Category: பதிவர் சதுரம் ;-))

  • நித்யாவும் நானும்..

    உங்களில் பலருக்கும் கென் தெரிந்தவராக இருக்கலாம். அனேக குழுமங்களில் சண்டைக்கோழி சேவலாக வலம் வரும் கோபக்காரன். ஆனால்.. மெல்லிய மனதுக்கு சொந்தகாரன். எதையும் வெளிக்காட்டிக்கொள்வதில் அவனுக்கு தகராறு உண்டு. அது அன்பாக இருக்கட்டும், கோபமாக இருக்கட்டும். கவிதைகள் மட்டுமே தன் வலைப்புக்களில் எழுதிக்கொண்டிருக்கும் கென், அவ்வப்போது உரைநடைபக்கமும் எட்டிப் பார்ப்பதுண்டு. கவிதைகளை விட அவனது உரைநடைக்கு நான் வாசகன். இந்த வாரத்தில் பண்புடன் குழுமத்தில் அவன் எழுதி இருந்ததை பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன். -OoO- ஒன்றாம் வகுப்பு…

  • பார்வை

    எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை நான். ஆனால், கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அது அவளாக இருக்குமோ? சே, எப்படி அது அவளாக இருக்குமென்று மனதில் நியாயமான கேள்வி எழுந்தாலும் இன்னொரு புறம் ஏன் அது அவளாக இருக்கக் கூடாதென்றொரு காட்டுமிராண்டித்தனமான சிந்தனையும் பிறக்காமல் இல்லை. எதைப் பற்றிப் பேசுகிறேன் என்கிறீர்களா? அதுதான் முக்கியமான பிரச்னை. அன்றும் எல்லா நாளைப் போலத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. திங்கட் கிழமை. திட்டப்பணிகள் குறித்து எல்லா ஒப்பந்தக்காரர்களிடமும் கலந்தாலோசனை.…

  • “கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?

    இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார். அப்படி எல்லாம் எந்தவொரு உள்நோக்கமும் இன்றியே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில்…

  • சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! சென்னை பட்டறை குறித்த தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து பார்த்தும் படித்தும் வந்திருப்பீர்கள். இந்த பட்டறைக்காக வேலை பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் சார்பாகவும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது! அதற்கு முன், இன்னொரு செய்தியை சொல்லி விடுகிறேன். இந்த பட்டறையில் இன்று மட்டும் புதியதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுகள், மின்னஞ்சல்கள் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்வோடு சொல்லிக்கொள்கிறேன். அந்த புதியவர்களின் வரவை.. நிச்சயம் வலை உலகம் இருகரம் நீட்டி வரவேற்கும்…

  • பகை- குறும்படம்

    அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன். வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே! (அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்) [youtube=http://www.youtube.com/watch?v=Cfxo-nPxw1g] மற்ற படங்களைக்காண..…