“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்.

அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உண்மையில் கும்மி என்பது தமிழ்ச்சாமிகள் சார்ந்து ஆடப்படும் ஒரு ஆட்டமாக இன்றும் தென்மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முளைப்பாரி வளர்த்து ஒரு வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒயில் ஆட, பெண்கள் குழு கும்மி அடித்து ஆடும். இதில் வயது பாகுபாடெல்லாம் கிடையாது. என் அம்மாச்சியும் ஆடியிருக்கிறாள்கூடவே, என் அம்மாவும். இவர்கள் இருவருடனும் என் அக்காவும் ஆடி இருக்கிறாள்.

இங்கே கவனிக்கவேண்டிய அம்சம் எதுவெனில்.. இந்த ஒயில், கும்மியாட்டம் என்பது மத்தியதர, கடைநிலை சாதியர்களின் ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. எந்தவொரு உயர்சாதியினரும் இந்த ஆட்டத்தை ஆடுவதில்லை. உழைக்கும் மக்களின் களைப்பு தீர ஆடிப்படும் நிகழ்வாகவே இதனை பார்ப்பதும் உண்டு. திருவிழா அல்லாத சமயங்களில் வெறும் பெண்களின் களைப்பு நிவர்த்தி பாடலுடன் நின்று போகும். ஆண்கள் வஸ்தாவியின் ஒயில் வகுப்புக்கு போவதை வழக்கமாக இன்றும் பல பகுதிகளில் கொண்டுள்ளனர். (என்னுடைய ”கோட்டி முத்து” கதையில் இது பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.)

ஆண்களின் ஓயில் ஆட்டத்தை விட, பெண்களின் கும்மியாட்டம் அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும், சுவையான இசை வடிவமாகவும் இருந்து வந்துள்ளது. பெண்களின் ஆட்டத்தை காண கூடும் கூட்டத்தினால் வெறுப்புற்ற ஆண்வர்க்கம். ஒரு உத்தியை கையாண்டது. ஒயில் பக்கம் அதிக பார்வையாளர்களை திருப்புவதற்கு ஒரு குழுக்களிடையே போட்டிகள் வைத்து, கிராம அளவில் அதை வணிகப்படுத்தியது. சின்ன சின்ன ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒயில் போட்டியினை நடத்தத்தொடங்கியது. ஒயிலை வணிகப்படுத்தும் வேலைகள் வெற்றியடைந்தபின் தான் கும்மியின் பக்கம் பார்வையாளர்கள் கூட்டம் குறையத்தொடங்கியது என்பது உண்மை.

”ஆனை வாரதப் பாருங்கடி- அது
அசைச்சு வாரத்தப்பாருங்கடி..” என்ற பிரபலமான கும்மிப் பாடலே இளையராஜாவால் சினிமாவுக்கு கடத்திவரப்பட்டு,

“ஆயிரம் தாமரை மொட்டுக்களே- வந்து
ஆனந்த கும்மி தட்டுங்களேன்” என்று உருமாற்றமாகி, பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. (கிராமிய இசை வடிவங்களில் இருந்து சினிமாக்காரர்கள் களவாடிய மெட்டுக்கள் குறித்து தனி புத்தகமே போடலாம்)

என் அம்மாச்சி தொடங்கி என் அக்காள் வரை ஆடிய கும்மியை மீட்டு எடுத்து, மீண்டும் ஆடவைக்க முடியாவிட்டாலும்…, நினைவிலாவது இந்த பெயரை வைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமின்றி வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று நிச்சயமாக நம்பலாம்.

நீங்கள் குறிப்பிட்டது போல கும்மி ஆட்டம் என்பது ஒன்றுக்கும் உதவாதது என்று ஆண்களாலும், உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை என்பதையும் உணர்க!


Comments

23 responses to ““கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?”

  1. romba mukkiyam intha post

  2. // உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை //

    oor oora poster adichu ottunangala uyar sathiyinar?

    kappi thanama pesikittu. parappunangalam poyyai. pothaiyila irukkiya?

  3. பாலா … சில விசயங்கள் …

    //…அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும்…//

    கும்மி என்ற சொல்லாடல் ‘ ஒன்றுக்கும் உதவாத’ அல்லது ‘ வெட்டியாக ‘ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றுதான் கூறியுள்ளேன்.

    // அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. //

    ஆம். பல விதமான சொற்களை நாம் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறியாமலே பயன் படுத்திவந்திருக்கிறோம்.

    // உண்மையில் கும்மி என்பது தமிழ்ச்சாமிகள் சார்ந்து ஆடப்படும் ஒரு ஆட்டமாக இன்றும் தென்மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. //

    இன்று கும்மி என்பது கோவில்களில் மட்டுமே ஆடப்படவில்லை. திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினர் போன்றோர் அதனை கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர். சக்தி கலைக் குழு – முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரு கலைக் குழு. அவர்கள் நாட்டுப் புற கலை வடிவங்களை மட்டுமே அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பறையாட்டம், அவ்வாட்டம் சாவுக்குமட்டுமே ஆடப்படும் ஆட்டம் என்பதை பறையின் அதிர்வுகளிலே சிதரடித்துக்கொண்டிருக்கிறது.

    // … …, நினைவிலாவது இந்த பெயரை வைத்திருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமின்றி வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை … //

    நல்ல சப்பைக்கட்டு பாலா …

    //… நீங்கள் குறிப்பிட்டது போல கும்மி ஆட்டம் என்பது ஒன்றுக்கும் உதவாதது என்று ஆண்களாலும், உயர்சாதியினத்தவராலும் பரப்பப்பட்ட பொய்யன்றி வேறெதுமில்லை என்பதையும் உணர்க! //

    ஆம் நிச்சயமாக. அதே அர்த்தத்தில்தான் வலைப்பதிவுகளிலும் ‘ கும்மி ‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

  4. இல்லை இவான்,

    இங்கு கும்மி என்று பயன்படுத்தப்படும் சொல்லாடலுக்கு நீங்கள் பதப்படுத்தும் பொருள் தவறு. மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த கும்மி பதிவுகளால் முடிகிறது. ஒருவரை சிரிக்கவைத்து, சிந்திக்க வைப்பது சாதாரண/ உதவாக காரியமா என்ன? அனேகமாக நீங்கள் மொக்கைப் பதிவுகளையும் கும்மிப் பதிவுகளையும் போட்டு குழப்பிக்கொள்கிறீர்களோ என்று நினைக்கிறேன்.

    இந்த ஒயில்/கும்மி ஆட்டங்கள் இன்று மேடைகளில் சக்திகலைக்குழுக்கள் போன்ற குழுக்களால் நடத்தப்பட்டு வந்தாலும், அதன் அடவுகளில் தமிழ்ச்சாமிக்கு வணக்கம் சொல்லும் முறையை இவர்களும் பின் பற்றுவதை பார்க்கலாம். வணங்கக்கூடிய இடத்திலிருப்பவர் தான் மாறி இருப்பார்கள். இது நம் மரபு.

    நிச்சயமாக நீங்கள் சொல்லுகின்ற பதத்தில் எவருமே இத்தனை நாள் இதனை பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.

  5. ஆங்கிலத்தில் தொடர்ந்து வந்தி எடுக்கும் நாய்க்கு…, சென்னை புறநகரில் இருக்கும் உன் அலுவலகத்தில் மட்டும் நீ குத்தாட்டம் போட்டுக்கொள்ளவும்.

  6. சில உதாரணங்களை இங்கே தருகிறேன். இதற்கு அர்த்தங்கள்தான் என்ன ?

    // வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!
    //( http://ammanchi.blogspot.com/2008/03/blog-post.html )

    //கும்மி அடிக்க ஒடியாங்க……

    கும்மி அடிக்க முடியாமல் தவிர்க்கும் நெஞ்சங்கள் கும்மி அடிக்க ஒரு இடம் தேவைப்படுகிறது, அதனால் ஒரு பதிவு போடு எனக் கூறிய தங்க தலைவனின் உத்தரவை ஏற்று இந்த கும்மி பதிவை இடப்படுகிறது. // ( http://tsivaram.blogspot.com/2007/06/blog-post.html )

  7. கும்மி என்பது கூட்டாகச் சேர்ந்து ஆடும் ஆட்டம். அதனால்தான் வலையுலகில் பொழுதுபோக்கிற்காக சேர்ந்து ‘ஆட்டம்’ போடுவதை கும்மி என அழைக்கிறார்கள். இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பதும் உருவாகுவதும் மொழியின் தன்மைதான்.

  8. பாலா,

    //கிராமிய இசை வடிவங்களில் இருந்து சினிமாக்காரர்கள் களவாடிய மெட்டுக்கள் குறித்து தனி புத்தகமே போடலாம்//

    நீங்க ஏன் இப்படிப் பார்க்கிறீங்க? சில நூறு பேர் மட்டுமே கேட்ட பாடல்களை பல லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்ததாக எடுத்துக் கொள்ளலாமே?

    அன்புடன்,
    நாகை சங்கர்.

  9. என்ன கொடுமை சார் இது? 🙁

    கும்மி என்ற சொல்லாடலுக்கு இணையாக தற்போது சிலகாலமாக கும்பி என்ற சொல்லாடலையும் பயன்படுத்துகிறோம். கும்பி என்பது ஒரு உடலுறுப்பு, அதை இழிவுபடுத்துகிறோம் என்று யாராவது பதிவுபோட்டு என்னுடைய டவுசரை கிழிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  10. கும்பி எரியுது என்றால் வயிறு எரிகிறது என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது… இங்கே கும்மியோடு கும்பி எப்படி பொருந்துகிறது என்பதை விளக்க அருமைத் தம்பி லக்கியை மீண்டும் மேடைக்கு…

  11. கும்மி என்பது சொல்லா இல்லை சொல்லாடலா.?

  12. ஆஹா இதானா அது…..

  13. //கும்மி என்பது சொல்லா இல்லை சொல்லாடலா.?//

    கும்மி என்பது சொல். கும்மியாடல் என்பது சொல்லாடல் 🙂

    //கும்பி எரியுது என்றால் வயிறு எரிகிறது என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது… இங்கே கும்மியோடு கும்பி எப்படி பொருந்துகிறது என்பதை விளக்க அருமைத் தம்பி லக்கியை மீண்டும் மேடைக்கு…//

    தோழர் தமிழச்சியோடு நான் அடிக்கும் கும்மியை பார்த்து பல பேருக்கு கும்பி எரிந்ததால் ‘கும்மி’ ‘கும்பி’ ஆயிற்று. ஸ்ஸ்ஸ்…. எப்படியெல்லாம் லாஜிக் பிக்ஸ் பண்ண வேண்டியிருக்கு சிந்தாநதி அண்ணே? 🙁

  14. சுந்தர்,

    ‘பேசுபவருக்கும், கேட்பவருக்கும் இடையே கூட்டான சில முன்தீர்மானங்களின் அடிப்படையில் நிகழும் தர்க்கபூர்வமான உரையாடலையே சொல்லாடல் என்கிறோம். இதனுள் கருத்தியல் கட்டுமானமும் இருக்கிறது. சொல்பவனும், கேட்பவனும் ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்த முனைவதும் இருக்கிறது’ சொல்லாடலை இந்தவகையிலேயே புரிந்து வைத்திருக்கிறேன். நண்பர் பாலபாரதியும் இந்த அர்த்தத்திலேயே இதை பயன்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    அப்படி புரிந்து கொள்ளும்போது ‘கும்மி’ என்பதை சொல்லாடல் என குறிப்பிடுவது ஒருவகையில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

  15. பைத்தியக்காரன்,

    ஆங்கிலத்தில் discourse என்பதையே தமிழில் சொல்லாடல் என்கிறோம் என்பது என் புரிதல்.

    முன் பின்னாக தொடர்ந்து நடக்கும் உரையாடலை சொல்லாடல் எனக் கொள்ளலாம் தான்.

    நன்றி.

  16. அட இங்க எதோ சீரியஜா டிஸ்கஸனு நடக்குது போல இருக்கே…….
    அப்போ இங்க கும்மி கடியாதா…..
    கும்மியாண்டவா…….

  17. பைத்தியக்காரன்,

    சொல்ல விட்டுப் போனது. வலைப் பதிவுகளில் கும்மியடித்தல் என்பது முன் தீர்மானங்களுடன் கூடிய விவாத உரையாடலாக இல்லை. அதனாலேயே இங்கே கும்மியை சொல்லாடல் எனச் சொல்லலாமா எனக் கேட்டேன்.

    நன்றி.

  18. ஆனந்த கும்மி

  19. ஆனந்த கும்மி

  20. சிறில் அலெக்ஸ் ,

    // இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //

    என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.

    இதுபோன்ற சொல்லாடல்கள் அக்கலைகளையும் கலைஞர்களையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மையை நமக்குள்ளே வளர்த்துவிடும். இக்கலைகளை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தையும் குறைத்துவிடும் என்பதே எனது கருத்து. இப்படி நாம் தொலைத்த கலைகள் பல இருக்கின்றன.

    உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான்.

    ஆனால் உண்மையில் விசயம் அப்படி இல்லை.

    நாகை சங்கர்,

    // .. நீங்க ஏன் இப்படிப் பார்க்கிறீங்க? சில நூறு பேர் மட்டுமே கேட்ட பாடல்களை பல லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்ததாக எடுத்துக் கொள்ளலாமே? …//

    ஆனால் அதனுடைய புகழ் மற்றும் அதற்கான காப்புரிமை யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்பதும் கேள்வி.

  21. இவான்,

    //ஆனால் அதனுடைய புகழ் மற்றும் அதற்கான காப்புரிமை யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்பதும் கேள்வி.//

    நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், இப்படிப் பேசி தான் நாம் நம்முடைய புராதனமான் பல கலைகளை இழந்துள்ளோம் என்பது கசப்பான உண்மை.

    அன்புடன்,
    நாகை சங்கர்.

  22. senshe Avatar
    senshe

    //// இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //

    என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.
    //

    ithukku mela ungakitta ennaththa solrathu…

    avana neeeeeeeeeeenu kettutu poka vendiyathuthan :)))

  23. Lenin Avatar
    Lenin

    கும்மிக்கு இம்மாம்பெரிய கும்மியா? கும்மிய வைச்சே கும்மியடிக்க நினைக்கிறாரா பாலா அண்ணாச்சி அல்லது கும்மிய வைச்சு குமியகுமிய கும்மிய அகழவாராய்ச்சி செய்ய நினைக்கிறாரா என்று கும்மாமல் எனக்கு கும்மவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *