவாதீர்,//

    ஜெ வோட குரல் வழி பிரச்சாரத்தை பாமக இணையதளத்தில் இப்படி போட்டிருக்காங்க. இதுல தமிழர்களைக் காக்க என்பது “ இலங்கைத் தமிழரைக் காக்க” என ஜெ குரலில் ஒலிக்கிறது. அதில் ”இலங்கை” என்பதை எடுத்துவிட்டு ”தமிழர்களைக் காக்க” என மட்டும் இவர்கள் தளத்தில் போட்டிருக்கிறார்கள். இதில் ”இலங்கை” என்பதை சேர்க்க பாமகவிற்கு உள்ள தயக்கம் நியாயமானதே. ஆனால் அதற்கு பதில் ”ஈழத் தமிழர்களக் காக்க” எனப் போட்டிருக்கலாம். அப்படி போட்டால் அம்மாவிற்கு பிடிக்காத “ ஈழம்” என்ற வார்த்தையை சேர்த்து வாங்கிக் கட்டிக்க வேண்டாம் என்ற பயம் போல. இவர்கள் தான் தனி ஈழம் வாங்கித் தருபவர்கள். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *