Tag: செல்லமே

  • கிட்டப்பார்வைக்கு என்ன லென்ஸ்?

    ஞாபக மறதி என்பது, எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். அதனால் உங்கள் வீட்டுப்பிள்ளையும் அப்படி இருந்தால், பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. சிறுவயது விஷயங்களைப் படம்பிடித்தாற்போல நினைவுபடுத்திச் சொல்லி அசத்துபவர்களை, தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால் நேற்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, சிலருக்கு நினைவுபடுத்தினாலும்கூட ஞாபகம் வராது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போலவே நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள, அதற்கான பயிற்சிகள் குழந்தைகளுக்குப் பெரிதும் துணை நிற்கும். ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு ஊரில் ஓர் இளைஞன், ‘‘தன்னுடைய பசுமாட்டை…

  • அட்வைஸ் பண்ணி அறுக்காதீங்க..!

    இன்றைய தேதியில் குழந்தைகளை வைத்துப் பட்டிமன்றம் நடத்தினால், அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பொருத்தமான தலைப்பு என்னவாக இருக்கும் தெரியுமா? ‘அதிகமாக அட்வைஸ் பண்ணுவது அம்மாவா அப்பாவா?’ என்பதைத்தான் தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ் என்ற குளம் வெட்டி, குழந்தைகளை அதில் அமிழ்த்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அறிவுரைகளினாலேயே பல வீடுகளில் பிள்ளைகளின் பார்வைக்குப் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள். உலகில் எல்லோரும் அடுத்தவருக்கு இலவசமாக அள்ளித்தருவது அட்வைஸ்தான். ஆனால், நாமும் அந்த அறிவுரைகளின்படியே நடந்திருக்கிறோமா என்பதை எவரும்…

  • பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா?

      கண் விழித்தபோது, படுக்கையில் இருந்தாள் பவித்ரா. கை, கால் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எட்டு வயதான பவித்ரா மயங்கி விழுந்துவிட்டாள். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.  இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே என்பதைவிட,  அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்று நினைக்கையிலேயே பயம் அதிகரித்தது. அதே சமயம், அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பவித்ராவுக்கு நல்ல ஓய்வு தேவை என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தார். “இவ்வளவு சின்னக் குழந்தைக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. அதனால்தான் மயங்கி…