தடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)

ஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

எடிட்டர் லெனின் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 6லட்சத்தை இப்படம் வெளியாவதற்க்காக கொடுத்துள்ளார். அவரின் உதவியுடன்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  இப்படத்தின் பிரிண்ட்டை, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்திடமிருந்து பெற்று, தமிழகம் முழுவதும் திரையிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடக்கமாக நாளை ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் (டிசமபர் 3ம் தேதி ) முதலில் சென்னையில்  திரையிடப்படுகிறது. முதலில் சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்கள் திரையிடப்படுகிறது. அதன் பின் ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாக திரையிட சம்மதித்திருக்கிறார்கள். அதுபோலவே அபிராமி, சத்யம் மற்றும் எஸ்கேப்(ராயப்பேட்டை மணிக்கூடு அருகில்) ஆகிய திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக திரையிடப்படவிருக்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இப்படத்தினை திரையிட தமுஎகச முயன்று வருகிறது.

முடிந்த அளவுக்கு நண்பர்களிடமும், உறவினர்களிடமும், அலுவலகத்திலும் ஏன் நமக்குத் தெரிந்தவர்களிடமும் இத்திரைப்படம் தமிழில் வருவது குறித்துப் பேசுவோம். படத்தை பார்க்க வைப்போம். அதன் மூலமாகவாவது அந்த மகத்தான மனிதனின் வாழ்க்கை சொல்லும் செய்திகளை தேடுவதற்கு இப்படம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:-

படத்தின் ஆங்கில ட்ரைலர்:-  இங்கே

படத்தில் இருந்து ஒரு முக்கியமான காட்சி(இந்தி):-  இங்கே

டாக்டர் அம்பேத்கரின் புகைப்படங்கள் இங்கே

பதிவுகள்:-

உண்மைத்தமிழன் – http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_29.html

வே. மதிமாறன் – https://mathimaran.wordpress.com/2010/11/29/43article-342/

மாதவராஜ் – http://www.mathavaraj.com/2010/12/blog-post.html