தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?

தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார்.

என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்.. என்று ஆங்கிலம் தவிர்த்த ஏனைய எல்லா மொழி எழுதிகளும் keystrokeகளை monitor என்பதை செய்யும்.

அப்போது தான் ஆங்கிலத்திற்கு வடிவமைக்கப்பட்ட கணிணியின் கீபோர்ட் எழுத்தில் ‘A’
அடிக்கும் போது ‘à®…’ என்ற எழுத்தை மாற்ற முடியும். இது தமிழ் எழுதி என்று அல்ல..
ஆங்கிலம்(ரோமன்) தவிர்த்த ஏனைய அனைத்து மொழி எழுதிகளுக்குமே பொருந்தும்.

நிலைமை இப்படி இருக்க.. அண்ணாச்சி.. தமிழ் எழுதிகள் நம் பாஸ்வேர்ட்டுகளை களவு
செய்வதாக சொல்லி இருப்பது செமகாமெடி. (இவரின் டெம்ளேட் டூல் பார் எங்கிருந்து
களவாடப்பட்டது என்பதை விளக்க என்னிடம் தனி ஆதாரம் உண்டு)

பலநாட்கள் உறக்கம் தொலைத்து, பலரின் முயற்சியால் உருவாகப்பட்டது தான் தமிழில் நாம் பயன்படுத்தி வரும் எழுதிகள். போகின்ற போக்கில்.. அந்த உழைப்பின் மீது சேற்றை வாறி இரைப்பதற்கு முன்.. கொஞ்சம் யோசிக்க வேண்டும் அய்யா. நீங்கள் உணர்ந்த/ சோதித்துப் பார்த்த ”அந்த” எழுதி, பயனர்களின் பாஸ்வேர்ட்டுகளை திருடுவதாக ஆதாரத்துடன் பொதுவில் வைக்க முடியுமா? அதற்கு நெஞ்சுரம் உண்டா? (இது டெம்ளேட் டூல்பார் சமாச்சாரம்
இல்லீங்கோ..)

keystrokeகளை monitor செய்யாமல் எந்த மொழி(ஆங்கிலம்/ரோமன் தவிர்த்து) எழுதிகளும் இயங்காது என்பது நுட்பம் தெரிந்த எல்லோருக்குமே தெரியும்.

இதனை வைத்துக்கொண்டு தமிழ் எழுதிகள் KEY LOGGER போல செயல்படுகிறது என்று
வதந்தியை பரப்புவது எந்த விதத்தில் நியாயம். பயனருக்கு தெரியாமல் தமிழ் எழுதி அவரின் ரகசியங்களை இணையத்தில் இணைத்திருக்கும் போது யாருக்கு மெயில் அனுப்புகிறது?
சொல்ல முடியுமா?

இலவசமாக கொடுக்கப்படும் எழுதிகள் என்பதால் தானே இந்த இளக்காரம். பலரின் உழைப்பை காலுக்கு கீழே போட்டு மிதிக்கும் மனோபாவம்.

இன்று ஏகப்பட்ட ஆண்டி வைரஸ்/ ஆண்டி ஸ்பைவேர்கள் இருக்கும் போது.. இது போன்ற சமாச்சாரங்கள் சாத்தியமில்லை.

நான் இதுவரையில்.. இந்திய அரசு கொடுத்த எழுதி, முரசு அஞ்சல், இளங்கோ எழுதி, பஹாரா எழுதி, எ-கலப்பை, NHM எழுதி… என்று பயன்படுத்தி வந்திருக்கிறேன். என்
பாஸ்வேர்ட்டுகள் என்றும் களவு போகவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தைரியம் இருந்தால்.. தமிழ் எழுதிகள்/எந்த எழுதி KEY LOGGER போல செயல் படுகிறது
என்பதை ஆதாரத்துடன் எழுதுங்கள். ஒருவேளை ஆதாரம் இல்லை எனில் இப்படி
கப்சாக்களை அவிழ்ப்பதை நிறுத்திக்கொண்டு போங்கள். பயனர்களின் வயற்றில் பீதியை
வளர்க்கவேண்டாம்.

ஹிட் வரவேண்டும் என்ற பரபரப்புக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?


Comments

7 responses to “தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?”

  1. பாலா , வசந்தம் ரவி க்கு தந்த பின்னூட்டத்தை இங்கு சேமிக்கிறேன்.

    வணக்கம் வசந்தம் ரவி,

    நீங்கள் மறைமுகமாக கூறும் அந்த மென்பொருள் மட்டுமல்ல.எல்லா தட்டச்சு மென்பொருள்களும் keystroke ஐ பின்னணியாக கொண்டே இயங்குகின்றன.எந்த தட்டச்சு மென்பொருளை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் கூட கணிணி keystroke ஐ கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.இதை கொண்டே ஆங்கிலத்தில் தட்டச்சுதல் கூட நிகழ்கின்றது.அப்படி இருக்க தமிழ் மென்பொருள்கள் மட்டும் இந்த வேலை செய்வதாக சொல்வது மூடத்தனம்.

    keystroke கவனிப்பு என்பது வேறு keylogger என்பது வேறு , என்பது தொழில் நுட்பம் அறிந்தவராக சொல்லிக்கொள்ளும் நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பு இல்லை.keystroke ஐ வைத்து keylog கோப்பை உருவக்கி இணைய இணைப்பு மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பும்
    மென்பொருள்களைதான் keylogger – spyware என்பது வழக்கம் , அப்படி இருக்க தமிழ் எழுதிகளை அந்த பட்டியலில் சேரத்தது வேதனை,

    நீங்கள் குறிப்பிடுவதுப்போல் தமிழ் எழுதிகள் keylogger களாக செயல்படுகிறது என்றால் , இத்தனை நாள் என் McAfee SecurityCenter ஓ , Windows Defender ஓ பொத்திக்கொண்டு இருந்திருக்காது அம்மென்பொருளை கொத்தி குதறிப் போட்டிருக்கும்.

    இத்தனையையும் தாண்டி , நீங்கள் குறிப்பிடுவதுப்போல் தமிழ் எழுதிகள் keylogger களாக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரம் இருப்பின் பொதுவில் வெளியிடுங்கள்.அதைவிடுத்து.ஆதாரம் இருக்கு ஆனா வெளியிட மாட்டேன் பெயர் சொல்ல மாட்டேன் என்பது ஓடி ஒளிந்துக்கொள்ளும் பேடித்தனம்.

  2. ரமணா Avatar
    ரமணா

    நீண்டதொரு விளக்கத்திற்கு நன்றி பாலாபாரதி.

  3. யெஸ். பாலபாரதி (இது yes ஆ?)

    வசந்தம் ரவி போட்ட இடுகையில் உண்மைகள் குறைவாகவே (பொய் எனறு சொல்லவது நாகரிகம் அல்ல) உள்ளன என்பது என்கருத்து.

    உங்களது இடுகை உண்மைக்கு அண்மையில் நிற்கிறது சில தவறுகளுடன். அத்தவறுகள் இடுகையின் கருத்தை மாற்றாதெனினும் இங்கே கூறவிளைகிறேன்.

    முதலில் Keystroke என்றால்

    Definitions of Keystroke on the Web:

    * A keystroke is when you type a character using a keyboard.
    http://www.folly.co.uk/

    * The action of depressing a single key on a keyboard.
    http://www.fonts.com/AboutFonts/Glossary/_glossary_K.htm

    * This is when a key on the keyboard is pressed.
    http://www.davidgould.com/Glossary/Glossary.htm

    * A keystroke refers to the pressing of a button on a keyboard that is connected to some form of digital computer.
    en.wikipedia.org/wiki/Keystroke

    அதாவது ஆங்கில/ ரோமனோ அல்லது எந்த மொழியோ எழுதிகளெல்லாம் keystroke இனை எடுத்தே ஆகவேண்டும். எழுதிகள் மட்டுமல்ல, கணினியே keystroke இல்தான் தனக்கான அனைத்து கட்டளைகளுயும் விசைப்பலகையிலிருந்து பெற்றுக் கொள்கிறது.

    keystroke பற்றி நிறையவே எழுதலாம். ஆனால் இவ்விடுகைக்கான பின்னூட்டத்திற்கு அது பொருத்தமானதல்ல.

    உங்கள் எதிர் இடுகைக்கு நன்றிகள் யெஸ்.?? பாலபாரதி

  4. இன்னொரு பின்னூட்டம்,

    பாலபாரதி..

    //நான் இதுவரையில்.. இந்திய அரசு கொடுத்த எழுதி, முரசு அஞ்சல், இளங்கோ எழுதி, பஹாரா எழுதி, எ-கலப்பை, NHM எழுதி… என்று பயன்படுத்தி வந்திருக்கிறேன். என்
    பாஸ்வேர்ட்டுகள் என்றும் களவு போகவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.//

    இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். உங்கள் பாஸ்வேர்டுகள் களவு போகவில்லை என்பதால் மற்ற அனைவருக்கும் களவு போகாது என்று சொல்ல வருகிறீர்களா? (மேலும் பாஸ்வேர்டுகள் களவு போனா அவங்க வந்து சொல்லவா போறாங்க? பாஸ்வேர்டை திருடி உங்க அக்கவுண்டில் இருக்கிற உள்ளடக்கங்களைப் பார்த்து நீங்க எந்தெந்த விடயங்களில விருப்பம் வைத்திருக்கிறீங்க எனப்பார்த்து அதற்கேற்றவாறு உங்களுக்கான் விளம்பரங்களை தருபவர்கள் கூட உள்ளனர். இதையே சட்டப்படி செய்வது Microsoft, Google மற்றும் Yahoo போன்றன.)

    எனக்கும்தான் இன்றுவரை எனது யாகூ அக்கவுண்டில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. ஆனால் என் நண்பர்கள் சிலர் தங்களது அக்கவுண்டை இழந்து தவித்திருக்கிறார்கள்.

    கணினியில், விசேடமாக இணையத்தினூடு களவு என்பது சாத்தியமான ஒன்றே. எனக்குக் களவு நடக்கவில்லையே என்பதற்காக இணையத்தில் களவே நடக்காது என் நினைப்பது நல்லதல்ல.

    எதற்கும் உங்கள் கணினியை நல்ல பாதுகாப்பு மென்பொருட்களால் கவசமிட்டுக்கொள்வதுதான் உங்களுக்கு நல்ம்.

    பி.கு: இப்பின்னூட்டம் வசந்தம் ரவியின் இடுகைக்கு ஆதரவானதல்ல. இதனால் வசந்தம் ரவியின் இடுகை உண்மையோ என யாரும் குழம்பவேண்டிய அவசியமில்லை.

  5. சத்தியமூர்த்தி Avatar
    சத்தியமூர்த்தி

    பாலாண்ணே அப்ப வசந்தம் ரவி சொல்லுறது எல்லாம் கப்ஸாவா?

  6. he wants to become no 1 blogger in terms of hits. so he do this kind of things.

  7. Karthikeyan Avatar
    Karthikeyan

    “புதிதாய் வளர்ந்து வரும் மென்பொருளால் தங்களது மென்பொருள் பயன்பாட்டில் பின் தங்கிவிட்டது என எண்ணும் ஏதேனும் பிற மென்பொருள் தயாரிப்பாளருக்காக கிளப்படும் வதந்தியா?” என மற்றவர்கள் சந்தேகப்படுற மாதிரி இருக்கு வசந்தம் ரவியின் பதிவு!.

    ஒருவேளை அப்படி இல்லை என்றாலும் வசந்தம் ரவியின் பதிவு அனாவசியமாக மற்ற தயாரிப்பளர்களுக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *