Category: சிறுகதை

  • பாரதியின் ஒரு பாட்டு -மா.சிவக்குமார்

    பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் – பாலபாரதி) முதல் கதை – கோட்டி முத்து இரண்டாவது கதை – பாரதியின் ஒரு பாட்டு. 1. சிறு சிறு சம்பவங்களின் மூலம் சிறு சிறு விபரங்கள் மூலம் ஜெயாவைப் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கிறது. ஜெயா படிப்பதை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டு நடைமுறையுடன் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவள் என்று தெரிகிறது. ஜெயா ஒன்பதாவது படித்தாலும் வளர்ந்த பெண் என்று தெரிந்து விடுகிறது. வயதுக்கு வந்த பிறகு போராடி தந்தையின்…

  • சாமியாட்டம் – நூல் அறிமுகம் – விழியன்

    சாமியாட்டம் – நூல் அறிமுகம் பாலபாரதி என சிலராலும் தல என பலராலும் அழைக்கப்படும் எஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். வழக்கமாக சிறுகதை தொகுதிகள் வாசிப்பது வேகமாக சென்றுவிடும். ஆனால் இந்த தொகுப்பை அத்தனை வேகமாக வாசிக்கமுடியவில்லை. காரணம் அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். ஒவ்வொரு கதையை கடக்கையிலும் ஆழ்மனதில் புதைந்திருந்த பல கதைகளையும் நினைவுகளையும் மீட்டு வந்தது என்பதே உண்மை. பாலபாரதியை பல வருடம் முன்னர் இணையத்தில் அறிமுகம். நேரில் இதுவரை 4-5…

  • வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து – அகநாழிகை பொன். வாசுதேவன்

    வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ – அகநாழிகை பொன். வாசுதேவன் யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. இக்கதைகள் பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் வெளியானவை. திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதிய ‘அவன் – அது = அவள்’ என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும்…

  • ஒரு முன்கதைச் சுருக்கம்

    பாடப் புத்தகங்கள், புராண இதிகாசக் கதைகள் தவிர்த்து வேறு ஏதும் படிக்கத் தக்கவையே அல்ல என்று தீவிரமாக நம்பும் பின்புலத்தில் வளர்ந்தாலும் நான் மட்டும் மந்தையிலிருந்து பிரிந்த ஆடாக கதை, கவிதைப்புத்தகங்களில் பொழுதை வீணடிப்பது என் குடும்பத்தினரை ரொம்பவே வருத்தியது. இதனால் நிறைய மனஸ்தாபங்கள். ஒரு கட்டத்தில் மும்பைக்குச் செல்ல வேண்டிய சூழல். சொந்தமண்ணைப் பிரிந்து, மும்பைக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையை நேரடியாக உணரத்தொடங்கினேன். அதுநாள் வரையில் நூல்களின் வழியே கற்றுத்தேறிய வாழ்க்கையை நிஜ அனுபவ…

  • நகரம் (சிறுகதை)

    ’எலேய்.. எந்தி நாஷ்டா வேண்டாமா?’ சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்ணைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், தூங்கிகொண்டிருந்தவனை எழுப்பிவிட்டார். ‘இல்ல அண்ணாச்சி.. வேணாம். அப்பறம் நானே வந்து பார்க்கலாம்னு நெனைச்சேன். ஊர்ல இருந்து தோஸ்த்து ஒருத்தன் வந்திருக்கான். மலாடுல…