Category: சிறுவர் இலக்கியம்

  • மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!

    நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் இச்சிறுபடைப்பின் வழியாக முயன்றுள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் இப்படைப்பை இருகரம் கொண்டு வரவேற்று, விருதளித்து கௌரவித்தது. இன்னும் இன்னும்…

  • சுழல் – சிறுவர் கதை (டைம்லூப் சிறுகதை)

    சுழல் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில், அப்பாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில், காகிதங்களால் பொதியப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததுமே தெரிந்தது, அது மிதிவண்டி என்று. அதைப்பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷம் சுதாகரனை திக்குமுக்காடச் செய்தது. அடுத்த வாரம் வரவுள்ள அவனது பிறந்தநாளுக்கு, வெளிநாட்டில் வசிக்கும் அவனது மாமாவின் அன்பு பரிசு அது. அவர் இணையம் வழியாக ஆர்டர் போட்டுவிட, நேரடியாக இவன் வீட்டுக்கு வந்து, மிதிவண்டியைக் கொடுத்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம். அதன் மீது சுற்றி இருந்த ஜிகு ஜிகு பிளாஸ்டிக் தாள்களை…

  • சட்டம்

    தங்கள் குடிசைக்கபகுதிக்கு அருகில் கட்டப்படும் கட்டுமான நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பரமசிவம். அவரது மகன் வேலன் ஏழாம்வகுப்பு படித்துவந்தான். திடீரென பரவிய தீக்கிருமியால், வேலனின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கொரோனா கால ஊரடங்கினால் மக்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் கட்டடப்பணிக்கு அரசு அனுமதி அளித்ததும், வேலை மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வீட்டில் இருந்த வேலன், கட்டட வேலைகள் நடப்பதை வேடிக்கை பார்க்கப்போவான். சில நாட்கள் தன் அப்பாவுக்கு…

  • தாத்தா பயந்த கதை

    தாத்தா பயந்த கதை கோடை விடுமுறையில் கிராமத்திற்கு வந்திருந்தான் ஆதவன். அவன் தாத்தாவும், அம்மாச்சியும் மற்ற கிராம மக்கள் போலவே விவசாயம் செய்துவந்தனர். பகலில் வயலுக்குச்செல்லும்போது ஆதவனையும் உடன் அழைத்துச்செல்வர். மாலையில் வீடு திரும்பியதும், முன் வாசல் பக்கம் அமர்ந்துகொண்டு, தினம் தினம் கதை கேட்பது இவனின் வழக்கம். அம்மாச்சி ரத்தினமோ, தாத்தா மாரிமுத்துவோ இருவரில் ஒருவர் சமையல் செய்யப் போய்விடுவர். மற்றொருவர் இவனுக்கு கதை சொல்வார்கள். அன்று மாலை திடீரென மின் வெட்டு. அகல்விளக்கை ஏற்றிவைத்தார்…

  • ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

    சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் 2020’ விருது வழங்கும் விழா, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்மாதம் (நவம்பர்) 14, 15ஆம் நாட்கள் என்று முடிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ள ஒடிசா செல்கிறேன். பருவநிலை ஒத்துழைப்போடு, எவ்வித தடங்கலும் இன்றி பயணம் நிறைவேறவேண்டும் என்பதே இப்போதைய அவா! (அடித்து துவைக்கும் மழை, அன்றைய நாட்களில் கொஞ்சம் ஓய்வெடுக்கவேண்டும்)