Category: புகைப்படம்

  • தெரிந்ததும்.. தெரியாததும்- பீடி தொழில்

    என் சிறு வயதில் எங்க ஊரில் ஓர் அப்பத்தா பீடி புகைத்து பார்த்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் தாத்தாவோடு சேர்ந்து சுருட்டு புகைத்தாராம். அவரின் மறைவுக்குப் பின் பீடிக்கு மாறியவர் அப்பத்தா! குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பிடிகள் வரை புகைப்பார். ஆனாலும் அவருக்கு சளி கட்டியோ, இருமல் இருந்த மாதிரியோ நினைவில் இல்லை. ராமேசுரத்திற்கு சுற்றுலா வரும் உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய மக்கள் பலரும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் புகைத்து மகிழ்வதை பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியாவில்…

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • நீங்களும் உலக சினிமா விமர்சனம் எழுதலாம்..!

    டிஸ்கி: The Patient – படத்தின் கதையை படித்து வரும் போது நடு நடுவே.. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். சினிமாவில் பார்த்த அந்த காட்சியை நாம் எழுதும் போது எப்படி சொல்லவேண்டும் என்பதையே அப்படி கொடுத்திருக்கிறேன். பின்ன..  உலக சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது கொஞ்சம் உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை நினைவு படுத்தவே இக்குறிப்பு. — கதையின் நாயகன் ஒரு மருத்துவர். க்யூபாவைச் சேர்ந்தவன். பணக்காரக்குடும்பத்தின் வாரிசு என்றாலும், கம்யூனிஸ நாடான க்யூபாவில் பிறந்ததால் ஏழை…

  • விடுபட்டவை 15/06/10 (சில புகைப்படங்கள்)

    இங்கே இடம் பெற்றிருக்கும் அனேக படங்களை என் கைபேசி வழியே எடுக்கப்பட்டவை. சில புதியவை, சில பழையது. சும்மா ஒரு பதிவு போடுவோமே என்று தோன்றியதால் பதிவு செய்து வைக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் போய் இருந்த போது கண்டகாட்சியினை தான் மேலே பார்க்கிறீர்கள். இது பற்றி அப்போதே தேவஸ்தானத்திலும்.. சமூக விஞ்ஞானத்தை போதிப்பதாக சொல்லும் மார்சிஸ்ட்கட்சி நண்பர்களிடமும் பேசி விட்டு வந்திருந்தேன். கடந்த வாரம் ஒரு நாள் பயணமாக ராமேஸ்வரம் போக மீண்டும் கிடைத்த…