Tag: கடல்

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…

  • உலகம் கொண்டாடும் குட்டிக் கடற்கன்னி கதை தமிழில்!

    ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் – சிறுவர் இலக்கிய உலகில் பெரிய அளவில் போற்றப்படும் முக்கியமான படைப்பாளி. இவரது பல கதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே அனிமேஷன் படங்களாகவும், சினிமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. சிவரது படைப்புகளில் எல்லோரும் மறக்காமல் சொல்லுவது குட்டிக்கடற்கன்னி என்ற சிறிய நாவலைத்தான். இந்த உலகில் கடலைக்கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியாது. அந்தக்கடலில் நுரை பொங்கும் அலைகளையும் பார்த்திருப்போம். கடலின் நுரைகளுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது. அதுவொரு குட்டிக் கடற்கன்னியின் வாழ்க்கைக்கதை. கடலுக்குள் இருக்கும்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

      சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி…