Tag: மந்திரச்சந்திப்பு

  • மந்திரச் சந்திப்பு 12

    மந்திரச்சந்திப்பு-12 மீண்டும் உருவமில்லாது வந்த குரலைக் கேட்டு, நடுங்கினான் அருள்வளன். “வளா, நீ அச்சப்படத்தேவை இல்லை.” என்றது அக்குரல். “சொல்லுறது எல்லாம் சரி. ஆனா.. ஆளைக்காணோமே.” “நான் தான் உன் முன்னாடியே இருப்பதாகச்சொல்கிறேனே” என்றது அந்த மெல்லியகுரல். “நீயும் சொல்லுற.. ஆன என்னுடைய கண்ணுக்கு எதுவுமே தெரியமாட்டேங்குதே..” “உன் அளவிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாயே.. கொஞ்சம் கீழே பார்” என்றது அந்தக்குரல். குழப்பமாக கீழே குனிந்து தேடினான். அந்த அறையின் நிலைப்படிக்கு அருகில் சின்னதாக ஓர் உருவம் தெரிந்தது. முதலில்…

  • மந்திரச்சந்திப்பு -11

    மந்திரச் சந்திப்பு -11 தலைகீழ் புஸ்வாணம் கதையில் வந்த அருள்வளனை சந்திக்க எண்ணிய நண்பர்கள் அவனை அழைத்தனர். அவனிருந்த அறைக்குள் உருவங்கள் ஏதுமற்று, குரல் மட்டும் கேட்கவும் பயந்து போன அவன் வீறிட்டு கத்தியபடி மயங்கிப்போனான். அவனது சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்தார் அவன் அம்மா. வெயிலில் வாடிய கீரைத்தண்டுபோல விழுந்து கிடந்தான் அருள்வளன். அவனை எடுத்து, மடியில் கிடத்தி, “அருளு.. அருளு..” என்று அழைத்தார். அவனிடம் அசைவில்லை. “ஏங்க.. அருளுப்பா..” என்று அவர் சத்தம்…

  • மந்திரச் சந்திப்பு – 10

    அம்மாவின் குரல் கேட்டதும் அறையின் வாசலுக்கு வந்தான் ஜான்சன். ஒரு பக்கெட் நிறைய துவைத்த துணிகளை உலர்த்தக் கொண்டு வந்திருந்தார் அவன் அம்மா. இவனைப் பார்த்ததும், “கொஞ்ச நாளாகவே உன் போக்கு சரியில்லையேடா.. எப்பப் பார்த்தாலும் ஓடி ஓடி இங்க வந்துடுற, என்னடா விஷயம்?” என்று கேட்டார். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா.. எவ்வளவு நேரம் தான் டிவியையே பார்த்துட்டு இருக்கிறது. அதுதான் இங்க வந்தா.. என் புக்ஸ் படிக்கலாம். கொஞ்சம் கிராப்ட் ஒர்க்கெல்லாம் செஞ்சு பார்க்கலாம். அதுக்குத்தான் மாடிக்கு…

  • மந்திரச் சந்திப்பு- 9

    முத்திரள் உருவம் வழியாக நண்பர்களின் சந்திப்பு பற்றியும், தான் பறந்த கதை எல்லாவற்றையும் ஜான்சனுக்குக் கூறியது காகிதப்பாப்பா. அதனிடம் தான் பறக்க ஒரு குழந்தை எழுத்தாளர் காரணம் என்று ஜான்சன் கூறியதும் வியந்துபோன அது, அந்த எழுந்த்தாளர் யார் என்று கேட்டது. “வாண்டுமாமா” என்றான் ஜான்சன். “என்னது வாண்டுமாமாவா?” ”ஆமா, குழந்தைகளுக்காக பல கதைகள் எழுதி இருக்காரே.. அவரே தான். காலத்தால் அழியாப் புகழ்பெற்ற அவரது கதைகளைப் போலவே அவரது பாத்திரப்படைப்புகளும் சாகாவரம் பெற்றவை. அவர் எழுதிய…

  • மந்தைரச் சந்திப்பு – 8

    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு விதித்த ஊரடங்கினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படியாவது உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர்களுக்கும் பேச்சு எழுந்தபோது, எல்லோரும் வீட்டுக்குள் இருந்துகொண்டு, வீதியில் கஷ்டப்படும் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொன்னது காகிதப்பாப்பா. எல்லோரும் ஆர்வமாக, “என்ன யோசனை?” என்று கேட்டனர். “என்னால் காற்றில் பறக்க முடியும். அதுவும் காற்று அண்ணன் நினைத்தால் எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் என்னைக்கொண்டு…