விடுபட்டவை 04 நவம்பர் 09

இன்று இணையத்தை பயன்படுத்துபவர்களில் குறைந்தது, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் எப்படியும் 50 விழுக்காடாவது இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் வலைப்பக்கத்திற்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்களின் தேடு வார்த்தையைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இதற்கு முன்பு இப்படி தேடு பொறிகள் மூலம் தங்களின் தளத்துக்கு வருபவர்களைப் பற்றி பலரும் எழுதி இருப்பதை நாம் படித்திருப்போம். ஆனால் என் விசயத்தில் இது கொஞ்சம் வேற மாதிரியாக இருக்கு. விடுபட்டவை- க்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்கள் எந்த வார்த்தையை தெரியுமா அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். ”பேய்”. ஆமாங்க.. அப்படித்தான் அலக்ஸா தளம் சொல்கிறது. என்ன தான் மேற்படிப்பு படித்தாலும் மக்களுக்கு சின்ன வயதில் கற்பிக்கப்பட்ட கற்பிதங்களை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. 🙁

—-

டீல் நோ டீல்- சன் டிவில் புதிய விளையாட்டு நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். எனக்கென்னமோ.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரிஷியை பிடிக்கவில்லை. மேலும் கொஞ்சம் கூட பொது அறிவு தளத்தில் இயங்காமல் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை முன்னிருத்தி இயங்கும் இந்த ஷோ எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

டொரென்ட்(torrent) பற்றி இன்னும் பலருக்கு விபரம் போதவில்லை. மேலும் புதியதாக டொரென்ட் பைல் உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. நான் பல முறை முயன்றும் தோல்வியே மிஞ்சுகிறது. பிட்-டொரென்ட், யு-டொரென்ட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதும் தெரியவில்லை. இரண்டிலும் புதிய பைலை உருவக்குவதில் வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன். விபரம் தெரிந்த நண்பர்கள்.. தெளிவாகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் பதிவு எழுதினால் நானும், விபரம் தெரியாதவர்கள் பலரும் பயன் அடைவோம்.

அதே மாதிரி.. விக்கிபீடியா-வில் நம்மவர்களின் பங்கு மிகவும் குறைவு. வலைப்பதிவுகளில் எழுதி வரும் ஒவ்வொரு பதிவரும் தங்களின் சொந்த ஊர்கள் பற்றி மட்டும் அங்கே எழுதினாலே.. சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம். பதிவர்கள் கொஞ்சம் முயலவேண்டும். இது அடுத்த தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து. அதுபோல.. விக்கி-யில் பயங்கரமான கொடுந்தமிழாக (நம்மில் பலரும் அறிந்திடாத புதிய சொற்கள்) இருக்கிறது. பல வார்த்தைகளுக்கு பொருள் விளங்குவதே இல்லை. தமிழ் விக்கிபீடியாவில்.. இயங்குவதற்கு ஆங்கில வழி பட்டன்களையும் வைக்கலாம் (ஆர்-குட் போல). விக்கியின் மூத்த பயனர்கள் கவனத்தில் கொண்டால் நல்லது.


Comments

11 responses to “விடுபட்டவை 04 நவம்பர் 09”

  1. க்கு தேடு பொறிகள் மூலம் வருகின்றவர்கள் எந்த வார்த்தையை தெரியுமா அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள். ”பேய்”. ஆமாங்க.. அப்படித்தான் அலக்ஸா தளம் சொல்கிறது. என்ன தான் மேற்படிப்பு படித்தாலும் மக்களுக்கு சின்ன வயதில் கற்பிக்கப்பட்ட கற்பிதங்களை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. &&&&&&&&&&&&&&&&&&&

    ஒரு வேளை மேக்கப் இல்லாத தமிழ் நடிகைகளை தேடியிருப்பார்களோ ?

    டோரண்ட் ஏன் தேவை உங்களுக்கு ? நல்ல படங்களை டவுண்லோட் செய்யவேண்டுமா ? உங்கள் தேவையை சொல்லுங்கள். டோரண்ட் இல்லாமலேயே இணையத்தில் முற்றுமுழுதாக இயங்கமுடியும்.

    விக்கியில் அனைவரும் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற அறைகூவலை ஒரு விட்ஜெட் ஆக எழுதி அனைத்து வலைப்பூக்களிலும் வைத்தால் தான் ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது கிடைக்கும்…

  2. பரிந்துரையில் ஓட்டு போட்டுட்டேனப்பு.

  3. kuppan_yahoo Avatar
    kuppan_yahoo

    nice post, rishi programe should be failure, if we see the advt , we can make out.

    I have contributed little to Wikipedia (madippakkam).

  4. //அதே மாதிரி.. விக்கிபீடியா-வில் நம்மவர்களின் பங்கு மிகவும் குறைவு. வலைப்பதிவுகளில் எழுதி வரும் ஒவ்வொரு பதிவரும் தங்களின் சொந்த ஊர்கள் பற்றி மட்டும் அங்கே எழுதினாலே.. சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம். பதிவர்கள் கொஞ்சம் முயலவேண்டும்.//

    நலமா பாரதி., உங்களை ஜெயா டிவில் வலைப்பதிவு பற்றி நேர்காணல் ஒன்றில் பார்த்த பிறகு இப்போதுதான் உங்களை பார்க்கிறேன்.

    சரியாச் சொன்னீ்ங்க பாரதி, சிலவிசயங்களை விக்கியில் தேடும்போது அதைப்பத்தி யாரும் எழுதலன்னு வந்தா ரொம்ப வருத்தமா இருக்கும். நானும் இனி என்னால் முடிந்ததை எழுதலாம்னு இருக்கேன்

  5. //சுமார் ஆயிரம் புதிய கட்டுரைகள் விக்கிபீடியாவுக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம்//

    உண்மைதான்..

  6. Torrent வந்து திருட்டு VCD விற்பது வாங்குவது மாதிரி. P2P technology என்று சொன்னாலும் அங்கே கிடைப்பது எல்லாம் Copyrights இல்லாத சரக்குத்தான்(FYI).Anti-paparazzi law படி பார்த்தா தப்புதான். யாராவது கம்ப்ளைன்ட் செய்தால் இங்கே அமெரிக்காவில் புடுச்சிட்டு பொய் தட்டிருவானுக. நானும் எங்க ஊரை பற்றி இன்னும் Wiki-ல் எழுதலாமுன்னு நினைக்கிறேன், உங்க ஹெல்ப் தேவைப்படுமே.

  7. ரவிசங்கர் எழுதிய விக்கிப்பீடியா குறித்த விரிவான கட்டுரை ஒன்று 12 நவம்பர், 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியாகியிருக்கிறது. விக்கிப்பீடியா குறித்து அறிய நினைப்பவர்கள் வாசித்து பயன்பெறலாம்.

  8. தமிழ் விக்கிப்பீடியாவில் கொடுந்தமிழ் இருக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. சிலருக்கு புரியாதிருக்கும் என்பதை ஏற்கிறேன். பாலபாரதிக்குமா புரியலை ??????. சில இலங்கை சொற்கள், சில புதிய சொற்கள் ஆங்கிலத்திலேயே கேட்டு\சொல்லி பழகிய நமக்கு அது புதியது தான். உதாரணத்துக்கு டால்பின் என்று கேட்டு\சொல்லி பழகிய நமக்கு ஓங்கில் என்ற சொல் புதிதாக இருக்கும், ஆனால் அது தான் தமிழ் சொல். “River dolphin என்பதற்கு ஆற்று ஓங்கில் என ச. முகமது அலி” புதிய சொற்களை பேச்சுப்\உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவெடுக்கின்றனர். நாமும் நம் கருத்துக்களை அங்கு சொல்லலாம். அந்த கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தால் அதன் இணைப்பு இடப்பக்கத்தில் “ஏனைய மொழிகள்” என்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். விடுபட்டிருந்தால் நாம் இணைக்கலாம். இணையத்தில் தமிழில் எழுத்தெரிந்தவர்கள் குறைந்தது ஒரு பத்தி (5 வரி) கட்டுரையாவது எழுதலாம், (கொஞ்சம் கொஞ்சமா அதை பிறகு மெருகேற்றலாம்) அல்லது மற்ற கட்டுரைகளிலுள்ள பிழைகளை திருத்தலாம் அல்லது படங்கள் இணைக்கலாம்.

    ” ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும் “

  9. //டொரென்ட்(torrent) பற்றி இன்னும் பலருக்கு விபரம் போதவில்லை. மேலும் புதியதாக டொரென்ட் பைல் உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.//

    Twitter-ல உங்களுக்கு பதில் சொன்னேனே! அதை செஞ்சு பார்த்தீங்களா?

  10. Natkeeran Avatar
    Natkeeran

    உங்களைப் போன்றோரின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நிச்சியம் தேவை. விக்கியை மேம்படுத்த உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *