Tag: சிறுவர் இலக்கியம்

  • அப்துல்லாவின் கிளிகள் – சிறுவர் கதை

    “எங்கே இருந்து கிடைச்சுச்சுடா…?” என்று கேட்டான் தமிழ்ச்செல்வன். இடம் : தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். “நாங்க குடி இருக்கிற வீட்டு மாடியிலடா…!” என்று கூறும்போதே அப்துல்லாவின் குரலில் ஒரு பெருமிதம் தெரிந்தது. “எப்படிடா கிடைச்சது..?” “மாடியில காயப்போட்ட துணிகளை எடுத்து வந்துடுன்னு சொல்லிவிட்டு, எங்க அம்மா வீட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மாடிக்குப் போனேன். அங்கே காக்கைகள் கூட்டமாக அமர்ந்து, ‘கா..கா..’ன்னு கரைஞ்சுகிட்டு இருந்துச்சு. என்னடான்னு பார்த்தேன். ரெண்டு கிளிக் குஞ்சுகளை அதுங்க…

  • நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

    நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ இப்படியான குரல்களை உங்களில் பலரும் கேட்டிருக்கலாம். உண்மையில் எனக்கு இக்குரல்களைக் கேட்கும்போதெல்லாம் சிரிப்புதான் எழும். ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லிக்…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -13]

    அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டனர். ஆனால் ஷாலுவால் மரப்பாச்சி கை நழுவிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கும் விடுதிக்கு வந்த பின்னும் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. யாரோடும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். “இதோ பார் ஷாலு… இப்படியே மூஞ்சியைத் தூக்கி வச்சுகிட்டு உட்கார்றதுல எந்த அர்த்தமும் இல்லை. அப்பா வேணும்னா… வேற மரப்பாச்சி வாங்கித்தாரேன்” என்றார். இவள் எதுவும் பேசவில்லை. “அவகிட்ட என்ன கெஞ்சிகிட்டு…

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம் [சிறார் நாவல் -12]

    காரில் இருந்து இறங்கியதும் சுற்றிலும் பார்த்தாள் ஷாலு. அந்த இடம் மலையில் இருந்தாலும் சமதளமாக இருந்தது. மைதானம் போன்ற அந்த இடத்தின் முடிவில் மலையின் சரிவு தொடங்கியது. அதனால் அங்கே சில மைல்கல் நட்டு, மஞ்சள் வண்ணம் பூசி இருந்தனர். அங்கே இவர்களைப்போலவே பாராகிளைடிங்கில் பறக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர் தங்கள் வந்த கார்களை ஒட்டி நின்று கொண்டிருந்தனர். பாராகிளைடிங் பயிற்சியாளரிடம் சென்று செல்வம் பேசிவிட்டு வந்தார். அம்மாவும் சித்தியும் பறக்க மறுத்து விட்டனர்.…