ஒரு வருடங்களுக்கு மேலாக யோசித்து யோசித்து.. கடைசியாக திரட்டிகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இனி விடுபட்டவையை .. இங்கு நேரடியாகவோ அல்லது ரீடர் மூலமாகவோ பார்த்துக்கொள்ளலாம்.

என்னிக்கோ ஒன்னு எழுதுறோம்.. அதையும் தூக்கிட்டுப் போய் திரட்டியில் இணைக்க வேண்டியதிருக்கு.. பல சமயம்.. நெட் படுத்தும் பாட்டில் இணைக்க முடியாமல் திரும்பி வரும் படி ஆகிடுது.

சரி.. கொஞ்ச நாட்கள் இப்படியும் இருந்து பார்ப்போம்.

இலக்கிய(!) கட்டுரைகளை ஆரம்பத்தில் படிக்கும் போது இருக்கும் மோகம் சில நாட்கள் கழித்து படிக்கும் போது இருப்பதில்லை. எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா.. இல்லை எல்லோருக்குமான்னு தெரியலை. அதே சமயம் புனைவுகள் அப்படி தோன்றுவதில்லை.

உதா= எஸ்ரா விகடனில் எழுதிய தொடர்களை எழுதிய போது படிக்கும் போது நன்றாக இருந்தது. பின் அது தொகுப்பாக வந்தபோதும் கூஉட பிடித்து தான் இருந்தது. ஒரு வருடங்கழித்து திரும்பவும் அந்த நூல்களை எடுத்தால் ஒரு கட்டுரையைக்கூட முழுமையாக வாசிக்க முடியவில்லை. இது ஏதோ எஸ்ரா எழுத்தில் மட்டும் என்று மற்றவர்கள் சந்தோசப் பட வேண்டாம். ஜெமோ, சாரு, மனுஷ்ய புத்திரன் என அது எந்த எலக்கியவியாதிக்காரர்கள் எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும் அப்படித்தான் தோன்றுகிறது.

இனி இந்த ஆட்களின் கட்டுரைகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

—-

பஸ்ஸுல எழுதியது..

நான்: பொதுவா.. எல்லோரும் சொம்பை தூக்கிட்டு வரானுங்கன்னு சொல்லும் போது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

எங்களூரில் பஞ்சாயத்துக்கள் வீரபத்திரன் கோவில் வாசலிலோ, பத்திரகாளி கோவில் மண்டபத்திலோ தான் நடக்கும்..

காலைக்கடன்களை கழிக்க போகும் போதும் எவனும் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. ஏனெனில் எங்களூரில் தெற்கு தெரு பக்கம் ஒரு கடற்கரையை அதற்கென ஒதுக்கி வைத்திருந்தார்கள்.. தமிழ் சினிமா பார்த்து தான் சொம்பின் மகத்துவம் புரிந்தது.. பிறகு வலையுலகம் வந்தபின்..

சங்கர நாராயணன் - அப்படியே சொம்புகளை நசுங்க விடாமல் பார்த்துக்கொள்வதன் ‘முக்கிய’த்துவத்தையும் :))

bala bharathi - ஆமா சங்கர் அண்ணே, அப்படியே பிரச்சனை தீவிரமா இருக்கையில் சொம்பை லாக்கருக்குள் வைத்து பூட்டிவிட்டு, பின் பிரச்சனை திசை மாறியதும் அதை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு மாங்குயிலே பூங்குயிலே என்று வெளியே வருபவர்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. :))


Comments

4 responses to “விடுபட்டவை 04 ஜூன்2010”

  1. சொம்பெல்லாம் பித்த்த்த்த்த்தளைச் சொம்பாகுமா?

  2. புதிய பதிவிட்டால் மெயிலுக்கு வந்து சேரும்படி செய்தால் நலமுண்டாம்.. செய்து கொடுக்கலாமே..

  3. திரட்டிகளை எல்லாவற்றையும் தவிற்க்காமல் தமிலிஷ்
    மட்டும்.
    தங்களது பதிவுகளை இணைத்தால் எல்லோருக்கும்ம் கும் தங்களது பதிவு சேரும்
    மேலும் தமிழ் மணத் தானியங்கியாக உங்களது பதிவுக்ளை
    திலட்டிவிடும்.
    எப்பொழுதாவது தாங்கள் எழுதுவதால் தற்போது ஒய்ந்து இரு
    இருக்கும் பிரச்சனைக்கு தாங்கள் போட்ட பதிவு ஒரு நல்ல
    மருந்தாக மேலும் இந்த பிரச்சனையை பற்றி நல்ல தெளிவு கிடைத்தது

  4. இஈசு Avatar
    இஈசு

    உங்களுக்கு அறிவு இல்லாமல் போய்விட்டால் எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் ?

    பரபரப்பாக படிக்கப்பட்ட பல பிளாக்குகள் இன்று குப்பை என மதிக்கபடுகிறன, உதா. உங்களுடையது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *