கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி,
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அகதிகள் முகாம்களை அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கை நவம்பர் 10ம் தேதிக்குள் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா டுடே வார இதழி வெளி வந்த அந்த கட்டுரை இதோ.. கீழே..
—-
என்னங்க அநியாயமா இருக்கு
இலங்கை அகதிகளின் நிலை இப்பத்தான் இவருக்கு தெரியுமா..சில வருடங்கள் இரவிக்குமார் (சட்ட மன்ற உறுப்பினர்)இலங்கை அகதிகளின் முகாம் குறித்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றினை முதலவருக்கு அளித்தாரே அந்த அறிக்கையை முதல்வர் என்ன செய்தார்.?
அப்படியே
இந்தியாவிலுள்ள ஏதிலிகள் முகாம் ஒரு பார்வை என்ற கட்டுரையையும் உங்கள் பார்வைக்கு
http://nattunadappu.blogspot.com/2008/11/blog-post.html
கருணாநிதி செவ்வாய் கிரகத்திலா குடியிருக்கார் பாலா? 1989ற்கு பிறகு இதுவரையில் அவர் ஆட்சியில் இல்லையா? இருந்தாரென்றால் அகதி முகாம்கள் தமிழகத்தில் இல்லையா? இருந்தும் அவருக்கு இதுவரை தெரியவில்லையென்றால்….என்ன செய்துகொண்டிருந்தார்? 2006ல் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் குழு ஒன்று முகாம்களுக்கு சென்று ஆராய்ந்தது கூடவா மறந்து போனது?
20 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களை தமிழக முகாம்களில் சிறை வைத்திருப்பது தெரியாதது சிறந்த நடிப்பு.
இதையெல்லாம் நீங்கள் விளம்பரப்படுத்தி பதிவு வேற எழுதுகிறீர்கள் 🙁
It was just a ploy by the dirty political man karunai to divert public attention from Mullaiperiyar Dam issue.
//20 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களை தமிழக முகாம்களில் சிறை வைத்திருப்பது தெரியாதது சிறந்த நடிப்பு.
இதையெல்லாம் நீங்கள் விளம்பரப்படுத்தி பதிவு வேற எழுதுகிறீர்கள் 🙁 //
அன்பு திரு அண்ணா,
கருணாநிதிக்கு தெரியாமல் என்ன.. இதுவும் ஒரு அரசியல் பல்டி அவ்வளவே..! அதே சமயம் இவ்விசயங்கள் குறித்து நாம் முன்பே பேசி இருக்கிறோம். சில நண்பர்கள் மூலமாக முகாம்களின் நிலை குறித்து வலை உலகிலும் கூட எழுதி இருக்கிறோம். இதனை இங்கு பதிவிடக்காரணமே.. அந்த கட்டுரையை எழுதியது எனது நண்பர் என்ற ஒரே காரணம் தான். மற்றபடி வேறு எதுவும் இல்லை.
என்னைத் தூக்கிக் கடலில் போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன்.
நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம் என்று “ஒளி”பவருக்கு,
புதியதலைமுறைதான் இலங்கை அகதிகளை நினைவுறுத்த வேண்டுமா?
முகாம்கள் தோறும் தன் பிரதிநிதிகளை அனுப்பி அக்கறையுள்ளவராகக்
காட்டிக்கொள்ளவே உதவும். புதியதலைமுறை மூலமாகவே அகதிகள்
குறைதீர்த்த விபரங்களை வெளிச்சம் போட்டுக்காட்டினால் நல்லது.
கருணாநிதி என்னும் தந்திரக்கார கோழை தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஒரு பிரச்னையை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்றுப் போகும்போது கருணாநிதி உடனே உண்ணாவிரதம் அறிவித்துவிடுவார். தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை செய்வதற்கு தமிழினத்துக்கு கிடைத்திருக்கிற ஒரே தலைவன் உண்ணாவிரதம் இருப்பதுகண்டு தொண்டர்கள் கொதிப்பார்கள். ‘அய்யோ தலைவா’ என்று அழுவார்கள், கதறுவார்கள். இப்போதும் அதுவேதான் நடக்கிறது. கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு எதிரே நின்றபடி ‘கைவிடுங்கள், கைவிடுங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்’ என்று கோஷம் போட்டபடி இருக்கிறார்கள் கருணாநிதியின் ரசிகர்கள். போரை நிறுத்தச்சொல்லி ஒப்புக்கேனும் கூட இலங்கையை எதிர்த்து, ராஜபக்ஷேவை எதிர்த்து கோஷம்போட அவர்களுக்குத் தோன்றவில்லை.
சக்கர நாற்காலியில் உண்ணாவிரதம் இருக்கும் கருணாநிதியைப் பார்த்தால் பாவமாக இருப்பதாக நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். எனக்கோ வெட்கமாக இருக்கிறது. அரசியல் அதிகாரங்கள் அற்ற ஏதிலிகள், அதிகாரத்தில் உள்ளவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கலாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதை செய்வதற்கு எதற்கு கருணாநிதி? நீங்களோ, நானோ செய்துவிட்டுப் போய்விடலாமே..?
தமிழினத்தை நம்பவைத்து கழுத்தறுத்த மிக மோசமான நயவஞ்சகனாக கருணாநிதியை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது 33 வயது என்று சொல்வார்கள். கருணாநிதிக்கு இப்போது 85 வயது. அவரது உண்மை முகத்தை தெரிந்துகொள்ள மூன்று தலைமுறைகளை செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இருந்து அணுதினமும் வந்துகொண்டிருக்கும் செய்திகளைப் படிக்கவும், புகைப்படங்களை, வீடியோக்களைப் பார்க்கவும் முடியவில்லை. மனம் பிறழ்வுறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான மனித குல அழிப்பை முன்னெடுக்கும் சிங்கள அரசை நேரடியாக கண்டிக்க இந்தியா என்னும் இறையாண்மை உள்ள புடுங்கி தேசத்துக்கு வக்கில்லை. மத்திய அரசை நிர்பந்தித்து போரை நிறுத்தவோ அல்லது பதவி சுகங்களை துறந்து தமிழினப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தவோ வேண்டிய முத்தமிழ் காவலர் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக? ‘ஐயோ, இந்த தள்ளாத வயதில் உண்ணாவிரதம் இருக்கிறாரே..’ என்ற கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அவற்றை தேர்தல் ஓட்டுக்களாக மாற்றுவதே திருக்குவளை தெட்சிணாமூர்த்தியின் திட்டம். ஆனால் அவரது ஐம்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் இந்தவகை நாடகங்களை மக்கள் நிறையவே பார்த்துவிட்டார்கள். எந்தத் தமிழனும் இந்த உண்ணாவிரதத்தை உண்மை என்று நம்பவில்லை. டீ கடை முக்குகளில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் அம்பலப்பட்டு நிற்கிறது.
உண்மையில் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான மிக மோசமான இருண்டகாலத்தை தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தின் இன்றைய கொடூரமான நிலை குறித்தும், தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழ மக்களுக்கு இழைக்கும் துரோகம் பற்றியும் பெரியார் திராவிட கழகம் தயாரித்த சி.டி.க்களை வெளியிட அரசாங்கம் தடை விதிக்கிறது. பெரியார் திராவிடர் கழக அலுவலகங்கள் ஏதோ விபச்சாரம் நடக்கும் லாட்ஜ்களைப் போல ரெய்டு நடத்தப்படுகின்றன. சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதற்கு காவல்துறையால் சொல்லப்பட்டக் காரணம், ‘பப்ளிக் நியூசென்ஸ்’. ஏண்டா நாய்களா… பப்ளிக்கை குண்டுபோட்டுக் கொல்வது நல்ல விஷயம். அதைப்பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் நியூசென்ஸா..? தேர்தல் களத்தில் எதை பிரசாரம் செய்ய வேண்டும், எதைப் பிரசாரம் செய்யக்கூடாது என்பதை இன்று கோபாலபுரம் கும்பலே தீர்மாணிக்கிறது. அதை எதிர்க்கும் அத்தனை பேர் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு வழக்குப் போடுகிறது. அந்த வழக்குகள் கோர்ட்டில் நிற்காது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் அது விசாரணைக்கு வந்து முடிவு தெரிவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், தெரிந்தேதான் செய்கிறார்கள்.
இதோ இந்த நிமிடம் இதை டைப் செய்துகொண்டிருக்கும்போது ‘இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதாக அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன்’ என கருணாநிதி அறிவித்திருக்கிறார். எதன்பொருட்டும் போர் நிறுத்தம் என்பது அவசியமான ஒன்றே. ஆனால் அதை முன்கூட்டியே தெரிந்துவைத்திருக்கும் தமிழினத் துரோகி கருணாநிதி, அதை தேர்தல் அறுவடையாக மாற்ற உண்ணாவிரதம் இருந்த நாடகத்தை என்னவெனச் சொல்ல? இந்த போர் நிறுத்தம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதில் கருணாநிதியின் பங்கு என எதுவும் இல்லை. சர்வதேசங்களிலும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களின் விளைவாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டும். போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்த தமிழினத் தலைவரை வாழ்த்தி இந்நேரத்துக்கு அறிக்கைகளும், போஸ்டர்களும் தயாராகியிருக்கும். அந்தப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். இந்த உண்ணாவிரதம் என்பது கருணாநிதி நடத்திய நாடகத்தின் இன்னொரு பகுதியே என்பதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். ஓட்டுப் பொறுக்கிகள் அனைவருமே தமிழர்களின் பிணங்களை நக்கிப் பிழைக்கும் நாய்களாக இருக்கிற சூழலில் தேர்தல் புறக்கணிப்புதான் என் தேர்வும். ஆனால் இந்த தேர்தல் அதற்கான சூழல் அல்ல. தமிழ் இன அழித்தொழிப்பை மேற்கொள்ளும் காங்கிரஸுக்கும், அதற்கு துணைபோகும் தி.மு.க.வுக்கும் எதிரான நிலைபாட்டை இந்த தேர்தலில் எடுக்க வேண்டும். இதன் அறுவடை ஜெயலலிதா என்னும் பார்ப்பன சக்திக்குதான் போய்சேரும். ஆனால் தமிழர்களுக்கு சொரணையும், சுய மரியாதையும் இருக்கிறது என்பதைக்காட்ட இந்த எதிர்நிலைபாடு அவசியமாகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் குருஜி சொன்ன பிறகுதான் ஜெயலலிதாவுக்கு இலங்கையில் நடப்பது தெரிகிறது என்பதிலிருந்தே அவரைப் புரிந்துகொள்ளலாம். அவர் எந்நாளும் தமிழ் இன உணர்வின் விரோதி. நிச்சயிக்கப்பட்ட எதிரி. இதனாலேயே ஜெயலலிதாவை வீழ்த்துவதும் சுலபம். ஆனால் கருணாநிதி சொந்த வீட்டுக்குள் இருந்து காட்டிக்கொடுத்து கழுத்தறுக்கும் துரோகி. அவரை வீழ்த்துவதும் சிரமம். அவர்தான் முதலில் கருவருக்கப்பட வேண்டும். கொளத்தூர் மணி சொன்னதைப்போல ‘கறுப்பனைக் கட்டி வைத்து அடிக்கிற அடியில், வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓட வேண்டும்’!