Tag: செல்லமே

  • ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

    ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் இருப்பது, பேசாமல் இருப்பது என்று ஆட்டிசத்திற்கான சில அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், ஆட்டிசம் குறைபாடுகளை இப்படியானதுதான் என்று வரையறுக்க முடியாது.…

  • திக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்!

    திக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி பேச்சு வரும்னு சொல்ல முடியாது. பிள்ளையைக் காப்பாற்றியதே பெரிசு” என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். சுமார் ஓராண்டு எதுவும் பேசாமல்…

  • உழைப்புக்கு மரியாதை!

    உழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள்! படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல! என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு படியுங்கள்.. உழைப்பு உயர்வு தரும்! உண்மை. இது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், எந்த உழைப்பு உயர்வு தரும்…

  • சுத்தம் சொல்லிக் கொடுங்க!

    சுத்தம் சோறு போடும்! “ அப்ப குழம்பு எது ஊத்தும்?”னு வேடிக்கையா கேட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம்! பதினைந்து வயது வரையிலான சிறார்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படக் காரணம் சுகாதாரமின்மையே என்று உலக சுகாதார நிறுவனம் ஒர் அறிக்கையில் சொல்கிறது. இன்று பள்ளி செல்லும்…

  • ஐந்திலேயே வளையட்டும்!

    கட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் உங்களின் சிறுவயதில் எப்படி இருந்தீர்களாம்?) இப்போது இன்றைய பிள்ளைகளை, கொஞ்சம் கவனியுங்கள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல்…