Tag: இலக்கியம்

  • புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

    யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்? என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம்…

  • அஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்

      மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு பயம்கலந்த மரியாதையோடு விலகி நிற்கும் மாணவனாகத் தள்ளி நின்று, அவரை அவரின் ஆளுமையை ரசித்திருக்கிறேன். அவ்வளவுதான். பொதுவாக காவியம் என்பதன்,…

  • இலக்கிய உலகின் தாதாக்கள்

    ஒரு கேள்வி ஒருவர் முன் வைக்கப் பட்டால் அதற்கு சாதாரணமானவர்கள் பதில் சொல்வதற்கும் பொது வாழ்வில் இருப்பவர் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு அரசியல்வாதியிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர்.  அப்படி பதில் சொல்ல விருப்பமில்லையென்றாலும் அதை நாசூக்காக தாண்டிச் செல்ல வேண்டுமே அன்றி, நீ யார் என்னை கேட்க என்று எகிறுவது நல்ல பண்பாகாது. இதே அளவுகோல்…