Tag: நாவல்

  • துலக்கம் – மறுபதிப்பு

    2014ஆம் ஆண்டு விகடன் பதிப்பகத்தின் வழியாக வெளியானது துலக்கம் நாவல். அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவனை மூன்று நாட்களுக்குப்பின் வசிப்பிடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் கண்டுபிடித்ததாகவும்; அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தையும் விவரித்தது செய்தி.மற்ற நாடுகளை விடக் கொஞ்சம் புரிதல் உள்ள அமெரிக்கா மாதிரி மேலைநாடுகளிலேயே ஆட்டிச நிலையாளச் சிறுவர்கள் காணாமல் போவதும், அவர்களைக் கண்டுபிடிக்க அந்தக் காவல்துறை திணறுவதுமான பல செய்திகள் காணக் கிடைத்தது. போதிய விழிப்புணர்வு இல்லாத நம்…

  • பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்

    எனது முதல்நாவலான ’அவன் -அது +அவள்’ நாவலை வெளியிட முதலில் அணுகியது வயதில் முதிர்ந்த அந்த தலைவரைத்தான். அவருக்கு என்னை நேரடியாகத் தெரியாது என்றபோதும் நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டார். நான் அழைத்தபோது நாவல் அச்சகத்தில் இருந்தது. நூல் கையில் கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டு அந்த தலைவரைப் பார்த்து கொடுத்துவிட்டு, நிகழ்வுத்தேதியை நினைவுபடுத்திவிட்டு வந்தேன். ரெண்டாவது நாள் அவரிடம் இருந்து அழைப்பு. நேரில் சென்று பார்த்தேன். நாவலைப்பற்றி பாராட்டிவிட்டு, தன்னால் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாது என்று வருத்தத்துடன் சொன்னார்.…

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…

  • பால்யத்தை உயிர்ப்பித்த பதின்

      “புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்?” என்று ஒரு நண்பர்,  பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட நூல் பற்றி என்றால் அதற்கென தனித்தனி பதில் சொல்ல முடியும். அப்படியொரு நூலைப்பற்றித்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய…