Category: அப்பா

  • காது குத்தல் அல்லது காதணி விழா

    எட்டாம் வகுப்பு படிக்கும் போது கோடை விடுமுறையில் போய் வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையை எழுதச்சொன்னார்கள். எல்லோரும் தாங்கள் போய் வந்த வெளியூர் பயணம் குறித்து எழுதினார்கள். அதில் அநேகரும் தாய்மாமன் வீட்டுக்கு போய் வந்த்தைப் பற்றியே எழுதி இருந்தார்கள்.  நான் மட்டும் மற்றவர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். ஏனெனில் எனக்கு எந்த தாய்மாமனும் இல்லை. என் அம்மாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் அதில் ஒரு தங்கை. மற்றது எல்லாம் அண்ணன்மார்கள். ஆறு மாமாக்கள் எனக்கு…

  • விடுபட்டவை 23 August 09

    மிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சந்திப்பின் ஒலிவடிவம் கேட்க.. மதுவதனன் பதிவுக்கு போகலாம். படங்களைக்காண.. வந்தியத்தேவன் மற்றும் ஆதிரை பதிவுக்கு…

  • அப்பா!

    தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில்…