கடந்த சில நாட்களுக்கு முன் தம்பி குசும்பனிடமிருந்து மடல்.. அவரின் பதிவுகள் குறித்த எனது எண்ணத்தை அனுப்பும் படி கேட்டிருந்தார். ஆனால்.. என்னுடைய பணிச்சூழல் எழுதவிடாமல் செய்து விட்டது. உண்மையில் குசும்பனின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது.. போட்டோக்களை கிராஃபிக்ஸ் செய்வதும், புகைப்படங்களுக்கு அவர் எழுதும் கமெண்ட்டும் தான். நிச்சயமாக நம்மிடையே நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது என்று அடித்து(யாரைன்னு கேட்காதீங்க!) சொல்லமுடியும். அதையும் எழுத்தில் வடிப்பது என்பது தனிச்சிறப்பான விசயம்.

இன்று ஜெயமோகனிடம் அத்தகைய நகைச்சுவையுணர்வை பார்க்கமுடிகிறது. அவ்வப்போது சாருவும் கூட எழுதுவார். இவர்களை விட அ.முத்துலிங்கம் குறிப்பிடதக்கவர். (இவரையே கூட ஆசானாக்கிக்கொள்ளலாமா.. என்றும் ஆலோசனை உண்டு) ஆனாலும் வெறும் நகைச்சுவை காலத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பது என் எண்ணம். நகைச்சுவையோடு நையாண்டியும் கலந்தால் அது அழியாப்புகழ் பெறும் என்றும் திடமாக நம்புகிறேன். எப்படி காதலுக்கும், நட்புக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை கூறுவார்களோ, அதுபோலவே நகைச்சுவைக்கும், நையாண்டிக்குமான இடைவெளி. இதனை உணர்ந்து குசும்பன் தொடர்ந்து இயங்குவாரெனில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.

கலக்குங்கள் குசும்பன்..
———-
தேர்தல் பேரங்கள் இன்னும் முடிந்தபாடில்லை. தொகுதி பங்கீடு ஒரு பக்கம் சில கட்சிகளை கூட்டணி விட்டே துரத்திவிடும் போலத் தெரிகிறது. கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று குமரிமாவட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடப்போவதாகவும் குளச்சல் எம்.எல்.ஏ ஜெயபால் அறிவித்து இருக்கிறார். இதற்கிடையில் காங்கிரஸ் தொழிற்சங்கத்திற்கு நான்கு சீட்டு ஒதுக்க வேண்டும் என INTUC காரர்கள் கொடிபிடித்து கோசம் வேறு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்ததே 16 அதில் உங்களுக்கு 4 என்பதெல்லாம் ஓவராகத்தெரியவில்லை என்று அவர்களிடம் தங்கபாலு பேசியதை நேரடியாக கேட்டு சிரித்துக்கொண்டேன். 🙂
—–
இன்னும் சில முக்கிய தலைகள் மதிமுக வில் இருந்து விலகி, திரும்பவும் தாய் கழகமான திமுக-விற்கு வருவார்கள் என்று தெரிகிறது. பாவம் வைகோ.. மிகவும் நொந்து போய் இருக்கிறார். இவர் பா.ம.கவுக்கு நிகராக சீட் கேட்கிறாராம். அதிமுகவோ ஒன்றிலிருந்து மூன்று வரைத் தான் தரமுடியும் என்று சொல்லி வருவதாக தகவல் கிடைக்கிறது. அதனால் அண்ணன் கூட்டணி மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.. “என்னமோ நடக்குது.. மர்மமாய்.. இருக்குது..”
——
சில நாட்களுக்கு முன்பு கணேஷ் என்பவர் சிலருக்கு ஆயிரம் ரெண்டாஆ…யிரம், மூவாஆஆ…யிரம்…(மாமா பிஸ்கோத்து :))) ) என்று பின்னூட்டங்களை அள்ளி வீசியதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். செந்தழல் ரவி போட்ட பதிவில் அவரின் பின்னூட்டங்களையும் கண்டேன். ரசித்தேன்(இது பலருக்கு வருத்தத்தையும், சிரமத்தையும் கொடுத்துள்ளது என்பதையும், அதனால் அவரது செயல் கண்டனத்துக்குரியது என்பதையும் மறுப்பதற்கில்லை). மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. நிச்சயம் அவர் பதிவு தொடங்கினார்.. பின்னூட்டம் போட முடிகிறதோ இல்லையே.. நான் தினமும் படிப்பேன். அசத்தக்கூடிய திறமைகளை வைத்திருக்கும் அவர் இப்படியான வெட்டி வேலைகளில் ஈடுபடுவது தான் வருந்தவைக்கிறது. நான் பலரிடம் சொல்லி வருவது இதைத்தான்.. எழுத்து நன்றாக இருந்தால்.. நிச்சயம் அதற்கான அங்கீகாரம் தாமதமானாலும் கிடைக்கும். வாருங்கள் கணேஷ்.. பதிவைத் தொடங்குங்கள்.
——–


Comments

8 responses to “விடுபட்டவை 31.03.09”

  1. குசும்பனுக்கு வாழ்த்தும்,

    அது என்ன பதிவர் சதுரம்..? :))

  2. ண்ணா.. வாங்கண்ணா.. எப்பல்லாம் நாங்க சங்கடத்துல தவிக்கறமோ அப்பல்லாம் கிருஷ்ணபரமாத்மா மாதிரி ஆஜராகிடுறீங்க…

    அப்பறம்.. தலன்னா ச்சும்மாவா!

  3. குசும்பனுக்கு வாழ்த்துக்களும்.

    ‘தல’க்கு நன்றிகளும் – தேர்தல் தகவல்களுக்காக.

  4. பின்னூட்ட கணேஷுத்தனம்

  5. /ண்ணா.. வாங்கண்ணா.. எப்பல்லாம் நாங்க சங்கடத்துல தவிக்கறமோ அப்பல்லாம் கிருஷ்ணபரமாத்மா மாதிரி ஆஜராகிடுறீங்க…//

    பரிசல்!

    கும்ம ஆள் கிடைக்காம சங்கடத்துல தவிக்கிறோம்னு தெளிவா சொல்லிட்டீங்களே!

    பா.க.ச இருக்க பயமேன்! கை விட்டுடுவாரா என்ன?

  6. சிவஞானம் ஜி Avatar
    சிவஞானம் ஜி

    சென்னை-கிழக்கு என்ன ஆச்சு?

  7. kusumban Avatar
    kusumban

    நட்புக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை கூறுவார்களோ, அதுபோலவே நகைச்சுவைக்கும், நையாண்டிக்குமான இடைவெளி….நல்ல எதிர்காலம் இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.
    //

    நன்றி தல! உங்கள் ஆசிபடியே எல்லாம் நடக்கட்டும்!

  8. அண்ணாச்சி,
    அப்டியே அந்த கணேஷ நைஸா உசுப்பேத்தி பதிவு எழுத வைச்சுட்டா அவர் பதிவுகள்ல போயி அதே பின்னூட்டக் கும்மிகளை செஞ்சு அவர வெறுப்பேத்தியிரலாம்னு தானே நினைக்கிறீங்க? உங்க திட்டம் புரிஞ்சுப் போச்சு தல,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *