எனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார்.

என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான்.

நான் இணையத்திற்குள் அடியெடுத்து வைத்த சமயங்களில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களுக்கு நிறைய பஞ்சமிருந்தது. திரிபுகளும், புரணிகளுமே அதிகம் வலம் வந்துகொண்டிருந்தது. நிறைய போலிகளும் உலாவந்தன.

ஈ.வெ.ரா சொன்ன கருத்துக்களை வெட்டி ஒட்டி தனக்கு தேவையானவற்றை வெளியிடும் துக்ளக் தனமும், இட்லிவடைத்தனமும் அதிகமாக அரங்கேறின.(தொடர்ந்து அரங்கேற்றம் செய்யும் வண்ணம் இருப்பார்கள்)

ஈ.வெ.ராவின் எழுத்துக்களை இணையத்தில் பரவலாக விதைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அண்ணன் திரு, ஓவியா, தமிழச்சி போன்ற பலர் அந்த வேலையை செய்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது.

ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு, ஈ.வெ.ராமசாமி என்ற பெரியாரின் வாழ்க்கையை எளிமையாக எழுத்ததொடங்கினேன். அதனை மறைந்த தோழர் அசுரன் “புதியதொன்றல்” என்ற பத்திரிக்கையில் எடுத்துப்போட்டார். அவர் மறைவுக்கு பின்னும் அந்த இதழில் மட்டும் தொடர்ந்து பெரியாரின் வரலாற்றை எழுதி வருகிறேன். மீண்டும் இணையத்தில் எழுதுவதற்கு.. http://periyar.balabharathi.net/ தளம் அமைத்து எழுதி வருகிறேன். அந்த தளத்திற்க்கு ஒரு விளம்பரம் செய்யவே இந்த பதிவு. 😉


Comments

4 responses to “பெரியாரும் நானும்..”

  1. பெரியார் பற்றிய பதிவுகள் தொடரட்டும் நண்பா.

    வாழ்த்துக்கள்.

  2. //ஈ.வெ.ராவின் எழுத்துக்களை இணையத்தில் பரவலாக விதைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அண்ணன் திரு, ஓவியா, தமிழச்சி போன்ற பலர் அந்த வேலையை செய்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது.//

    மனிதநேயம் மலர
    பெரியரின் சிந்தனைகளை விதைப்போம்.

    தொய்வடையாமல் தொடர்ந்து தொண்டரப் பணியில் ஈடுபடுவோம்.

    மிக்க நன்றி

  3. நீங்கள் பெரியாரின் பேரன் என்றால் நான் உங்கள் தம்பி.

    சென்னைக்கு வரும்வரை பெரியாரை பலரும் விமர்சித்த கோணத்தில்தான் பார்த்தேன். ஆனால் எனது ஊர்க்காரர், உறவினருமான ஒருவரின் அறிமுகத்தில் பெரியாரின் எழுத்துக்களை வாசிக்கத் துவங்கினேன். (குத்தூசியின் வரலாறையும் வாசித்திருக்கிறேன்). இந்தக் கிழவனுக்கு எத்தனை ஆராய்ச்சி, தைரியம், எதிர்ப்பு என வியந்திருக்கிறேன். அப்போதிருந்தே நானும் அந்தக் கருத்துக்களுக்கு அடிமையாகிவிட்டேன்.

    உங்களைப் போன்றவர்கள் பெரியாரைப் பற்றி தொடர்ந்து எழுதுவது பெரியாரைப் பற்றிய தவறான பார்வைகளோடு அவரை அணுகும் புதியவர்களுக்கு, புதிய அர்த்தங்களைக் கொடுக்கும். அவரது கொள்கைகளின் பின் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    அன்புடன்,
    தம்பி ஊர்சுற்றி.

  4. நிறைமொழி Avatar
    நிறைமொழி

    பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு (திருத்தப்பட்டு, விரிவாகம் செய்யப்பெற்றது)

    தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” நூலின் –திருத்தப்பட்டு விரிவாக்க, செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.

    பெயர்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி இவற்றுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் இன்றியமையாத அரிய அடிக்குறிப்புகளைக் கொண்டது.

    நூலை வெளியிடுவோர்:
    “பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையினர்”

    நாடார்குல மித்திரன்
    பகுத்தறிவு கிழமை ஏடு
    திராவிட நாடு
    சுதேச மித்திரன்
    பகுத்தறிவு மாத ஏடு
    தனி அரசு
    THE HINDU
    விடுதலை நாளேடு
    பொன்னி
    குடி அரசு
    உண்மை மாத ஏடு
    குறிஞ்சி
    REVOLT
    சண்ட மாருதம்
    திருச்சி வானொலிப் பேச்சு
    திராவிடன் நாளேடு
    புதுவை முரசு
    கலைமகள்
    புரட்சி கிழமை ஏடு
    நகர தூதன்
    மாலை முரசு

    முதலான பல ஏடுகளிலும் 1922 முதல் 1973 வரையில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் கட்டுரைகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் அடங்கிய அரிய தொகுப்பு.

    20 தொகுதிகள்
    மொத்தம் 9000 பக்கங்கள்

    2010 பிப்ரவரியில் வெளிவர இருக்கிறது

    முன்பதிவுத் திட்டம்
    ஒரு தொகுப்பின் மொத்த விற்பனை விலை : ரூ 5,800
    முன்பதிவு விலை, ஒரே தவணையில் ரூ 3,500
    (முன்பதிவு செய்ய கடைசி நாள்: 15-11-2009)

    முன்பதிவு விலை, இரண்டு தவணைகளில் ரூ3,800
    முதல் தவணைத் தொகை ரூ.2,000
    (கடைசி நாள்: 15-11-2009)
    இரண்டாம் தவணைத் தொகை ரூ. 1,800
    (கடைசி நாள்: 15-12-2009)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *