வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…


இனிய நண்பர்களே,

தேசம் முழுக்க நமது அண்டை நாட்டில் வாழும் தமிழ்ச் சகோதரர்களின் துயர் துடைக்க குரல்கள் ஒங்கி ஒலித்தவண்ணம் இருக்கும் போது வலைப்பதிவர்களாகிய நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்?

வீதியில் இறங்கி போராடவோ, கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு நடக்கவோ நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதனால் நமது ஆதரவுக் குரலை இயன்ற விதத்தில் ஒலிக்க முயற்சிக்கலாம்.

மேலே நீங்கள் பார்க்கும் படம் மடிந்து கொண்டிருக்கும் நம் அப்பாவி சகோதரர்களுக்கு ஆதரவுக் குரலாகவும் இந்திய அரசுக்கு கண்டனக் குரலாகவும் ஒலிக்கட்டும்.

இன உணர்வுடைய ஒவ்வொரு தமிழ் வலைப்பதிவரும் இப்படத்தை தங்களது வலைப்பதிவில் சேர்த்து நம் ஆதரவை வெளிப்படுத்துவோம். இதற்கான code கீழே இருக்கிறது.

குறிப்பு: என்னுடைய குறைந்தபட்ச தொழில் நுட்ப அறிவைக் கொண்டு உருவாக்கியிருக்கும் இந்த பேனரை இன்னும் சிறப்பாக யாரேனும் வடிவமைத்துத் தந்தால் நானும் அதற்கு மாறத் தயார். 🙂

This entry was posted in சமூகம்/ சலிப்பு, தகவல்கள், பதிவர் சதுரம் ;-)) and tagged , . Bookmark the permalink.

26 Responses to வலைப்பதிவர்களே உங்களின் மனிதநேயத்தை காட்டுங்கள்…

 1. none says:

  Are there Indian troops in sri lanka now. If not your banner is a lie.

 2. Thooya says:

  நன்றி பாலாண்ணா 🙂

 3. Bala says:

  //
  none October 18th, 2008 at 9:12 am
  Are there Indian troops in sri lanka now. If not your banner is a lie.

  //

  265 indian troops are there in lanka.

 4. தலை!

  இணைப்பு கொடுத்தாச்சு

 5. தலைவரே இணைப்பு கொடுத்து விட்டேன் ,,சிறப்பான தங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.

 6. sangganesan says:

  நம் தமிழர்களுக்கு அங்கு நடக்கும் கொடுமைகள் அடங்கும்வரை வலைப்பூவில் அனைவரும் ஒற்றுமையாக வேறு எந்த விசியங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டாம் என்பது என் வேண்டுகொளாக வைக்கிறேன்.

 7. இணைச்சாச்சு பாலா

 8. siva says:

  உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே
  http://sivasinnapodi1955.blogspot.com

 9. rajaiyan says:

  1
  மதிப்பிற்குரிய தமிழக அரசியல் மதிபப்ப் pறகு;கு; ரிய அரசியல ; தலைவரக்க் ளுககு;கு; ம ;
  தமிழ ; திரையுலக தலைவரக்க் ளுககு;கு; ம ;
  புலமn;n; பயரந்ந் த் இலஙi;i; கத ; தமிழரின ; வேணடு;டு; கோள!;!
  அன்புடையீர்!
  இலங்கைத் தமிழர் துயர் தொடர்பில் கண்டனக் குரல்களை
  எழுப்பி இந்திய மத்திய அரசை அவர்கள் துயர் தீர்க்க ஆவன
  செய்யுமாறு நீங்கள் வலியுறுத்தி வருவது எமக்கு
  பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பெரும்பான்மையான அனைத்து
  அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலோடு இவ் வேண்டுகோளை
  விடுக்க முயல்வது மத்திய அரசினை செயற்பட வைக்கும் என்ற
  நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களின்
  இன்னல்கள் தீர உதவ முயலும் தமிழக அரசியல்
  தலைவர்களினதும் திரையுலக தலைவர்களினதும் ஏகோபித்த
  ஆதரவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சார்பில் எமது
  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  கடந்த முப்பது வருடகாலமாக இலங்கையில் நடந்துவரும்
  உள்நாட்டு யுத்தம் பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களை
  கடந்து வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன், பல
  சகோதரப் படுகொலைகளே எமது மக்களின் விடுதலையின்
  பேரில் நடந்துவரும் இந்தப் போரின் முக்கிய குறிக்கோளாக
  பரிணமித்துவந்திருப்பதையும், தமிழ் மக்களின் இழப்புகளுக்கு
  பிரதான காரணமாக பங்களித்திருப்பதையும் நீங்கள் அறியாமல்
  இருக்க முடியாது. இக்காரணிகளால் தமிழ் மக்களின் விடுதலைப்
  போராட்டம் திசைதிருப்பப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள்
  முழுத் தமிழ் மக்களையும் இன்று தற்கொலைக்கு
  2
  தள்ளிவந்துள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீரக் ள.;
  இந்நிலையில், இலங்கைத் தமிழரின் துயரம் கண்டு
  பொங்கியெழும் தமிழக மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகளின்
  அழிவுப் பாதைக்கு உடந்தையாகி தடம் புரளக் கூடாது என்பதே
  எமது எதிர்பார்ப்பாகும்.
  இலங்கை அரசியல் சூழ்நிலைகளை நீங்கள் ஓரளவு புரிந்து
  வைத்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறோம். தமிழ் மக்களின்
  நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டி குரல்
  கொடுககு; ம் அதே நேரம ; சில சிஙக் ள பேரின வாத சதத் pகளின ;
  குரல்களுக்கு உணவளிப்பனவாக உங்கள் ஆதரவு
  செயல்படாதவகையில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.
  இல்லையெனில் இலங்கையில் தமிழ் மக்களின் இரத்தக் களரி
  தொடர்ந்து ஓடுவதற்கே உங்கள் ஆதரவும் உறுதுணையும்
  உதவி செய்யும்.
  தமிழ் மக்களுக்கு சமமான நியாயமான உரிமைகள் வழங்கப்பட
  வேண்டும் என்பதை பெரும்பான்மை சிங்கள இனமக்களின்
  பெரும்பான்மையோர் ஏற்றுக் கொண்ட போதும் அவர்களில் ஒரு
  சிறுபான்மையோரான சிங்கள பௌத்த பேரினவாதத்தை
  வலியுறுத்தும் சக்திகளின் எதிர்ப்புகளை மீறி அவர்களால்
  செயற்பட முடியாத சூழ்நிலை காணப்படுவதும் இலங்கையில்
  இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு நடைமுறைப்
  படுத்தப்படாமைக்குரிய காரணங்களுள் ஒன்றாகும். இப்
  பேரினவாத சத்திகளின் கரங்களை ஊக்குவிக்கும் வகையில்
  தமிழகத்தின் செயல்பாடுகள் அமைதல் பாதகமானதாக
  அமையும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு
  எதிராகவும் தமிழகத்தில் 5 கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள்
  என்பதும் தமக்கென வேறு நாடு எதுவும் இல்லையென்பதும்
  3
  சிங்கள இனவாத சக்திகளின் பிரச்சாரமாக இனவாத
  தூண்டுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகமும் இந்தியாவும்
  சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்தும் உத்தரவாதம்
  அளிக்கும் உறுதிமொழிகளே இலங்கையிலுள்ள சிங்கள தமிழ்
  இனவாத சக்திகளை பலவீனப்படுத்தும்.
  இத்தனை இழப்புகளின் பின்பும் இன்றைய இலங்கை அரசு
  நியாயமான தீர்வினை முன்வைக்க முனைப்புடன் செயல்படாமை
  வேதனைக்குரியது என்பது உண்மையே. சர்வ கட்சி மாநாட்டு
  முடிவுகள் சாதுரியமாக பின் போடப்பட்டுக் கொண்டு செல்வது
  இலங்கை அரசின் நோக்கங்களை கேள்விக்குறியாக்குகின்றது.
  இலங்கை அரசு இனவாத சத்திகளுக்கு அடிபணிந்து,
  நடுநிலையான சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் ஏற்றுக்
  கொள்ள முடியாத தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிக்காமல்
  பார்த்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை இந்திய அரசு
  புறந்தள்ளி வைக்காமல் செயல்படும் உந்துசக்தியாக தமிழக
  அரசியல் தலைவர்கள் பங்களிக்க வேண்டும்.
  இலங்கைத் தமிழர்களிடையே ஜனநாயக அரசியலை வளர்க்க
  விரும்பும் அரசியல் சத்திகளுக்கு உங்கள் ஆதரவு பெருக
  வேண்டும். அவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி
  நிலைநாட்ட உங்களால் பெருமளவில் உதவ முடியும்.
  இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கிடையிலான
  ஒற்றுமையே தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும். அவர்கள்
  வலிமையை ஒருமுகப்படுத்தும். மாற்றுக்கருத்துகளுக்கு
  மதிப்பளிக்கும் பண்பினை இலங்கைத் தமிழர் அரசியலில்
  வலிமைப்படுத்தும் வகையில் உங்கள் செல்வாக்கு அமைய
  வேண்டும். சகோதரப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு
  உங்கள் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்
  4
  அரசியல் கட்சிகள் வேற்றுமைகள் பல இருப்பினும்
  ஒற்றுமையுடன் செயல்பட உங்களால் ஊக்கமும் உற்சாகமும்
  உதவியும் அளிக்க முடியும். விடுதலைப்புலிகளின் தவறான
  போக்கினை அவர்களுக்கு வலியுறுத்தி அழிவுப்
  பாதையிலிருந்து அவர்களை மீட்க வழிசமைக்க முடியும்.
  இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசினை
  நிர்பந்திக்கும் உங்கள் ஒருமித்த செயல்பாடுகள் பலனளிக்கும்
  என்று நாம் நம்புகிறோம். மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா
  வகையிலும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும்
  உறுதுணையாக இருக்கும் என்ற உண்மையும் தெளிவாக
  பிரச்சாரப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இனவாத
  சத்திகளை சீண்டிவிடவே உங்கள் ஆதரவு பயன்படுத்தப்படும்.
  பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள
  அவர்களுடனான உறவை வலுப்படுத்துவதே பயனுள்ளதாகும்
  என்பதை தயவுசெய்து நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
  இறுதியாக மறுபடியும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர
  தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவுக் குரல்களுக்கு எமது
  மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  இலங்கையிலுள்ள சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
  நியாயமான உரிமைகள் கிடைக்கப் பெற உங்கள் ஆதரவு
  பாரிய ஆதாரமாக அமைய உங்கள் ஆதரவு மேலும் தொடரவும்
  மேலும் செழுமை பெறவும் வேண்டுகிறோம்.
  பெயர் ஸத் hபனம ;
  1.
  2.
  3.

 10. பாலா,
  என் வலைப்பதிவில் இதே மாதிரி வேறு படத்தை போட்டு இருக்கிறேன். எனக்கு மற்றொரு யோசனையும் ஒன்றுண்டு. இணையத்தில் அங்கு நடக்கும் போர் பற்றியும் அன்றன்று நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் படங்களுடன் பல தளங்களில் தகவல்கள் வருகின்றன. ஆனால் அவையெல்லாம் அவ்வளவு எளிதாய் கண்களில் சிக்குவதில்லை. நாம் அதனை திரட்டி சுட்டிகளாகவோ அல்லது பதிவுகளாகவோ மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் அல்லவா?

 11. king... says:

  பதிவுக்கு நன்றி…

 12. சேத்தாச்சு, நண்பரே! நன்றி.

 13. Logu says:

  I also welcome others to join in it

 14. madhi says:

  nanbarukku en vaazhthukkal. NANDRIKAL.

 15. madhi says:

  நண்பருக்கு நன்றிகள் பல கோடி. கருத்து சொன்னவர்களுக்கும் நன்றிகள்.

 16. rachinnathurai says:

  singkalarkalitam erunthu tamil makkalukku viduthalai avasiyam. tamil makkalukkul kuzu sandaiyum koodaathu. eru nadukalaaka tamil makkalum singkala makkalum otrumaiyaka vaazamutiyum
  ungkal muyaRchikku nandri.

 17. Mass says:

  sri lankanin kodunkolatchikku oru mutrupulli vaikka thudikkum en iniya tamilanukku en muthal vanakkattahai pirathipalikkiren. vazhga TAMIL valarga TAMIL

  enrum tamilanukkaga. tamilanaga valvom – Anbudan – MASS

  Melum ungalin Parvaikkaga – http://www.oruwebsite.com/tamil_eelam_videos – parungal..

 18. இணைத்து விட்டேன்.

 19. rajaiyan சொன்ன கருத்தை ஒத்ததாக எனது பதிவு இருக்கும்.
  ஆயுதக் குழுக்கள் – இயக்கங்கள் பல இலங்கை அரசைக் காட்டிலும் மிகமோசமான படுகொலைகளைச் செய்ததுபற்றி ஏன் எவருமே கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தமிழர்கள் செய்யலாம் என்ற விதிவிலக்கு இருக்கிறதா?
  1. காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைகள்
  2. மாற்று இயக்கத்தினரை கொல்கிறோம் என்று எத்தனை அப்பாவி இளைஞர்களைக் கொன்று ஒழித்தக்கட்டியிருக்கிறார்கள். புலிகள் மாத்திரமல்ல இன்று புலிகளுடன் இணைந்துள்ள ஈபிஆர்எல்எப் மற்றும் ரெலோ தனித்த இயங்குகின்ற புளொட் போன்ற அமைப்பக்களின் கொலைகளை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்.
  3.தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை அவர்கள் பகுதியிலிருந்து வெளியேற்றிய புலிகளுக்கு எப்படி சிங்கள அரசிடமிருந்து நியாயம் பெற முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
  4.1983 இல் இனப்படுகொலை செய்தார்கள் என்கிறோமே!
  5.1981ல் யாழ்ப்பாண நகரையும் நூல் நிலையத்தையும் கொழுத்தினார்கள் என்கிறோமே!
  இதற்கு மூல காரணமானவர்கள் தமிழர்கள் என்பதை யாராவது எப்போதாவது தெரிவித்தார்களா?
  சிங்களவன் மோடன் என்று சொல்லிச் சொல்லி இப்போது நாமல்லவா முட்டாள்களாக பிரிவு பட்டு நிற்கிறோம். சரி நாங்கள் தான் முட்டாள்களாகி எம்மை நாமே அழித்தக் கொள்கிறோம் என்றால்
  நீங்கள் ஏன் சூடு சொரணையற்றவர்களாக உங்களுடைய பிரதமரையே கொன்று ஒழித்த பாவிகளுக்காக உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறீர்கள்! நாங்கள் தானே வாக்குப் போட்டோம் கடந்த பொதுத் தேர்தலில் எமது ஏகப் பிரதிநிதிகள் இவர்கள்தான் என்று! எமக்காகத் தானே இவர்கள் இது எல்லாம் செய்கிறார்கள். நாங்களே எதுவும் பேசாமல் சும்மா இருக்கும் போது நீங்கள் ஏன் தேவையில்லாமல் குழப்பமடைகிறீர்கள். நாங்கள் தான் முட்டாள்கள். நீங்கள் ஏன் இதற்குள் தலையைப் போட்டு முட்டுகிறீர்கள்? எங்கள் ஏகப் பிரதிநிதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை ஒன்றாகச் சேர்ந்து கொழும்பில் இருப்பார்கள் இராணுவ விமானங்களில் ஏறி எந்தவித பாதுகாப்புச் சோதனையுமின்றி வெளிநாடு போவார்கள் வருவார்கள். அராச மரியாதை பெறுவார்கள். அவர்களிலிருந்து பிரிந்த ஒருவர்தானே சில நாட்களுக்கு முன்னர் உங்கள் அரசுதான் பயிற்சி தந்தது – பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டது என்றெல்லாம் சொன்னாரே அப்போதாவது தெரியவில்லையா நாங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று! ஏன் சும்மா எமக்காக உங்கள் பிரச்சனைகளை விட்டுவிட்டு ….. போய் உங்கள் வேலையைப் பார்க்கலாமே! உங்களில் சிலர் அஜித் அர்ஜூ னுக்கு இருக்கும் அறிவு உங¨களுக்கு கிடையாதா பாவம் நீங்கள் சொந்த மூளை இல்லாதவர்கள் தானே நீங்கள்! இப்படி நான் சொல்லவில்லை – பலரும் இங்கே பேசிக் கொள்கிறார்கள்! அவ்வளவுதான்.

 20. Muthukumar.S says:

  One day we won…………….But
  So many innocent people ……die!
  we need…..
  War!…..War….! War….!

 21. vijayakumar.j says:

  i also join with us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.