Tag: புத்தக வாசிப்பு

  • நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!

    நாற்றங்காலை வலுப்படுத்துவோம்! -யெஸ்.பாலபாரதி தமிழ் இலக்கிய உலகில் பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், ஆசான் எல்லாமும் உண்டு.  அவர்களில் பலரும் ஒரே குரலில் சொல்லுவது, ’தமிழனுக்கு இலக்கியம் படிக்கிற வழக்கமே இல்லை. தமிழ்நாட்டில் இலக்கிய புத்தகமே விற்க முடியாது. அல்லது இலக்கிய புத்தகங்கள் விற்பனையே ஆக மாட்டேங்குது. எங்கள மதிக்கவே மாட்டேங்கிறாங்க’ இப்படியான குரல்களை உங்களில் பலரும் கேட்டிருக்கலாம். உண்மையில் எனக்கு இக்குரல்களைக் கேட்கும்போதெல்லாம் சிரிப்புதான் எழும். ஒரு குழந்தைக்கு கல்வியை சொல்லிக்…

  • உப்பு வேலி – நூல் அறிமுகம்

    (நீண்ட நாட்களாக நூல் அறிமுகம் ஏதும் எழுதவில்லை. பழைய நூல்கள் தான் என்றாலும் எனது வாசிப்பு அனுபவத்தை பதிவு செய்வது நன்றாக இருக்கும் என்று எண்ணுவதால், இனி அவ்வப்போது, நூல்கள் குறித்து எழுததிட்டம்) ராய் மாக்ஸம் எனும் பிரிட்டீர் ஆய்வாளர், ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு நூலை கண்டெடுக்கிறார். அது, 1893இல் வெளியான மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் ஞாபகங்களும் (Rambles and recollections of an Indian official –…

  • புவியாழத்தில் வேர்விட்டு வானளாவிச் செழிக்கட்டும் குழந்தைகள்! -யூமாவாசுகி நேர்காணல்

    யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க நவீன எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர். தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு மிகச்சிறப்பான பிறமொழிபடைப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் முதன்மையான ஆளுமை இவர். தனது மனம் திறக்கிறார். தீவிரமான இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் சிறார் இலக்கியத்தின் பக்கம் எப்படி நுழைந்தீர்கள்? என் பாலபருவத்தில் சிறார் இலக்கியம் அதிகம் வாசித்தேன். வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது நின்றுவிட்டது. பிறகு, மலையாளம்…

  • அடி!அடி!அடி!

    எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின்…

  • மீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை

    மீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால், ராமேஸ்வரத்தில் 500க்கும் குறைவான வீடுகள் கொண்ட, ஒரு சிறுகிராமத்தில் கணவனை இலங்கை ராணுவத்திற்குக் காவுகொடுத்த பெண்கள் வீட்டுக்கு ஒருவரையாவதுப்…