Category: வாசகப்பரிந்துரை

  • காகங்கள் ஏன் கருப்பாச்சு?

    கிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்..? என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. விலங்குகள் சொல்லும் எந்தப் பதிலும் இவற்றைச் சமாதானப்படுத்தவில்லை என்பதால் இவற்றின் பயணம் தொடர்கிறது. நமக்கும் சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. தொடர்…

  • மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்

    ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே…

  • வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)

    வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது செய்த சாகசங்கள் பற்றி எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்; பின் ஒரு போரில் காயம்பட்டு, படுக்கையில் சாய்கிறான் பாவெல். ஆனாலும் கம்யூனிஸ்ட்…

  • சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள்

      சேவல் ஏன் கூவுகிறது தெரியுமா? ஆம்… அதற்கொரு கதை இருக்கிறது. இந்திய சிறுவர் நாடோடிக்கதைகள் படித்தபோது, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். நாடோடிக்கதைகளின் ஆசிரியர்கள் இன்னாரென்று கூறமுடியாது. பலவும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, அப்படியே எல்லைகள் கடந்து பல தேசங்களையும் இக்கதைகள் அடைந்துள்ளன. அவற்றை ஆங்காங்கே தொகுத்து எழுத்துவடிவில் சிலர் பதிவு செய்தும் வைத்துள்ளனர். அதனாலேயே இக்கதைகள் சாகாவரம்பெற்று இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்றே சொல்லலாம். இந்திய தேசத்தில் சொல்லப்படுகின்ற பல நாடோடிக் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, சுட்டிவிகடனில்…

  • சாகசங்களை அள்ளித்தந்த ஒரு பயணம்

      பயணங்கள் எப்போதுமே சுகமானவை. அதிலும் அனேக சிறுவர்களுக்கு பயணங்களின் மீது பெரும் காதலிருக்கும். பயணப்படும் ஊர் பற்றியோ, அங்கே காணப்போகும் அரிதான விஷயங்கள் பற்றியோ எவ்வித அக்கரையுமின்றி இருப்பதைக் காணமுடியும். அவர்களுக்குப் பயணங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைக்கொடுக்கும். ஒரு குடும்பம் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறது. எதிர்பாராத விதமாகப் புயல் தோன்றக் கப்பல் உடைந்து நீர் உள்ளே வரத்தொடங்குகிறது. குடும்பத்தின் தலைவனும், தலைவியும் அவர்களது பிள்ளைகளுடன் சிறுபடகில் தப்பிக்க நினைக்கிறார்கள். அப்போது கப்பலில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளையும் காப்பாற்றவேண்டுமென்று…