இங்கே இடம் பெற்றிருக்கும் அனேக படங்களை என் கைபேசி வழியே எடுக்கப்பட்டவை. சில புதியவை, சில பழையது. சும்மா ஒரு பதிவு போடுவோமே என்று தோன்றியதால் பதிவு செய்து வைக்கிறேன்.

FILE COPY
மூன்று வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் போய் இருந்த போது கண்டகாட்சியினை தான் மேலே பார்க்கிறீர்கள். இது பற்றி அப்போதே தேவஸ்தானத்திலும்.. சமூக விஞ்ஞானத்தை போதிப்பதாக சொல்லும் மார்சிஸ்ட்கட்சி நண்பர்களிடமும் பேசி விட்டு வந்திருந்தேன். கடந்த வாரம் ஒரு நாள் பயணமாக ராமேஸ்வரம் போக மீண்டும் கிடைத்த வாய்ப்பில் கோவிலுக்குள் சென்று பார்த்தால்.. சில இடங்களில் சுண்ணாம்பு காரை பெயர்ந்து, அந்த அறிவிப்பு அப்படியே இருக்கிறது. (மேலே பார்ப்பது பழைய படம்FILE COPY 🙂 )
இது பற்றி அப்போது எழுதிய பதிவு http://balabharathi.blogspot.com/2007/03/no-comments.html
மேலும் தொடர்புடைய பதிவுகள்.
நண்பர் அசுரன் http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_29.html
அண்ணன் திரு http://aalamaram.blogspot.com/2007/03/blog-post_29.html
—

அறிவிப்பு பலகை 🙂
எங்கள் தெரு வழியாக கெந்தமாதன பர்வதம் போவதற்கான சுருக்கு வழி என்பதால்.. பலரும் அங்கு போவதற்கு இதையே பயன்படுத்துவார்கள். கெந்தமாதன பர்வதத்திற்கு இதிகாசப்படி ‘ராமர்பாதம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. அதை காட்டும் ஓர் அறிவிப்பு பலகை. இந்த பலகையின் ஸ்பான்சர் யாரென பாருங்கள். 🙂
—-

எங்கள் வீட்டின் மாடியில் இருந்து எங்கள் வீதி
ராமேஸ்வரத்தில் முன்னை விட தங்கும் விடுதிகள் சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்துவிட்டதை பார்க்க முடிந்தது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தாலும், ஒரு நகராட்சியின் நிலைக்கு வருமானம் உள்ள இடமாகவே இருக்கிறது ஊர். ஆனால் மக்களில் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் போன்றவை இன்றும் அமைக்கப்படாமல் இருக்கிறது. எப்போது விடிவு காலம் ஏற்படுமோ தெரியவில்லை.
—

சொந்த மண்ணின் நண்பர்களான செந்தில், மோகன்
பிறந்து வளர்ந்த ஊரில் இருக்கும் நண்பர்கள் எலோரையும் பார்க்க முடியாவிட்டாலும் சிலரை சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எல்லோரின் முகத்துக்கு நேரேயும் கொசுவத்தி சுற்றியதை தவிர்க்க முடியவில்லை.
—

பனித்துளி
நாங்களும் போட்டோ எடுப்போம்னு காட்ட, இந்த படம். 🙂
—

பிம்பம்
நாங்களும் போட்டோ எடுப்போம்னு காட்டத்தான் , இந்த படமும். 🙂
மேலே காணும் படம் எங்கே எடுக்கப்பட்டதுன்னு சொல்லுங்க பார்ப்போம். அட நம்புங்க.. சென்னையில் தான் எடுக்கப்பட்டது. வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரசாந்த் டவர் தான் இது. 🙂
—-

குதிர்
குதிரு மாதிரி வளர்ந்திருக்கியேடான்னு திட்டுறதை கேட்டு இருப்போம் அல்லது திட்டும் வாங்கி இருப்போம். இதோ இது தான் குதிர். இதற்குள் தான் விதை நெல் போட்டு வைத்திருப்பார்கள்.
—

நாயின் ஊனம்
மனிதர்கள் மட்டுமல்ல விலங்கிலும் கூட ஊனம் உண்டு என்பதை சொல்லும் காட்சி இது. மூன்றே கால் காலுடன் இருக்கும் இந்த நாய் படம் ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்டது.
—

டாய்லெட்டில் மின்விசிறி
வழக்கமாக ரெயிலில் இரண்டாம் வகுப்பிலோ, உடன் டிக்கேட் எடுத்தோ பயணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை எனக்கு டூடயர் ஏசியில் டிக்கேட் போட்டு கொடுத்தார்கள். உள்ளே படுத்தால் செம குளிர், அவர்கள் கொடுத்த கம்பளி, போர்வை எல்லாவற்றையும் தலை முதல் கால் வரை இழுத்துவிட்டுக்கொண்டு படுத்துக்கிடந்தேன். நடு இரவில் டாய்லெட் போனால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. எப்பவுமே சுத்தப்படுத்தபடாமல் நாறிக்கிடப்பதையே பார்த்துப் பழகிய கண்களுக்கு ஏசி கோச்சின் டாய்லெட்டை பார்த்ததும் தலைசுற்றியது என்னவோ உண்மை. (உங்களில் பலருக்கும் இது அறிந்த செய்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது புதுசு) மின்விசிறி, வண்டியை இழுத்து நிறுத்த செயின் என்று தடபுடலாக இருந்தது. ம்.. பணம் இருந்தால் தான் எங்குமே மதிப்பு போலிருக்கு…!
—

நானே தான்
சமீபத்தில் எடுக்கப்பட்ட என் படம் இது. 🙂
16 Responses to விடுபட்டவை 15/06/10 (சில புகைப்படங்கள்)