Category: சந்திப்பு

  • ஆசானுடன் படம் எடுத்துக்கொண்டேன்

    தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிவொளி இயக்கம் எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது நானும் அதில் தன்னார்வலனாக அதில் இணைந்து செயலாற்றினேன். அப்படியே, அதில் நடிக்கும் வீதி நாடகக்கலைஞர்களைக் கண்டு, நானும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்பியபோது, ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நாடக பயிற்சி முகாம் மாவட்ட அறிவொளியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். பத்து நாட்கள் திட்டமிட்டிருந்த முகாமில் என்னால் நான்கு நாட்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. எங்களுக்கு பயிற்றுவிற்பவராக இருந்தவர்களில்…

  • பாலபாரதி -மா.சிவக்குமார்

    Tuesday, January 06, 2009 பாலபாரதி 2007ம் ஆண்டு சனவரி மாதம். வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அருள் குமாரை சில முறை சந்தித்து எழுத்து, வாழ்க்கை குறித்து பேசியிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறை நாள், ஞாயிற்றுக் கிழமையோ, பொங்கல் நாளோ, அல்லது குடியரசு தினமோ நினைவில்லை. வீட்டில் இணைய இணைப்பு இல்லை, வீட்டுக்கு எதிரில் இருந்த இணையக் கூடத்தில் போய் பின்னூட்டங்களையும் புதிய பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அதுதான் வாழ்க்கையின்…

  • முகமொழி – கவிஞர் பாலபாரதி

    முகமொழி – கவிஞர் பாலபாரதி கவிஞர் பாலபாரதி சமத்துவபுரம் கழிவுநீர் சுத்தம் செய்ய அதே கருப்பன் விறகு விற்க பேரம் நடந்தது மர நிழலில் சாம்பலான குடிசைகள் அடுக்கப் பட்ட சடலங்கள் தின்று திமிறும் சா…தீ புதிய ஊர் புரியாத மொழி ஆறுதலாய் அதே நிலா கழுத்தில் கனத்தது ஓடிப்போன கணவனின் தாலி அன்பை போதிக்கும் மதம் ஆயுதமேந்தி ஆண்டவன் பசிக்கும் வயிறு சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி அவள் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் வெளிநாட்டுப் பறவைகள்…

  • கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்

    ’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..? “?…!…?” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?” “தெரியலையே சார்” ”தெரியலையா? நீங்கல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்டோ?” — இது மாதிரியான கேள்விகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்களிடம் சந்தித்துள்ளேன்.…