Tag: கல்வி

  • தோல்வி நிலையென நினைத்தால்..

      சமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது?! நினைவு இருக்கிறதா? இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை வரும். இன்று நம் பிள்ளை எப்போது தோல்வியை எப்போது சந்தித்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். விடை கண்டுபிடிக்க முடியாவிட்டால்.. அவர்களை அழைத்தே…

  • கல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

    அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா? கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் அறிவுவளர்ச்சியிலும் இயலாமை கொண்ட எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் அறிவு…

  • உழைப்புக்கு மரியாதை!

    உழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள்! படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல! என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படியுங்கள்.. உழைப்பு உயர்வு தரும்! உண்மை. இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், எந்த உழைப்பு உயர்வு தரும்…