ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது.

சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 .

ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம் திரும்புகிறதென்பது கொஞ்சம் கசப்பான உண்மை) அதே சமயம் வெளிவந்துள்ள நாஞ்சிலின் அனைத்து நூல்களும் என்னிடம் இருப்பது கொஞ்சம் பெருமைபடக்கூடிய விசயமாக நான் நினைக்கிறேன். நண்பர்கள் பலருக்கும் நாஞ்சில் நாடனின் நூல்களைக் கொடுத்து, அவர்களையும் அவரின் வாசகனாக்கி இருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சியுடனேயே நான் சொல்லிக்கொள்ள முடியும்.

வரும் புதுவருடத்தின் தொடக்கத்தில் சென்னையில் வைத்து, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஜனவரி 3ம் தேதி நடைபெறக்கூடிய இவ்விழா பற்றிய விபரங்களை  எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்க்கலாம்.. அதன் சுட்டி- http://www.jeyamohan.in/?p=11160

வாய்ப்பு உள்ளோர் விழாவில் கலந்துகொள்ளுங்கள். 🙂

நாங்கள் போகிறோம். :))

மேலும் தொடர்புடைய சுட்டி:

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

நாஞ்சில் நாடனின் படைப்புக்கள்


Comments

5 responses to “ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா”

  1. மிக்க நன்றி பாலா,

    நிகழ்சியின் போது சந்திக்க ஆவலாக இருக்கிறோம் .

    அரங்கசாமி

    (நாஞ்சிலுடன் புகைப்படம் எடுக்க, புத்தகத்துல கையெழுத்து வாங்க அரை குவாட்டர் கொடுத்தா போதாது :))) http://216.185.103.157/~balabhar/blog/?p=669

  2. அண்ணாத்தே… ஏனிந்த கொலவெறி! 🙂

    அப்பதிவை மீண்டும் படிக்கவும்.. அது எழுத்தாளர்களை குறித்து சொன்னதல்ல… ;))

  3. […] முழு கட்டுரையையும் படிக்க http://216.185.103.157/~balabhar/blog/?p=830 […]

  4. […] விடுபட்டவை சொல்லிய வண்ணம் செயல்.. Skip to content HomeAboutபெரியார் வாழ்க்கை வரலாறுTAMIL HELPதிண்ணை ← ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக… […]

  5. //சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 .//

    சொன்னது நிஜமாயிற்று , 1500 தாண்டி புயல் வேகத்தில் ஓடிக்கொண்டுள்ளது சூடிய பூ சூடற்க , மற்ற புத்த்கங்களும் நல்ல விற்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *