நம்மில் பலரும் உடலியக்கம் அளவில் மகிழ்ச்சியான வாழ்வே வாழ்கின்றோம். அதனால் தான் பிறர் வலியை உணர்வதே இல்லை. ஆம்! மாற்றுத்திறனாளிகள் என்ற சமூகத்தில் வலியும் கனவுகளைப் பற்றியும் அறியாதவர்களாகவும் அதுபற்றிய பிரக்ஞை கூட இல்லாதவர்களாகவுமே உள்ளோம்.

பல இடங்களிலும் எல்லோரையும் உள்ளடக்கிய சூழல் உருவாக வேண்டும் என்பதைப் போலவே சில இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பட்ட சில வசதிகளும் தேவை என்பதை உணர்வோம். ரயில் நிலையம் தொடங்கி, மருத்துவமனை, விமானநிலையம் என எல்லா இடங்களிலும் தளம் வழுவழுப்பாக இருந்தால் நமக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதே தளத்தில் ஊன்றுகோல் துணைகொண்டு நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளியால் நடக்க முடியாது. ஆம், அந்த வழுவழு தரை, அவர்களை வழுக்கி விழச்செய்யும்.

*பொது இடங்களில் நீங்களும் நானும் பயன்படுத்தும் கழிவறையின் சின்னக் கதவுகள், சக்கரநாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறக்காது.

*தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் துணி எடுக்க எத்தனை முறை பெரிய பெரிய கடைகளுக்கு சென்றிருப்பீர்கள். ஒருமுறையேனும் அங்கே சக்கரநாற்காலியில் தனக்கான ஆடை எடுக்கவந்த ஒருவரையாவது கண்டிருக்கிறீர்களா? நிச்சயம் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு பிடித்த ஆசையைக்கூட அவர்களால் எடுக்க முடியாது. எட்டு பத்து படிகள் ஏறி எப்படி செல்வர்?

*நம்மில் பலருக்கும் பிடித்த, கடற்கரையில் கால் நனைக்க முடியாது ஏங்கும் மாற்றுத் திறனாளிகள் ஏராளம்.

*ஆம், இது மாற்றுத்திறன் மக்களில் நீண்ட நாள் கோரிக்கை. இதனை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ‘செல்பி பாயின்ட்’ பின்புறம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்லது. இதற்காக சிங்0கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடு ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கி வேலைகள் தொடங்கப்பட்டன. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப் பாதையானது, 263 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

* முழுக்க முழுக்க மரக்கட்டைகளால் வடிமைக்கப்பட்ள்ள இதில் மழைநீர் தேங்காது. முழுவதும் வடிந்து போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைப்பாதையில் கைப்பிடிகளுடம் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊன்றுகோல் துணையுடன் நடக்கும் முதியவர்கள், மணலில் நடக்கும் சிரமமின்றி கடலை அருகில் இருந்து ரசிக்கலாம். கடல் பரப்பில் எந்த இடத்தில் வேண்டுமானலும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*மாற்றுத்திறனாளிகளுக்கான இப்பாலத்தை, தங்கள் காலில் மணல் படாமல் இருக்க, நமது பொதுஜனங்களும் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர். கூட்டம் கூட்டமாக அதில் நடப்பதும் ஓடுவதுமாக உள்ளனர். ஒருவேளை இந்தப் பாலம் உடைந்துபோனால்… என்னவாகும் என சிந்தித்துப் பார்த்திருப்போமா? உடைந்துபோனால், சரி செய்ய பல மாதங்கள் ஆகும். அல்லது சரி செய்யப்படாமலேயே கூட போய்விடலாம்.

*கடலை அருகில் சென்று பார்க்கும் ஆசையும், கடல் அலைகள் தங்களின் கால்களையும் நனைக்குமா என்னும் மாற்றுத்திறனாளிகளின் ஏக்கம் கனவாகவே போய்விடும்.

*அந்த பாலம் நமக்கானது அல்ல. அது மாற்றுத்திறனாளிகளுக்கானது. அதை பயன்படுத்தாமல் இருப்போம். மாற்றுத்திறனாளி அல்லாத எவரை பயன்படுத்த அனுமதிக்காமலும் இருப்போம்.

நன்றி

=================