போன பதிவில் ஏர்-லில் போவது குறித்து சொல்லி இருந்தேன். அதில் பைட்(BYTE) பற்றி தம்பி லக்கி கேட்டிருந்தார். நானும் கோட இந்த சொல்லாடலை டெல்லியில் பணியற்றிய போது தொலைக்காட்சி நிருபர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போதிலிருந்து.. பைட் என்றால் பேட்டி எடுபது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.(இபோது வரை இதன் பொருள் குறித்து ஆங்கில- தமிழ் அகரதியில் பார்க்க வில்லை) ஆனால்.. புதிய இடத்தில் வேலைக்கு சேரும் வரை.. புழக்கத்தில் பைட் என்பதை எதற்கு குறிபிடுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.

ஒருவரை பேட்டி எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடங்களுக்கு மேல் அவர் பேசும் ஒரு கருத்தை அபடியே ஒளிபரப நேரம் இருக்கது. அதனால்.. அவர் பேச்சின் முக்கிய சாரத்தை மட்டும்.. தனியாக வெட்டி காட்டுதைத்தான் பைட் என்று சொல்லுகிறார்கள்.

உதாரணமாக மேலே இருக்கும் இந்த விடியோ.. நான் பேசி பதிவு செய்தது. 1.35 வினாடிகள் ஓடக்கூடிய இதில்.. இந்த பதிவுக்கு தேவையான செய்தி.. வெறும் 25 வினாடிகளில் அடங்கி விடுவதல்.. அதை தனியாக் பிரித்து கீழே கொடுத்திருக்கிறேன்.

இந்த இரண்டு வீடியோக்களையும் பர்த்தால்.. தொலைக்காட்சி நபர்கள் சொல்லும் பைட் குறித்து அறிந்து கொள்ளலாம்.


Comments

12 responses to “BYTE என்றால் என்ன?”

  1. பாலபாரதி,

    பகிர்வுக்கு நன்றி!

    ஆனால், வீடியோ வேலை செய்யவில்லை. கொஞ்சம் பார்த்து சரி செய்யுங்களேன்.

    நன்றி!

  2. அப்படியா? எனக்கு வேலை செய்கிறது.

    இரண்டு விடியோக்களுக்கான சுட்டி இதோ..

    http://www.youtube.com/watch?v=w_M7U8GiJtQ

    http://www.youtube.com/watch?v=rTjqJ999ubM

  3. //இந்த இரண்டு வீடியோக்களையும் பர்த்தால்.. தொலைக்காட்சி நபர்கள் சொல்லும் பைட் குறித்து அறிந்து கொள்ளலாம்.//

    எனக்கொன்னு தெரியுது…
    இன்னும் உங்களுக்கு byte-ஐ பத்தி ஒன்னும் தெரியலைங்கிறதைத் தான் இப்படி சொல்லியிருக்கிங்கன்னு புரியுது.

    video-வைப் போடுங்க அண்ணாச்சி!

  4. நீங்க கொடுத்த சுட்டி வேலை செய்கிறது. மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    மிக்க நன்றி!

    (இந்த தளத்தில் வீடியோ Frame வரவே இல்லை. வெறும் ஒரு காலி பெட்டிதான் தெரிகிறது. என்ன காரணம் என தெரியவில்லை)

  5. விளங்கிடிச்ங்க 🙂

  6. சிவஞானம்ஜி Avatar
    சிவஞானம்ஜி

    //1.35 வினாடிகள் ஓடக்கூடிய இதை வெறும் 25 வினாடிகளில் //

    இதுதான் செம பைட்(கடி)(bite)ங்க!

  7. Newsbite அப்படிங்கற வார்த்தை மறுவி bite(பைட்) அப்படிங்கறாங்களோ?
    மிட்டாயை சின்ன கடி கடிச்சால் தெரியாதா சுவை அதே மாதிரி தான் 😉

    கணனில BYTEன்னா வேற அர்த்தம்(8 bits).

  8. ranjith Avatar
    ranjith

    it was a very good practical explanation. thanks for the info..

  9. கோரமான முகத்தை பார்த்து பயப்படவில்லை.!!
    அடுத்து இந்த வீடியோ எடுக்கும் போது அந்த மானிடர் வெளிச்சம் மூக்குக்கண்ணாடியில் பட்டு ஆள் முகத்தை பார்க்கவிடாமல் தடுக்குதே அதை எப்படி தடுக்குது என்று சொன்னால் சௌகரியமாக இருக்கும்.:-)

  10. மக்களே என்னை மாதிரி அலுவலகத்தில் யூ டுயூப் தடுப்பில் இருந்தால்.. பாலா கொடுத்த சுட்டியையை keepvid போட்டு தரவிரக்கி flv பிளேயர் மூலம் பார்க்கவும்.
    இதை அப்படித்தான் பார்த்தேன்.

  11. பைட் என்பது மையக்கருத்தை மையப்படுத்துவது. நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் சரிதான். அதாவது ஒரு பைட் என்பது குறைந்த பட்சம் 20 வினாடிகள். முக்கியமான தலைவர்களின் பேச்சு/பேட்டி என்றால் ஒரு நிமிடம் கூட போகும். இதையும் பைட் என்றுதான் சொல்வார்கள். மும்பையில் குண்டு வெடிப்பு என்று வைத்துக்கொள்வோம். அந்த பைட் 1.30 நிமிடம் கூட போகும். இஸ்ரேல் குண்டு வெடிப்பு என்றால் 20 வினாடிதான். இதெல்லாம் மீடியா மேட்டர். உங்களுக்காக.

    http://aadumaadu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *