பெரியாருடன் ஒரு பயணம்

பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று ‘பெரியாருடன் ஒரு பயணம்’ நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 – 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 – 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 – 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் – 9884499357

(கீற்று இணையதளம் இன்று கடும் நிதி நெருக்கடியில் இருப்பினும், இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் முன்னரே திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருந்தால் அதை நிறுத்தாது தொடர்ந்து செய்கிறோம்.)

—-
கீற்று இணையதளத்திற்கு உதவுங்கள்

கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாத்து வருவதால் அதிகரித்திருக்கும் Memory usage & MySQL usage காரணமாக‌ dedicated server-க்கு மாறியாக வேண்டியுள்ளது. Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட‌ வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். இது கீற்று இணையதளத்திற்கு மிகப்பெரிய தொகை.

கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தற்காலிகமாக கீற்றின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளோம். கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ பயன்படுத்தவும். https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_flow&SESSION=Z7sE9TIqPf1mYFZ1_j9rsj-YzlWxjXVkdNBhDInj-wAGo6IO27lAkeMLN6a&dispatch=5885d80a13c0db1f8e263663d3faee8dc18bca4c6f47e633fcf61b288f5ebea2

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி:
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai – 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994

—-

மின்னஞ்சலில் வந்தது.

This entry was posted in தகவல்கள், விளம்பரம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.