
படத்தின் மேல் கிளிக்கினால் படமூலம் அறியலாம்
இன்று எல்லா துறைகள் பற்றியும் எழுதுபவர்கள் உண்டு. படைப்பிலக்கியம் தாண்டி தமிழில் எழுதப்படுவதற்கு என நிறைய துறைசார்ந்த இடங்கள் காலியாக முன்பு இருந்தன. இவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
சரியோ தவறோ.. துறைசார்ந்த எழுத்துக்கள் தமிழில் அதிகமாகிவருவது கவனிக்கத்தக்கது. அதிலும் பொருளாதாரம் பற்றி தமிழில் எழுதுவதற்கு சரியான நபர்கள் இல்லாதிருந்தது. அதிலும் கூட இன்று பலர் வந்துவிட்டார்கள். எனக்கு தெரிந்து மிச்சமிருக்கும் துறைகளில் இசையும், மோட்டார்வாகனத்துறையும் மிக முக்கியமானதாக எனக்குப் படுகிறது.
மோட்டார் வாகனத்தை பற்றி எழுதினால் கிடைக்கக் கூடிய பிரபலம் மிகவும் குறைவு. அதில் ஆர்வமிருப்பவர்களைத்தவிர வேறு யாருக்கும் நாம் தெரியாமல் போய்விடக்கூடிய அபாயமிருக்கிறது என்பதால் இசை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

புகைப்படத்தின் மேல் சொடுக்கினால் படமூலம் அறியலாம்.
வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் தினம் ஒரு கச்சேரி நடத்திக்கொண்டிருக்கும் தேங்காய் மூடி பாகவதரிடம் கேட்டறிந்து, ஆறோ கணம், ஏழோ கணம், எட்டோ கணம் மற்றும் அவரோ கணம், இவரோ கணம்னு பல விசயம் கத்துவச்சிருக்கேன்.
தேங்காய் மூடி பாகவர்ன்னு சொன்னதும் சாதாரணமா எட போட்டுறாதீங்க. பாடி முடிச்சுட்டு தேங்காய் மூடி வாங்கீட்டு போற மாதிரியான பாகவதர் இல்லை இவர். தேங்கா மூடியைப் பார்த்ததுமே பாடத்தொடங்கி விடக்கூடிய பாகவதர். இவருக்கு பயந்தே, இவருடைய மனைவி, அண்ணாச்சி கடைசில தேங்காய் வாங்கும் போது, அங்கேயே உடைத்து, தேங்காய்ச்சில்லுகளாக துண்டம் போட்டுத்தான் வீட்டுக்கு கொண்டு போவாங்க. பின்ன.. முழுசாவோ, உடைச்சோ மட்டும் போனால்.. அதைப் பார்த்தும் மனுசன் பாடஆரம்பிச்சுடுவாரே.. அதனால தான் இப்படி.

படத்தின் மேல் கிளிக்கினால் படமூலம் அறியலாம்
ஆம் நண்பர்களே… என் அடுத்தபதிவு.. இசைவிமர்சகராகக் காட்டிக்கொள்ளுவது எப்படி? அல்லது இசைவிமர்சகராகலாம் வாங்க.
பஸ்ஸு-ல் கூட வீடியோ பஸ்ஸாக்கி, அதிலும் பாட்டுப் போட்டு (நேயர் விருப்பமெல்லாம் வேற நடக்குது ) மகிழும் மக்கள் நிறைந்த வலையுலகில் இசை விமர்சனம் பத்தின பதிவும் நல்லாவே எடுபடும்னு நம்பறேன். படிச்சுட்டு ஓட்டெல்லாம் ஒன்னும் போட வேண்டாம் மகாஜனங்களே, அதுனால தைரியமா வாங்க. (எப்படியெல்லாம் மார்க்கெட்டிங்கு பண்ண வேண்டியிருக்குது… ஸ்ஸப்பா…. )
ட்ரைலருக்கே ட்ரைலர் விடும் காலமிது என்பதால்.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் அதனால வரப்போகும் பதிவுக்கான ட்ரைலர் தான் இது. 🙂

படத்தின் மேல் கிளிக்கினால் படமூலம் அறியலாம்
—-
அது- ஆரோகணம், ஆறோகணம் அல்ல என்பது மாதிரியான பின்னூட்டம் போடுபவர்கள் யாராக இருந்தாலும் நான் பிரபலபதிவராகும் முயற்சிக்கு எதிரானவர் என்பதை மனதில் கொள்க. எழுத்துப்பிழையோடு எழுதினால் தான் பிரபலமாக முடியும் என்று எனக்கும் ஒருத்தர் 50பைசா தபால் அட்டை போட்டிருந்தார் என்பதையும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். (ரொம்ப காலமா அப்படித்தான் எழுதிகிட்டு இருக்கேன். ஆனா.. பிரபலம் தான் ஆகமுடியலை 🙁 )
200
ஸ்டார்ட் மியூசிக் 🙂
ஆயிலு.. செஞ்சுடுவோம்… :)))
//அல்லது இசைவிமர்சகராகலாம் வாங்க.//
இப்படியே இசை விமர்சகராலாம் வாங்க/ பிரபல ப- வாகலாம் வாங்க/சினிமா கலைஞராகலாம் வாங்க/தயாரிப்பாளர் ஆகலாம் வாங்க/ இயக்குநர் ஆகலாம் வாங்க மற்றும் இன்னபிற ஆகலாம் வாங்கன்னு கூட்டிட்டு போன மக்களையெல்லாம் எங்கே ஒளிச்சு வைச்சிருக்கீங்க முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க ???? :)))
போஸ்ட்ல பதில் கேக்கலாம் வாங்க க்ரூப் சார்பில்
ஆயில்யன்
கென்’ண்ணாச்சி பேரவை
தோஹா
படத்து மேல கிளிக்கி கிளிக்கி பாத்தாச்சு. ஒண்ணும் வேலைக்காவலை 🙂
***
இசைவிமர்சகர் ஆகறது அம்புட்டு ஈசியாவா இருக்குது 🙂
***
//படத்து மேல கிளிக்கி கிளிக்கி பாத்தாச்சு. ஒண்ணும் வேலைக்காவலை :)/
ஹைய்ய்ய்ய் நானும் கூட அமுக்கோ அமுக்குன்னு அமுக்கி பார்த்துட்டேன் சென்ஷி பாஸ் வீ 2 வெட்டின்னு டெஸ்ட் பண்ணத்தான் அப்படி செஞ்சிருக்குறாராம் தல :))))))
சென்ஷி, அதாவது என்னன்னா… படம் எடுக்கப்பட்ட ஷோர்ஸ் லிங்க் அங்கே கிடைக்கும்னு அர்த்தம். படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து தனிவிண்டோவில் படத்தை மட்டும் திறந்து பார்க்கவும்…னு போடமுடியாதுப்பா..ஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணகட்டுதே..
//இசைவிமர்சகர் ஆகறது அம்புட்டு ஈசியாவா இருக்குது///
இப்பவெல்லாம் அது நொம்ப சிம்பிளாயிச்சு பாஸ் மெட்ராஸ்ல்ல குறைச்ச டம் பிரீயட்ல டெய்லி 8 அவர்ஸ் டிரெயினிங்க் க்ளாஸெல்லாம் வைச்சு நடத்துறாங்களாமாம் மதியம் சாப்பாடு உண்டு!
ஆயிலு.. ஆமா அப்ப்டியே நா கூப்பிட்டா.. ஆளுங்க அலைகடலென திரண்டு வரறமாதிரித்தான். :))
அப்புறம் நீங்க சொல்லி இருக்குற சில ஐட்டங்களுக்கும் பதிவு போடும் திட்டம் இருக்கு. எப்பூடி…? :))
//ஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணகட்டுதே.//
அட இதுக்கு பதில் எல்லாம் சொன்னா அப்புறம் விமர்சகர் போஸ்டிங்க் யாராச்சும் புடுங்கிகிட்டு ஓடிருவாங்க பாஸ் பதில் எல்லாம் சொல்லாதீங்க யார் கேள்வி கேட்டாலும் கம்முன்னு இருந்துக்கோ ! வளர்ற பிள்ளை ச்சே விமர்சகர் இப்புடித்தான் இருக்கோணும் :))))))
ஆயிலு.. //இப்பவெல்லாம் அது நொம்ப சிம்பிளாயிச்சு பாஸ் மெட்ராஸ்ல்ல குறைச்ச டம் பிரீயட்ல டெய்லி 8 அவர்ஸ் டிரெயினிங்க் க்ளாஸெல்லாம் வைச்சு நடத்துறாங்களாமாம் மதியம் சாப்பாடு உண்டு!// :))))
ஆல்வேஸ் அப்டேட் தான் :))))
—
இனி கேள்விக்கு நோ பதில்.. :))
//அப்புறம் நீங்க சொல்லி இருக்குற சில ஐட்டங்களுக்கும் பதிவு போடும் திட்டம் இருக்கு. எப்பூடி…? ///
எனக்கு சின்ன வயசுல இஸ்கூலு புக்குல படிச்ச கதைதான் ஞாபகம் வருது ஒரு ஆளு பீப்பி ஊதிக்கிட்டே ஊர்ல நாசம் பண்ணிக்கிட்டிருந்த எல்லாம் மவுசையும் ஆர்கனைஸ் பண்ணி கொண்டு போயி ஆத்துக்கு அந்தாண்ட வுட்டுட்டு ஓடிப்போயிட்டாராம் – இதுதான் சட்டுனு ஞாபகத்துக்கு வருது எது எப்படியே எல்லாம் கிளியர் பண்ணிவிட்டா சரி ஏன்னா நமக்கு ஊரு நல்லா இருக்கணும் அதான் ஆசை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
பேஷ் பேஷ்… ட்ரைலர் ரொம்ப நன்னாயிருக்கு நம்பி… மேல தொடருங்கோ…. பெரியவா ஆஸீர்வாதம் உண்டு நோக்கு
அட! இது வேறயா…சரி சரி டைலர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…மெயின் பிக்சரை சீக்கிரம் போடுங்கப்பா…