Category: கட்டுரை

  • பிள்ளைத் தமிழ் 8

    (கற்றல் குறைபாட்டுப் பிரச்னைக்கான தீர்வுகள்) முந்தைய கட்டுரையில், கற்றல் குறைபாடு பற்றியும், அதன் வகைமைகளைப் பற்றியும் ஒரு அளவுக்கேனும் அறிந்திருப்பீர்கள். கற்றல் குறைபாடு ஒரு நோயல்ல; குறைபாடே என்பதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனவே, இதற்கான சிகிச்சை என்பதும், மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது போன்றது அல்ல. முறையான பயிற்சியின் மூலம் இதனை சமாளிப்பதுதான் அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும், இக்குறைபாட்டின் தன்மையும், தீவிரமும் வேறுபடும். எனவே, முறையான, விரிவான மதிப்பீடு அவசியம். யாரை அணுகுவது? சரி!…

  • பிள்ளைத் தமிழ் 7

    (கற்றல்குறைபாடு- தொடர்பாக) பள்ளி செல்லும் பிள்ளைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர், விதவிதமான கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தகவலை, டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் ஆப் இந்தியா என்னும் அமைப்பு சொல்கிறது. இதுவொரு தோராயமான கணக்குதான் என்றாலும், என்னளவில் இது கண்டிப்பாக அதிகமாகவே இருக்கக்கூடும். ஏனெனில், நானே கற்றல் குறைபாடு உடையவன். நான் எந்த புள்ளிவிவரங்களுக்குள்ளும் சிக்காமல் வளர்ந்து வந்துவிட்டேன். இந்தக் கற்றல் குறைபாடு என்ற வார்த்தை, நிச்சயம் பலருக்கும் பரிச்சயமானதாகவும் அல்லது இல்லாமலும்…

  • பிள்ளைத்தமிழ் 6

    குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும்போது, எல்லோருமே மதிப்பெண் முக்கியமில்லை என்று திகட்டத் திகட்ட சொன்னாலும்கூட, யதார்த்தத்தில் யாராலும் மதிப்பெண்களைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்துவிட முடிவதில்லை. நம் குழந்தைகள் நன்கு படிக்க, நாம் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். இரண்டு குழந்தைகள், மலையேறும் பயிற்சிக்காக, கற்கள் பதிக்கப்பட்ட சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தனர். இருவரின் பெற்றோரும், கீழே நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். முதல் குழந்தையின் பெற்றோர், ‘கீழ விழுந்துடாதே, கை வழுக்கிடப்போகுது, கால் சறுக்கிடப்போகுது, பாத்து ஏறு’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருக்க;…

  • பிள்ளைத் தமிழ் 5

    அறிந்தவர், தெரிந்தவர் வீட்டுப் பிள்ளைகளைக் கொஞ்சும்போது, சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் கேள்வி ‘என்னவாகப்போறே?’ என்பது. அந்தக் குழந்தையும், டாக்டர், கலெக்டர் என்று ஏதேனும் ஒரு பதிலைச் சொன்னதும், நாமும் பாராட்டிவிட்டு அடுத்தக் கேள்விக்குப் போவோம். அதே நேரம், நம் சொந்தக் குழந்தையை நோக்கி, நம்மில் எத்தனை பேர் அந்தக் கேள்வியை மனமாறக் கேட்கிறோம் என்று பார்த்தால், பலரிடம் பதில் இருக்காது. அப்படியே இருக்கும் என்றாலும், அக்குழந்தை சொல்லும் விஷயங்களை நாம் நம்பிக்கையோடு ஒப்புக்கொள்கிறோமா என்றெல்லாம் யோசித்துப்…

  • பிள்ளைத்தமிழ் 4

    நமது குழந்தைகள் யாரோடு அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று கேட்டால், சந்தேகமே இல்லாமல் பெற்றோர்களாகிய நம்மோடுதான். ஆனால், அதில் எவ்வளவு நேரம் பயனுறு நேரம் என்ற கேள்விக்குப் பெரும்பாலான பெற்றோரிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன். பயனுறு நேரம் என்றால் என்ன? பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் செய்ய வைப்பது போன்ற படிப்பு சார்ந்த வேலைகள் என, இதில் பாதிக்கும் மேற்பட்ட நேரம் கழிந்துவிடும். அதுபோக, மீதமுள்ள நேரத்தில் குழந்தைகளுடனான நம்…