படித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.

அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள்.

நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது.

“பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

என்று பாடல் ஓடிக்கொண்டிருகும் போதே, வீட்டுக்குள் வந்த பக்கத்துவிட்டு ரவுசு கேட்டான், ”அங்கிள் இவங்கள எல்லாம் அவங்க அம்மா அடிக்க மாட்டாங்களா..”

“ஏண்டா அப்படிக்கேக்குற..?”

”பாருங்க, தண்ணீயில நனைச்சுட்டதால சிவாஜி நடுங்கி கிட்டே இருக்கார். அப்படியே பாடுற மாதிரி எடுத்திருக்காங்களே’

ஙே!!!!!!

————

இன்று காலை அலுவலகம் போக வீட்டில் இருந்து வெளியே வந்தால், பக்கத்தில் இருக்கும் கோயில் வாசலில் பூ விற்கும் ஆயா ஏதோ சத்தம் போட்டு, ரவுசை விரட்டிக்கொண்டிருந்தார்.

நான் இடையில் புகுந்து, என்ன விபரம் என்று கேட்டேன். பூக்கார ஆயாவை முந்திக்கொண்ட பையன் என்னிடம் புகார் பட்டியலை வாசிக்கத்தொடங்கினான்.

“அங்கிள், உள்ள இருக்குற சாமிக்கு கீரை மாலை சாத்தி இருந்தாங்க. நேத்திக்குக்கூட பார்த்தேன். நானும் கீரை மாலை போடலாம்னு கேட்டா, இந்த ஆயா அப்படி எல்லாம் மாலையே இல்லைன்னு சொல்லுறாங்க” என்றான் ஆற்றாமையுடன்.

நான் குழப்பமாக பூக்கார ஆயாவைப் பார்க்க, அவரோ, “சார் அப்படி எல்லாம் ஏதும் வழக்கமில்லைன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறான். நீங்க தான் இவனுக்கு புரியவைக்கனும். பிரஸுல வேற இருக்கீங்கோ.. சொல்லிப்புரியவையுங்க”என்றார். (பிரஸுல வேலை செய்யுறது ஒரு குத்தமாய்யான்னு மைண்ட் வாய்ஸ் சொன்னது)

”டேய், அதுதான் இல்லைன்னு சொல்லுறாங்கள்ல.. அப்புறம் ஏண்டா பிடிவாதம் பிடிச்சுகிட்டு இருக்க.. போடா”என்று அவனை நானும் விரட்டப்பார்த்தேன்.

அவனோ விடாப்பிடியாக, உள்ள வாங்கசார் காட்டுறேன்னு, கையைப்பிடிச்சு கோயிலின் உள்ளே இழுத்துச்சென்றான். ஆயாவும் கடையைப் போட்டு விட்டு எங்கள் பின்னாடியே வந்தார்.

நேராக அனுமார் சன்னதிக்கு கூட்டிக்கொண்டுபோய், அனுமாரைக் காட்டினான்.

அங்கே துளசி மாலை போடப்படிருந்தது.

அவ்வ்வ்வ்!

பக்கத்துவீட்டு ரவுசு முதல் பாகம் இங்கே!


Comments

4 responses to “பக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2”

  1. இப்படி சூட்டிகையும் குறும்புமாக இருக்கும் பையன்கள் பெரியவர்கள் ஆனதும் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள்.

  2. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    எங்க மானேஜர் சொல்லும் payback time.. இதெல்லாம் நீங்களே செய்ய‍ நினைச்சு, முடியாம, இப்போ பக்க‍த்து வீட்டு வாண்டு உங்க கிட்ட‍ வந்து செஞ்சு படுத்துறது மாதிரி தோணுதே…

  3. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

    தொடர வாழ்த்துக்கள்…

  4. அன்பரசன் அப்புடிங்ற ஒரு ரவுசு ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறார்.

    அவங்க அம்மா அவனை வைத்துக் கொண்டு படும் பாடுகள் எழுத முடியாத அளவுக்கு இருக்கு. அவங்க மிஸ் இவன் சேட்டையை தாங்க முடியாமல் ராஜினமா கடிதம் கொடுக்கும் அளவுக்கு போய் விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *