Category: வாசிப்பனுபவம், புத்தகங்கள்

  • ஹிரோஷிமாவின் நெருப்பு (நூல் அறிமுகம்)

    இன்று உலகம் முழுவதும் பிற உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறையின்றி  கோரமான முறையில் மனித உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது வன்முறை. அதிகார போதை, அடிமைப்படுத்தும் எண்ணம், மதம் மற்றும், சாதி என வெவ்வேறு முகமூடிகளில் இப்பாதகச்செயல் நடந்துகொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மாண்ட வரலாற்றினை நாம் உலக யுத்தம் என்ற பெயரில் படித்திருப்போம். அப்படி இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவையும், நாகசாகியையும் சின்னாபின்னமாக்கியது. அந்த இரண்டாம் உலக யுத்தம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைத்…

  • புத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்!

    இன்றைய குழந்தைகள், நூல் வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். உள்ளங்கைக்குள் உலகையே கொண்டு வந்துவிட்டது ஸ்மார்ட்போன். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி ப்ளஸ் என்று இணைய மேய்ச்சலுக்குத் தயாராக இருப்பவர்களிடம் நூலைக் கையில் எடுக்கச் சொன்னால், ஓடாமல் என்ன செய்வார்கள்? வாசிப்பின் மகத்துவத்தை அவர்களிடம் பேசுவதற்கோ எடுத்துச் சொல்லுவதற்கோ நமக்கும்கூட நேரம் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, எழுதி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால்,…

  • ”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு? நூலுக்கான முன்னுரை

      எங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் லூசு..” என்றான். நேரடியாக இப்படி ஒர் அழைப்பை எதிர்கொண்டபோதில் அத்தனை தயாரிப்புகளையும் தாண்டி கொஞ்சம் மனம்கலங்கித்தான் போனோம். அவன் தனது…

  • துலக்கம் – விமர்சனங்கள்

    நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவென படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது. முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , பின் பதைபதைப்பாகி , கல்யாண் கமலாவோடு கலங்கி நின்று , கடைசியில் அஸ்வின் திரும்ப கிடைத்தும் ஆசுவாசம் அடைகிறோம். கதை…

  • துலக்கம் – விமர்சனங்கள்

    துலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை…