வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள்.

பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப் போல இங்கும் கூடியுள்ளது. கிரெடிட் கார்டு பயனர்களிடம் சமீபகாலமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள போலி கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுமிடத்தில் கண்முன்னே கிரெடிட் கார்டு தேய்க்கப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். பார், ஹோட்டல் போன்ற இடங்களில் கிரெடிட் கார்டு உள்ளே எடுத்து செல்லப்பட்டு  நம் கைகளில் திரும்பி வரும் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் கார்டுகளின் டேட்டா(data) திருட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார் தனியார் வங்கியின் திருட்டு தடுப்பு பிரிவின் அதிகாரி ராஜ்குமார்.

உங்கள் கிரெடிட் கார்டின் டேட்டாக்களை(data) திருடி, இன்னொரு போலியான கார்டுகளை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட கார்டுகளை கடைகளுக்கு கொண்டு செல்ல ஒரு கும்பல் தயாராக இருக்கிறது. இக்கும்பல் கமிஷன் அடிப்படையில் வேலைப்பார்ப்பவர்கள் என்கிறார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் கந்தசாமி. (இந்திய அளவில் வங்கி குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிகம் கைது செய்தமைக்காக விருது பெற்றவர்)

தமிழகத்தின் இதுபோன்ற போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட ஒருவரை சென்னை காவல் துறை கைது செய்தது. இது பற்றிய ஓர் வீடியோ செய்தி.

இதில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தனித்தனமையுடையது (Exclusive Visual) மிகுந்த சிரமத்திற்கிடையே இக்காட்சிகளை பதிவு செய்தோம்.

DUPLICATE CREDIT CARD

நன்றி:- ZEE TAMIZH தொலைக்காட்சி. 🙂


Comments

4 responses to “DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)”

  1. நல்ல தகவல் தல..

    எப்பூடில்லாம் யோசிக்குறாய்ங்க…..

  2. தேவையான தகவல். பகிர்வுக்கு நன்றி…

  3. மிகவும் பயனுள்ள தகவல்.

    பகிர்வுக்கு நன்றி.

  4. r.gopal Avatar
    r.gopal

    very best information. r.gopal from kancheepuram tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *