Category: சிறுகதை

  • காற்றைப்போல எளிய கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

    யெஸ்.பாலபாரதியைப் பல ஆண்டுகளாகப் பழக்கமென்றாலும் அவர் எழுத்துக்களை இதுவரை நான் வாசித்ததில்லை. கோட்டி முத்து பாரதியின் ஒரு பாட்டு பொம்மை கடந்துபோதல் தண்ணீர் தேசம் துரைப்பாண்டி பேய்வீடு நம்பிக்கை சாமியாட்டம் சாமியாட்டம்-2 ஆகிய இந்தப்பத்துக்கதைகளை 2003லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்.நம்மைவிடப் பெரிய சோம்பேறி ஒருத்தரைப் பார்த்துவிட்ட அற்ப சந்தோசம்தான் முதலில் எனக்கு ஏற்பட்டது..35 ஆண்டுகளில் 29 கதைகள் எழுதியவன் நான்.ஆகவே என்னிடம் ஒரு முன்னுரை அல்லது அணிந்துரை வாங்கிப்போட பாலபாரதி எடுத்த முடிவு அந்த…

  • சாமியாட்டம்- சிறுகதை

    ஆடி மாதம் முழுவதும் சென்னையில் இருக்கும் எல்லா அம்மனுக்கும் பாலாபிஷேகம் நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கூழாபிஷேகம் நடந்துவிடுகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் சின்னஞ்சிறு அம்மன் கோவிலிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மொட்டை போடுவதாக நேர்த்தி செய்வது போல, கூழ் ஊற்றுவதை நேர்த்தி செய்து ஆடிமாதத்தில் நிறைவேற்றுகிறார்கள். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ராமேஸ்வரம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் தொடங்கி புரட்டாசி மாத இறுதி வரை பல்வேறு திருவிழாக்களால் களைகட்டும். அதில் மிகவும் விசேஷமானது ராமநாதசாமியின் திருக்கல்யாணமும், தபசுத்திருவிழாவும்.…

  • கடந்து போதல்.. (சிறுகதை)

    பயங்கரமான அந்த அலறலில் உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். எனக்கு முன்னமே கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. எத்தனையாவது அலறலில் உறக்கம் கலைந்தது என்பது தெரியாது. ஆனால் ரேவதி முதல் சத்தத்திலேயே எழுந்திருக்க வேண்டும். படுக்கையில் விழுந்த பின் இடையில் நான் எழுவதென்பது நடக்காத காரியம். அவளோ எனக்கு நேரெதிர் இரண்டு முறையாவது எழுந்து விடுவாள். பல முறை கனவுகளினால் பயந்து போய் என்னை எழுப்பி,எழுப்பி சோர்ந்து போய் படுத்திருக்கிறாள். இதை காலையில் அவளே சொல்லும் வரை…

  • நம்பிக்கை (சிறுகதை)

    பஞ்சுப் பொதிகள் போல மேகங்கள் பாண்டியின் முகத்தில் அறைந்தன. வலிக்கப்போகிறது என்று கண்களை இறுக்கிக்கொண்டான்.. வலிக்கவில்லை. மேகங்களைக் கடந்து வந்து பறந்து கொண்டிருந்தான். வரிசையாய் பறக்கும் கொக்கு கூட்டம் ஒன்று இவனைக் கடந்து சென்றது. இவனும் அவைகளை முந்த வேண்டும் என்று நினைத்து கைகளை வேகமாக அசைத்தான். ஆனாலும் அவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பறக்க முடியவில்லை. ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ ‘ட்டண்டனக்..ட்டண்டனக்.. ட்டண்டனக்கட.. ட்டண்டனக்..’ கொக்குகளின் வரிசையில் கடைசியாகப் பறந்துகொண்டிருந்த ஒரு கொக்கு இவனைப் பார்த்து…

  • கோட்டி முத்து

    நான் படித்த தொடக்கப்பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் விளிம்பு வெடித்த அந்த அலுமினிய குண்டா இன்றும் அப்படியே இருக்கிறது. அதில் கொட்டப்படும் மீதி சோற்றுக்கென.. மதிய வேளைகளில் நாய்களின் கூட்டமொன்று அலைந்தபடியே இருக்கிறது. ஆனால், அந்த குண்டா யாருக்காக வைக்கப்பட்டதோ அவனை இன்றளவும் எதிர்பார்த்தபடியே தான் இருக்கிறார்கள் பள்ளிக்குழந்தைகளும், ஆசிரியர்களும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் மட்டும் தான் அவன் போயே போய் விட்டதின் காரணம் தெரியும். கோட்டி முத்து. இந்த பெயரைச் சொன்னால் என் ஊரில் தெரியாதவரே இல்லை…