Tag: பெரியார் வரலாறு

  • பெரியாருடன் ஒரு பயணம்

    பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும்…

  • பெரியாரும் நானும்..

    எனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார். என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான். நான் இணையத்திற்குள் அடியெடுத்து வைத்த சமயங்களில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களுக்கு நிறைய பஞ்சமிருந்தது. திரிபுகளும், புரணிகளுமே அதிகம் வலம் வந்துகொண்டிருந்தது. நிறைய…

  • 12. பதவிகளை தூக்கி எறிந்த ஈ.வெ.ராமசாமி

    வெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். அதில் இரண்டு மகன்களின் குடும்பச் செலவுக்கும் பணம் ஒதுக்கி மீதி வருமானம் தர்மத்திற்கு செலவிடப் படவேண்டுமென அறக்கட்டளை உருவாக்கி விட்டார்.…

  • 11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி

    வெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக விளங்கி வந்தார். ஈரோட்டில் எவ்வகுப்பினர் வீட்டிலும் நன்மை தீமை நடைபெற்றாலும் முதலில் இவரை அங்கு காணலாம். எல்லோரும் இவருக்கு தகவல்…