Category: Uncategorized

  • என்னை மன்னிப்பாயா நண்பா!

    இருபது வயதுகளின் தொடக்கக் காலத்தில் எப்போதும் நண்பர்கள் குழுவுடனேயே சுற்றித்திரிவோம். அப்போது என் நெருக்கமாக இருந்த நண்பன் ராமகிருஷ்ணன். மிகவும் நல்லவன். தைரியசாலி. பிறக்கு உதவும் குணம் கொண்டவன். முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என எல்லோருக்கும் தன்னால் உதவும் குணம் கொண்டவன். எப்போதும் ஒன்றாகவே சுற்றுவோம். சின்ன ஊர் என்பதால் காலையில் விடிந்ததும் அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேனிர் கடைக்குச் சென்றுவிடுவேன். அவனும் எழுந்து வந்துவிடுவான். பெரியதாக வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கவேண்டிய நெருக்கடி இல்லாத குடும்பப் பின்னணி…

  • கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு

    எப்போதும் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளர் கு. அழகிரிசாமி. இது அவரின் நூற்றாண்டு. இதனை ஒட்டி, அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்து, விலையில்லாமல் வழங்கவிருப்பதாக தன்னறம் பதிப்பகம் முன்பு அறிவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த மகத்தான செயல்வழி அழகிரிசாமி என்னும் படைப்பாளுமையை அடுத்த தலைமுறை பலரிடமும் கொண்டுபோய் சேர்க்கிறது தன்னறம் பதிப்பகம். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். கவிஞர் ராணிதிலக், அந்நூலினை சிறப்பாகத் தொகுத்துள்ளார். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த நூல் நேற்று கிடைத்தது. இதன்…

  • மகிழ்ச்சியைப் பகிர்தல்!

    ஈரோட்டில் இருந்து இன்று காலை ஜெயபாரதி அம்மா அழைத்திருந்தார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும் சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர் ஓர் அமைப்பாய் ஒன்று திரள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த அமைப்பின் முதல் கூட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நானும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். நீங்கள் பள்ளிக்கு வந்து உரை நிகழ்த்திய பின்னர்தான் இப்படி அமைப்பாய் திரளவேண்டும் என்ற எண்ணமே ஏற்பட்டது அதற்கு உங்களுக்கும் நன்றி எனப் பாராட்டினார். உண்மையில் அந்த பாராட்டு பெரும் மனமகிழ்வைக்கொடுத்தது. ஜெயபாரதி…

  • சிறார் இலக்கியத்திருவிழா -2023

    பள்ளிக்கல்வித்துறையின் ஏற்பாட்டில் சிறார் இலக்கியத்திருவிழா-2023 நடந்துவருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 150 மாணவ மாணவியரை சென்னைக்கு அழைத்து வந்து, ஆறு நாட்கள் தங்க வைத்து, சென்னையைச் சுற்றிக் காட்டி, எழுதுவதற்கும் உரைவீச்சு நிகழ்த்தவும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாணவர்களிடையே உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது உரையினூடாக உருவக்கேலி, குறைபாட்டை வைத்து கேலி செய்வது போன்ற செயல்கள் கூடாது என்று கூறினேன். அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சமூகத்தில் வாழும் சகல உரிமைகளும்…

  • கோடுகள் இல்லாத வரைபடம் – நூல் அறிமுகம்

    +++++++++++++++++++++++++++ நூல் அறிமுகம்: உலகை வலம் வந்தவர்களின் பயணக்குறிப்புகளில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 11 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது. இதில் 10 கட்டுரைகள் மனிதர்களின் பயணக்குறிப்புகளை விவரிக்கிறது. அந்த பயணக்குறிப்புகள் விவரிக்கும் பண்டைய உலகை சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். அதிலும் அப்பயணக்குறிப்புகளில் அதிபுனைவாக கருதப்படும் தகவல்களையும் சேர்த்து எஸ்.ரா வாசகர்களுக்கு குறிப்பிட்டுச்சொல்கிறார். 11வது கட்டுரை, ஒட்ட்கச்சிவிங்கி என்ற உயிரினம் எப்படி நாடுகள் கடந்து இங்கே வந்தது என்பதைப் பற்றி பேசுகிறது. முந்தைய கட்டுரைகளில்…