Tag: கவிதை

  • தகப்பனாய் உணர்தலும் சுகமே!

    — உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. சொற்களற்ற அவனது உலகத்தில் பெயர்கள் அழிந்து வெறும் சப்தங்களாக வெளியேறுகின்றன அவனிடமிருந்து — தோற்றுப்போன முயல் கதையும் தந்திரக்கார நரி…

  • வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

    நாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது கூட்டம் இது.  இதற்கு முன்  ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம். நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே பாய் விரித்து வைத்திருந்தார்கள். சரியாக மணி 3.50க்கு எல்லாம் சிதறிக்கிடந்தவர்கள் எல்லாம் வீட்டினுள் வந்து அமர்ந்துகொண்டார்கள். கூட்டம் அதிகமாக அதிகமாக..…

  • எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது

    கவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, à®…à®´.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது.  கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குழாம் அரட்டையில் ஈடுபடும்போது, எங்களின் பேச்சில் அனேகமாக இலக்கியமும், அரசியலுமே மையமாக இருக்கும். கம்பனிடம் ஒரு கேள்வி…

  • இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…

    ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட் சட்டை எல்லாம் வேலைக்கு ஆவாது. அதனால.. நல்லதா நாலு ஜோடி…

  • கவிதைகள்..

    பார்வைகள் கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம். ~~~~ இருப்பு மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய். ~~~ அடையாளம் தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல். ~~~ இலக்கு உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் நான் வாருவதற்குள்ளாக நீயும் நீ வருவதற்குள்ளாக நானுமென என்றாவதொரு நாள் நேரெதிராய் சந்திக்க நேரும் போது ஒரே திசையை நோக்கியிருக்கும்…