ஒரு செல்போனும், கிப்ட் கவரும் – பின்னே ஞானும்..!

இரண்டு செல்போன்களில் ஒன்றை முன்னமே இசை எங்கிருந்து வருது பாணியில் தரையில் தட்டித்தட்டி.. காலி பண்ணிவிட்டான் கனிவமுதன். அதில் சில நேரங்களில் எதிரில் இருந்து அழைப்பவரின் எண் வராது, அல்லது நான் பேசுவது எதிராளிக்கு கேட்காது. இன்னும் சில சமயங்களில் சத்தமே வராது, ஆனால் எதிராளிக்கு ரிங்க் போய்கிட்டே இருக்கும். இப்படி எத்தனை கோளாறுகள் உண்டோ அத்தனையும் அந்த செல்போன் ஏக காலத்தில் அனுபவித்து வந்தது. ஆனாலும் அதில் எஸ்.எம்.எஸ் அனுப்ப, எண்களை பார்த்துக்கொள்ள என பயன்படுத்தி வந்தேன்.

நேற்று இன்னொரு செல்போனுக்கும் ஆபத்து வந்தது. இரண்டு போன்களையும் கையில் எடுத்துக்கொண்டு ஹாலின் ஒரு மூலைக்குச் சென்று தரையில் கடை பரப்பி, இரண்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். கொஞ்ச சில மணி நேரம் சென்றதும், வீட்டு தொலைபேசி அலறியது. எடுத்தால்.. மொபைலுக்கு என்ன ஆச்சு.. ஏன் சுவிச்ட் ஆப் ஆகியிருக்குன்னு கேட்டாங்க. என்னடா.. ஆச்சுன்னு மொபலைப் பார்த்தால்.. தலைவர் அதில் மூச்சா போய்.. தரையில் தட்டி தட்டி, மூன்று பாகமாக்கி வைத்திருந்தான்.

கையில் எடுத்துப் பார்த்தேன்.. ஒன்றும் செய்யமுடியாது என்று தோன்றியது, சரிபண்ண எப்படியும் இரண்டாயிரம் ரூபாயாவது தேவைப்படும். பேசாமல் அதே விலையில் புதியதாக ஏதாவது மொபைல் வாங்கி விடலாம் என்று முடிவெடுத்து மாலை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பூர்விகாவுக்கு போனோம்.

கடையில் செம கூட்டம். முன்னமே பட்ஜெட்டை முடிவு செய்திருந்தபடியால்.. அதிக நேரம் தேவைப்பட வில்லை. சாம்சங் குரு மாடலில் (samsung guru 35) ஒன்றை தேர்வு செய்துவிட்டோம். விலை ரூ. 2850/-. பில்லு போட்டவர் சொன்னார், சார் அதோ அந்த பக்கம் போய் கிப்ட் வாங்கிக்கொள்ளுங்கள் என்று. எனக்கு ஆச்சர்யம்.. என்னடா இது.. இவ்வளவுக்கெல்லாம் கிப்ட் கொடுக்குறாய்ங்களான்னு.. சரியென.,  அவர் காட்டிய பக்கம் போய் கிப்ட் வாங்கிக்கொள்ளச்சொன்னார் அவர் என்று பில்லிட்டவரை கை காட்டினேன். உடனே இவர், அவரை பெயர் சொல்லி அழைத்து, என்ன..  என்பது போல சைகை காட்டினார். அவரும் ஆமா நான் தான் அனுப்பினேன். கொடு என்று சொன்னார்.

இவர் என்ன மொபைல் வாங்கினீங்க என்று கேட்க, நான் பில்லுடன் மொபைல் டப்பாவை காட்டினேன். அதைப் பார்த்தவர், ஷோகேசுக்கு கீழே குனிந்து எதையோ எடுத்தார். பின் நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வேறு எதையோ துழாவினார். பின் சார் கவர் இல்லை. ஒரு நிமிசம் என்று உட்பக்கமாகவே சென்று அடுத்த பகுதியில் இருந்து சின்னதாக பிளாஸ்டிக் கவர் எடுத்துவந்தார். மீண்டும் கீழே அமர்ந்து கவரைத் திறந்து எதையோ வைத்தார். அதன் பின் கவரின் வாயை மூடி, பின் அடித்து, இந்தாங்க என்று என்கையில் இருந்த மொபைல் வாங்கிய கவரை பிடுங்கி, அதனுள் திணித்தார்.

வீட்டுக்கு திரும்பும் வழியெல்லாம் அந்த விற்பனை பிரதிநிதியின் செயல் எனக்கு வியப்பாக இருந்தது. ஒளிச்சு,ஒளிச்சு கொடுக்கும் அளவுக்கு என்ன கிப்ட் அது என்று ஆவல். வீடு வந்து சேர்ந்ததும், முதல் காரியமாக அந்த கிப்ட் கொடுக்கப்பட்ட சின்னக்கவரை திறந்து பார்த்தேன்.

உள்ளே.. இரண்டு கீச்செயின்களும், ஓரத்தில் ஓவர்லாக் செய்யப்பட்ட இரண்டு கர்சீப்களும் இருந்தன. அதிலும் கர்ச்சீப்பின் நடுவில் பெரிசா.. (சீப்பை எட்டா மடிச்சாக்கூட ஒரு எழுத்து வெளியில் தெரியும்) இது பூர்வீகா மொபைலில் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு என்று ஸ்க்ரீன் பிரிண்டிங்க் வேறு. :))

அடப்பாவிகளா.. இதுக்குத்தான் இந்த பில்டப்பான்னு நினைச்சுகிட்டேன். :))


Comments

17 responses to “ஒரு செல்போனும், கிப்ட் கவரும் – பின்னே ஞானும்..!”

  1. ஹாஹ்ஹாஹா… சத்தியமா என்னமோ ஏதோன்னு நினைச்சு சுவாரசியமா படிச்சிட்டு வந்தேன். படகோட்டி படத்துல வாத்தியார் யூஸ் பண்ணின கர்ச்சீப்பை கொடுத்துட்டாங்களே :)))

  2. தல,

    நல்லா விசாரிச்சீங்களா… கடைக்காரரு பாகசக்காரரா இருக்கப்போறாரு :))

  3. //அடப்பாவிகளா.. இதுக்குத்தான் இந்த பில்டப்பான்னு நினைச்சுகிட்டேன்.//

    உங்களைப் பாத்தாலே எல்லோருக்கும் கலாய்க்கணும்னு தோணியிருக்குது பாருங்களேன் :))

  4. /இது பூர்வீகா மொபைலில் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு என்று ஸ்க்ரீன் பிரிண்டிங்க் வேறு. :)//

    இதைக்கூட சந்தோஷ ஸ்மைலியோட சொல்ற உங்க பெரிய மனது யாருக்கு வரும் ;))

  5. NR Shibi Avatar
    NR Shibi

    haha!

    Poorviga! Pa.Ka.Sa vin corporate member

  6. ha..ha.ha.

  7. காயத்ரி சித்தார்த் Avatar
    காயத்ரி சித்தார்த்

    //இரண்டு செல்போன்களில் ஒன்றை முன்னமே இசை எங்கிருந்து வருது பாணியில் தரையில் தட்டித்தட்டி.. காலி பண்ணிவிட்டான் கனிவமுதன்.//

    🙂

  8. லீவுல பொள்ளாச்சி போனப்ப .. வீட்டு வீட்டுக்கு பூர்விகா ஆரம்பிக்கிறம்ன்னு ஒரு கவர் ல தேங்கா வளையல் கீச்செயின் ஒரு சாமி படம்ன்னு போட்டு குடுத்தாங்க எங்க வீட்டுக்கே ரெண்டு வந்தது.. இவ்ளோ ரூபா வாங்கினதுக்கும் அத விட குறைச்சலா இருக்கே .. :))

  9. கர்ச்சீப்புக்கு இந்த அக்கப்போரா? அடக்கொடுமையே!

  10. தாரணி பிரியா Avatar
    தாரணி பிரியா

    இன்னிக்கு காலையில எங்கப்பாவுக்கு நோக்கியா மொபைல் 1600 ரூபாய்க்கு வாங்கி குடுத்தேன். எக்ஸ்சேஞ் ஆபர்ல குடுத்தது 1100 ரூபாய்தான். கால்கிலோ மைசூர்பாவும், ரெண்டு கீ செயினும் குடுத்தாங்க. சென்னை மொபைல்ல 🙂

  11. @ முத்துக்கா..

    நான் அப்பவே நினைச்சேன். ஃப்ரியா கொடுக்கற பொருளையெல்லாம் காசு கொடுத்து வாங்கறதே தலைக்கு வேலையாகிடுச்சு போல ;))

  12. தல,

    பூர்விகாவுல லேட் நைட்டுல பழைய செல்போன்கள புதுசா கவர் பன்னி விப்பானுங்க. ஜாக்ரத…

  13. V.Chandrasekaar Avatar
    V.Chandrasekaar

    நல்ல நகைச்சுவை. நேரில் பேசுவது போலவே. நுகர்வோரிஸத்திர்க்கு நருக்கென்று ஒரு குட்டு.

  14. […] வேண்டியதிருந்தது (அது பற்றி இங்கே:- http://216.185.103.157/~balabhar/blog/?p=786 ). இந்த கைபேசி வாங்கி ஒரு மாதமே ஆன […]

  15. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    you can give the key chain and kerchief to Kani! that may save your new phone and may be Kani can also experiment if he can wash out the screenprinting by his ucha 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *