Tag: கட்டுரை

  • சிறார் இலக்கியம் செழிக்க முற்போக்காளர்களின் பங்கு!

    என்னுடைய பால்யத்தை வண்ணமிக்கதாக மாற்றியவர்கள் அப்போதைய சிறார் எழுத்தாளர்கள்தான். திக்குவாய் குறைபாடும், கற்றல்குறைபாடும் சேர்ந்து இருந்த ஒரு மாணவன் நான். இக்குறைபாடுகளினால் பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் எப்படி எல்லாம் ஆட்பட்டுப் போயிருப்பேன் என்பதை இதனை வாசிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். பிறரின் கேலிக்கு ஆட்படும்போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து அழுவேன். இதன் காரணமாகவே தனித்து இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தை புத்தக வாசிப்பு பக்கம் திருப்பினேன். உடன்பிறந்தோருக்கும் வாசிப்பு பழக்கம் இருந்ததால், அவர்கள் படிக்கும் சிறுவர் பத்திரிக்கைகளை நானும் படிக்கத்தொடங்கியவன்…

  • பிள்ளைத்தமிழ் 3

    தொழில் சார்ந்து, நான் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடுவது உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், இன்றைய இளம் வயதுடையோரின் எண்ணங்கள் என்ன மாதிரி இருக்கின்றன, அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினரைப் பற்றியும், இச்சமூகம் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் அறிந்தவனாக இருக்கிறேன். இன்றைய பல பெற்றோர் முக்கியமானதாகக் கருதும் விஷயங்களில் ஒன்று, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் + நீதி போதனை வேண்டாம். படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளைத்…

  • பிள்ளைத் தமிழ்..!

    எனது தோழி ஒருத்தியின் பெண், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தாள். அவளுக்கு ஒரே பெண். நாங்கள் அவள் இல்லத்துக்கோ, அல்லது அவள் எங்கள் வீட்டுக்கோ வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம், தன் பிள்ளையைப் பற்றி புலம்பியபடியே இருப்பாள் தோழி. ‘எப்படியாச்சும் ஒரு டிகிரிய படிக்கவெச்சிட்டா போதும். ஒரு கல்யாணத்தைக் கட்டிவெச்சிடலாம். படிப்பே வரமாட்டேங்குது’ என, விதவிதமான புகார்ப் பட்டியலை வாசித்தபடியே இருப்பாள். அவளது குழந்தை, ஆங்கிலவழிக் கல்வியான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டதில் படிப்பவள் என்பதால், ஊடரங்கு…

  • அஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்

      மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு பயம்கலந்த மரியாதையோடு விலகி நிற்கும் மாணவனாகத் தள்ளி நின்று, அவரை அவரின் ஆளுமையை ரசித்திருக்கிறேன். அவ்வளவுதான். பொதுவாக காவியம் என்பதன்,…

  • பொறாமைப்படு!

    பொறாமையின் பெருமையைக் குறித்து நீங்கள் எப்போதேனும் எண்ணிப் பார்த்ததுண்டோ? எனக்கும் இது வரையில் அது தெரியாமலேதான் இருந்து வந்தது, சில தினங்களுக்கு முன்பு அதன் பெருமை எனக்குச் சட்டென்று புலனாயிற்று பொறாமைப்படு’ என்னும் சூத்திரத்தில் நான் வாழ்க்கையில் வெற்றியடையும் இரகசியம் அடங்கியிருக்கிறது. மேற்படி மகா ரகசியத்தை நான் எப்படிக் கண்டு பிடித்தேனென்று சொல்கிறேன் கேளுங்கள். ஒரு சமயம் நான் என்னுடைய சொந்தக் கிராமத்திற்குச் சென்றேன். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒரு…