தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன்.

தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில் பெற்றோர் பலர் சர்வாதிகாரியாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறை இது போன்ற ஆற்றாமைகளைக் கேட்க நேர்கையிலும், நாம் இது போன்று இருந்து விடக்கூடாது என்ற எண்ணம் வருவதுண்டு. கண்டிப்பு என்கிற போர்வையில் குற்றவாளிகளை அணுகும் காவல் துறையினர் போல் இருக்கும் பெற்றோர் குறித்தும் நிறையவே வருத்தங்கள் வருவதுண்டு. எந்த சூழ்நிலையிலும் நமக்கான பிள்ளைகளுக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியக் கடமைகளில் ஒன்று என்றே எண்ணுகிறேன். ஒரே குழந்தை என்ற காரணத்திற்காக பகலில் ஒளி தருவது சந்திரன் என குழந்தை கூறுமாயின் ’சூப்பர்டா தங்கம், என்ன அறிவு உனக்கு’, என மகிழும் பெற்றோரைக் கண்டு எரிச்சலும் அடைந்திருக்கிறேன்.

இதோ, காலம் கனிந்து நானும் தகப்பனாகிவிட்டேன். 🙂

எட்டாவது குழந்தையாய் பிறந்த எனக்கு நேர்ந்தது போல் அண்ணன்மார் போட்டுப் பழையதான உடுப்புக்களை புதியதாய் போட்டுக் கொள்ளும் கட்டாயம் ஏதும் இவனுக்கு இல்லாமலிருப்பதே எனக்கு மிக்க மகிழ்சியாக இருக்கிறது. 🙂

அழகுத் தமிழில் குழந்தைக்கென ஒரு பெயரை முடிவு செய்து வைத்திருக்கிறோம். உறவுகளும், சுற்றமும் கூறுவதைப் பொறுத்தே அப்பெயர் இறுதி வடிவம் பெறும்.(அவனின் வாலிப வயதில் மாற்றிக்கொள்ளவும் நேரலாம்) அது வரை எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் அழைப்பது ”குட்டிப் பையா” என்றுதான்.

baby_bala

ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் இருக்கக் கூடிய சிரமங்களை உணர்ந்து கொண்டோம். ஏதேதோ காரணங்களுக்காக பெற்றவர் மீது இருந்த கோபம் கூட மகனின் பிறப்புக்குப் பிறகு குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

டாக்டரா, இன்ஞ்சினீயரா, பத்திரிக்கையாளரா, மென்பொருளாலரா என சில கேள்விகள் இப்போதே சுற்றத்தார் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. 🙂 ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அவன் அடிப்படையில் ஒரு நல்ல மனிதனாக மட்டுமே வளர்க்கப் பட வேண்டும். பிற தேர்வுகள் எல்லாம் அவனது சொந்த விருப்பத்தைப் பொறுத்ததாக மட்டுமே இருக்க வேண்டும். தூண்டுகோலாகவும், வழிகாட்டுதலாகவும் நல்ல கல்வியைக் கொடுக்க தயாராக இருக்கிறோம் நாங்கள்.

—–

பதிவு போட்டு வாழ்த்துகள் சொன்ன பதிவுலக சொந்தங்களின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பெற்றோர் ஆனதற்காக மட்டுமில்லாமல் நல்ல பெற்றோராக வாழ்நாள் முழுமைக்கும் வாழவுமாக எடுத்துக் கொள்கிறோம்.

நன்றி.

—–
பின் – குறிப்பு:- சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன். 🙂

பின் சேர்க்கை:- பலத்த எதிர்ப்புக்கு பின் தமிழில் – கனிவமுதன் – என்று பெயர் வைத்திருக்கிறோம்.


Comments

65 responses to “அப்பா!”

  1. //”குட்டி தல” அப்பா பேச்சை கேட்காம அம்மா பேச்சு கேட்டு நல்லபுள்ளையா,சமத்துபுள்ள்ளையா இருப்பா!
    //

    உங்க டைமிங் சென்சே தனி குசும்பரே

  2. வாழ்த்துகள் திரு & திருமதி பாலபாரதி!

    – என். சொக்கன்,
    பெங்களூர்.

  3. வாழ்த்துகள் தல 🙂

  4. பாலபாரதி
    மனதார்ந்த வாழ்த்துக்கள்.

    அந்தப் புகைப்படத்தில் இருப்பது நீங்கள்தானா?
    தொங்குட்டான் எல்லாம் போட்டிருக்கிறீர்களோ?

  5. என்னது! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா! (என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சா ஸ்டைலில் படிக்கவும்)

    வாழ்த்துக்கள் தல,

    ‘குட்டி தல’க்கும் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்களை சொல்லீடுங்க

  6. இப்போ இருக்கிற நிலையில அப்பா ஆகுறது கூட ஒரு சாதனை தான், தல 😉

    உங்க அப்பா போல நீங்களும் மினிமம் 8-ஆவது பெற்றுக்கொள்ள என் வாழ்த்துக்கள்.

  7. கானா பிரபா Avatar
    கானா பிரபா

    வாழ்த்துக்கள் தல 😉

  8. இனிய வணக்கம். அப்பா பதிவு படித்தேன். எனது அப்பா பற்றி அறிய அழைக்கிறேன். http://kalyanje.blogspot.com/2008_12_01_archive.html படித்துவிட்டு பதிலிடுங்கள். நானும் இராமேஸ்வரம்தான்! நன்றி
    அன்புடன்
    கல்யாண்

  9. ///ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அவன் அடிப்படையில் ஒரு நல்ல மனிதனாக மட்டுமே வளர்க்கப் பட வேண்டும்./////

    அருமை. இதே தான் எமது எண்ணமும்.

    வாழ்த்துக்கள் தல.

  10. பா.கா.ச -விற்கு புதிய வருகையோ !
    வாழ்த்துகள் தல ! வாழ்க வளமுடன்!

    -தமிழி

  11. ஜெ. பாலா, கோவை Avatar
    ஜெ. பாலா, கோவை

    வாழ்த்துக்கள்…

    குட்டிப்பையனையாவது……..

  12. ‘தல’ – வாழ்த்துக்கள்!

  13. தல.. சின்ன வயசுல அழகாத்தான் இருந்திருக்கீங்க 😉

  14. எங்கையோ படிச்ச ஞாபகம்… “உங்க அப்பா செஞ்சது சரின்னு உனக்கு புரியுற வயசுக்குள்ள நீ செய்றது தப்புன்னு சொல்ல உனக்கொரு புள்ள பொறப்பான்னு” அது நெஜமாயிடுச்சு போல இருக்கே…

    தாமதமா வந்ததுக்கு மன்னிக்கவும்…

    வாழ்த்துகள்

  15. manoj Avatar
    manoj

    vazhthukkal nanpare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *