அறிவுசார் குறைபாடு உடையவர்களும் மாற்றுத்திறனாளிகள் தாம்!
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாள்


* ஆட்டிச நிலைக்குழந்தைகளை வைத்துக்கொண்டிருப்போருக்கு மூன்று மாதத்திற்கோ, ஆறுமாதத்திற்கோ ஒருதரம் உளவியல் ஆலோசனைகள்.* மாதம் ஒரு முறை, தன்னார்வலர்கள் வந்து 8மணி நேரம் குழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, பெற்றோருக்கு சற்று ஓய்வு வழங்கப்படுகிறது.

* ஓட்டப்பந்தையம் மாதிரியான விளையாட்டுப் பயிற்சி+ போட்டிகளில் ஆட்டிசநிலைக்குழந்தைகளுடன் இதரக்குழந்தைகளையும் கலந்து, 1+1 விகிதத்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

* 18 வயது பூர்த்தியான ஆட்டிச நிலையாளர்களுக்கு கட்டாயமாக அவர்களின் தகுதிக்கு ஏற்ப, வேலை. ஷாப்பில் சென்டர்ஸ், பெரிய வணிக அங்காடிகளில் பேகிங் பகுதியில், பொருட்களை பாக்கெட் போடுவது, அடுக்கிவைப்பது மாதிரியான பணிகள். குறிப்பாக மற்ற பணியாளர்களுக்கு என்ன சம்பளமோ, அதே சம்பளத்தில்!

* ஆட்டிச நிலைக்குழந்தை குடியிருக்கும் தெருவில், “ஆட்டிசக்குழந்தைகள் வசிப்பிடம்” என்பது போன்ற அறிவிப்பு பலகை. இதன்மூலம் அதிக ஒலிப்பான் தடை, வேகக்கட்டுப்பாடு பயணம் என்பதை அறிவுறுத்தபடுகிறது.

* பள்ளி, மருத்துவம் போன்றவற்றில் சலுகைகள். சிறப்புகவனம் போன்ற அணுகுமுறை!அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பர், அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடப்பதாக பட்டியலிட்டார். ம்… நாம் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு…!

#ஆட்டிசம், #autism #டிசம்பர்3

#சர்வதேச_மாற்றுத்திறனாளிகள்_நாள்
படம் நன்றி: flickrல் anthonylibrarian பக்கம்