Tag: சிறுவர் நூல்

  • ஆற்றுப்படை

    1 யெஸ்.பாலபாரதியின் நாவலைப் படிக்கப்போகிறீர்கள். ‘முத்திரள் உருவமாக’இந்தக் கதையில் சிலர் சந்திக்கிறார்கள். அவர்கள்  ‘மாய உருவமாகவும்’இருக்கிறார்கள். இந்தச் சொற்களுக்கிடையே இருக்கும் வேறுபாடு, அவற்றின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா? 2 இது அறிவியல் புனைகதையா, மிகுபுனைவா? மேலே சொன்ன இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘எல்லாம் ஒண்ணுதானே, படிக்க சுவாரசியமாக இருந்தால் போதாதா?’ என்று கேட்பவர்கள், இந்த அளவில் இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, கதைக்குள் போய்விடுங்கள். இங்கே அந்த இரு வகைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கப்போகிறோம். அறி(வியல்) புனைகதை…

  • சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

    பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் நேரடியான பிரச்சாரக் கதைகள் இன்றைய குழந்தைகளுக்கு சற்று அலுப்பூட்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். கதையின் முடிவில் இக்கதையினால் அறியப்படும் நீதி…

  • புதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்

    பயணம் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை தொடங்கி, எவரும் வாசித்துவிடக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ள கதைதான் ’இருட்டு எனக்குப் பிடிக்கும்’  இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் ரமேஷ் வைத்யாவுக்கு தனி…

  • சிறார் இலக்கியம்: எதிர்காலம்

      சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. “இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்டார். “வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்” என்று சொன்னேன். “எப்படித்தான் இன்னும் இதையெல்லாம் படிக்கிறியோ?” என்று சலித்துகொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும்…

  • ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவலுக்கான முன்னுரை)

      சாகசகம் பிடிக்காத குழந்தைகளே இருக்கமுடியாது. அப்படியொரு சாகசக் கதைதான் இந்த நாவல். கடல் சூழ்ந்த ஊரில் பிறந்ததாலோ என்னவோ, எனக்கு எப்போதும் கடல் பிடிக்கும். அந்த கடலுக்குள் போய்ப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. அற்புதங்கள் நிறைந்தது அது. கணக்கில் வராத, கோடானுகோடி உயிரினங்கள் அதன் உள்ளே வாழ்கின்றன என்பது அறிவியலாளர்களின் கருத்து. பால்யத்தில் நான் நீச்சல் பழகி, விளையாடிய, பாறைகள் நிறைந்த, அதே இடத்தில் இருந்து கதையைத் தொடங்கியிருக்கிறேன். ஓர் உண்மையைச் சொல்வதானால் சிறுவயதில் அடிக்கடி…