Tag: உடற்பயிற்சி

  • பிள்ளைத்தமிழ் 9

    (உடல் பருமன் பாதிப்புகள்) அதிகாலைப்பொழுதில் நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம் என்று ஒரு சிலர் சுறுசுறுப்பாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இன்னும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் வந்து சேரவில்லை. விளைவு, உடலில் தேவையற்ற கொழுப்பு கூடுவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. 40 வயதுக்குள்ளாகவே இதயநோய்ப் பிரச்னையில் சிக்கிக்கொண்ட பலரையும் பார்க்க முடிகிறது. 33 வயதிலே ‘ஸ்டெண்ட்’ வைத்தவர்களைக்கூட நான் அறிவேன். அதைவிடக் கொடுமை என்னவெனில், இன்றைய குழந்தைகளில் பலர், அதிக உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். நானெல்லாம் பள்ளியில்…

  • ஐந்திலேயே வளையட்டும்!

    கட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் உங்களின் சிறுவயதில் எப்படி இருந்தீர்களாம்?) இப்போது இன்றைய பிள்ளைகளை, கொஞ்சம் கவனியுங்கள். காலையில் எழுந்து பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல்…