Tag: நாஞ்சில்நாடன்

  • நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்

    விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம். நண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர். புளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁 ஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ,…

  • ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா

    நாஞ்சில் நாடன் இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தாமதம் தான் என்றாலும் சரியான நபரை விருதுக்குழு தேர்வு செய்திருப்பது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது. சந்தேகமில்லாமல் எதிர்வரும் புத்தகக்கண்காட்சியில் இம்முறை நாஞ்சில் நாடனின் நூல்கள் அதிகம் விற்பனையாகும். ’டாப் செல்லர்’ அண்ணாச்சி தான் 🙂 . ஒரு வாசகனாகவும், முன்னாள் புத்தக விற்பனையாளனகவும் நான் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என்ன செய்ய.. உண்மையான எழுத்துக்குக்கூட, விருது போன்ற அரிதாரங்கள் தேவைப்படுகிறது, அப்போது தான் மக்களின் கவனம்…

  • மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது

    ”… யதார்த்த நாவல் என்றால் நமது அதிநவீனத் தமிழ்ப் படைபாளிகளிடம் இதழ்க்கடையோரம் இளக்காரமானதோர் கீற்றொன்று காணப்படும். யதார்த்தவாதத்துக்கும் எல்லை ஒன்று இன்மை எனும் தன்மை உண்டு. வெளிப்பாட்டின் தீவிரத்தன்மை தரிசனத் தேடல் இவை இருக்கும் படைப்பாளிக்கு எந்த வடிவமும் சிறந்த வடிவம் தான்…” – நாஞ்சில்நாடன் (கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய துருக்கித்தொப்பி நாவலின் முன்னுரையில்..) இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதுக்காக  தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்பு தேர்வு…