கட்டையில போக.., பாடையில் போக.. கேட்டிருக்கோம்- ‘ஏர்ல போக’..தெரியுமா?

பத்திரிக்கையில் குப்பை கொட்டி பழகிய நான் தற்போது விஷ்வல் மீடியா ஒன்றில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறேன். பணிக்கு போக ஆரம்பித்த இரண்டாவது நாள்.. அலுவகத்தில் பலரும் ‘ஏர் போக’ என்று திட்டிக்கொண்டார்கள்.

முதன்முதலில் அப்படியான ஒரு வசவு வார்த்தையை நான் கேட்கிறேன். ஆனால் திட்டியவரும் சரி, திட்டு வாங்கியவரும் சரி.. முகத்தியில் உணர்ச்சியற்று அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுவதையும் கண்டு நிறையவே குழம்பிப்போனேன். ‘கட்டையில போக..’, ‘பாடையில் போக..’, என்று திட்டிக்கொள்ளுபவர்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு ‘ஏர்ல போக’ என்ற சொல்லே புதிதாக இருந்தது.

என் சந்தேகத்தை சீனியர் ஒருவரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னார்..’ அது கெட்ட வார்த்தை இல்ல..வீடியோவில் பதிவு செய்யப்பட்ட ஒரு விசயம் ஒளிபரப்பு ஆகிவிடுவதைத் தான் ‘AIR-ல் போவது’ என்று சொல்கிறோம் என்றார். நான் அசடு வழிய சீனியரைப் பார்த்து சிரித்தேன்.

வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புதிய தளத்திற்கு செல்லும் போதும் புதிதாய் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டே இருக்கிறது.

இன்னும்.. என் விஷ்வல் மீடியா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு.. நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. எழுதுகிறேன்.


Comments

10 responses to “கட்டையில போக.., பாடையில் போக.. கேட்டிருக்கோம்- ‘ஏர்ல போக’..தெரியுமா?”

  1. புதுத்துறையில் வெற்றிபெற வாழ்த்து(க்)கள்

  2. ஏர்ல போக

  3. வெற்றி Avatar
    வெற்றி

    பாலபாரதி,

    /* இன்னும்.. என் விஷ்வல் மீடியா அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு.. நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. எழுதுகிறேன். */

    உங்கள் அனுபவங்கள் எங்களில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கலாம். கட்டாயம் எழுதுங்கள்.

  4. விஷுவல் மீடியாவில் பணியாற்றும் நண்பன் ஒருவனிடம் ஒரு செய்தி குறித்து பேசிக்கொண்டிருந்தபோது உன்னால முடிஞ்சா ஒரு Bite ஆவது குடேன் பார்க்கலாம் என்றான். இதென்ன பெரிய விஷயம் என்று அவன் கையை பிடித்து நச்சுன்னு கடித்து வைத்தேன். அலறிக்கொண்டே ஓடியவன் அதன் பின்னர் என் தொடர்பில் இல்லை. உண்மையிலேயே Bite என்ற சொல்லுக்கு உங்கள் அகராதியில் வேறு ஏதாவது பொருள் இருக்கிறதா என்ன?

  5. புது வேலையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

  6. அண்ணன் பாலா சமூக பதிவுகளை குறைத்து விட்டாரா..? கவிஜை, முன்னாடி பேக் நவீனத்துவ புலவராக அவதாரம் எல்லாம் எடுத்தவராச்சே..

  7. /// அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கு ///
    காத்திருக்கிறோம். அடிக்கடி இப்படி சிறு பதிவுகளாவது எழுதுங்கள்.

  8. Bala Subra Avatar
    Bala Subra

    🙂

  9. புது வேலை .. புது வார்த்தை ..
    அசத்துங்க பாலா ..

  10. சிவஞானம்ஜி Avatar
    சிவஞானம்ஜி

    அந்த நாள் ஞாபகம் வந்ததோ வந்ததோ நண்பனே………!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *