தலைக்கேறிய போதையில் அம்மாவை அடிக்கும் அப்பாக்களும், அதற்காக மகனிடம் அடிவாங்கிய அப்பாக்களையும் நிறைய பார்த்திருக்கிறேன்.

தன்னால் செய்யமுடியாமல் போன காரியங்களை தன் வாரிசு வடிவில் நிறைவேற்றிக்கொள்ள அவர்களை கட்டாயப்படுத்தும் தந்தைகளையும் நாம் அறிவோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ சிந்தனைகள் இருக்கும். தங்களின் குடும்பத்திற்காக அப்பா, அம்மா என்ற உறவுகளின் எண்ணங்களுக்காக அவற்றை இழந்தவர்களை பட்டியல் போட்டால் அது நீளும். நான் உன்னோட அப்பாடா.. எனக்குத்தெரியும் நீ என்ன படிக்கனும்னு என்று படிப்பு விசயத்தில் தொடங்கி, பல்வேறு கட்டங்களில் பெற்றோர் பலர் சர்வாதிகாரியாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறை இது போன்ற ஆற்றாமைகளைக் கேட்க நேர்கையிலும், நாம் இது போன்று இருந்து விடக்கூடாது என்ற எண்ணம் வருவதுண்டு. கண்டிப்பு என்கிற போர்வையில் குற்றவாளிகளை அணுகும் காவல் துறையினர் போல் இருக்கும் பெற்றோர் குறித்தும் நிறையவே வருத்தங்கள் வருவதுண்டு. எந்த சூழ்நிலையிலும் நமக்கான பிள்ளைகளுக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியக் கடமைகளில் ஒன்று என்றே எண்ணுகிறேன். ஒரே குழந்தை என்ற காரணத்திற்காக பகலில் ஒளி தருவது சந்திரன் என குழந்தை கூறுமாயின் ’சூப்பர்டா தங்கம், என்ன அறிவு உனக்கு’, என மகிழும் பெற்றோரைக் கண்டு எரிச்சலும் அடைந்திருக்கிறேன்.

இதோ, காலம் கனிந்து நானும் தகப்பனாகிவிட்டேன். 🙂

எட்டாவது குழந்தையாய் பிறந்த எனக்கு நேர்ந்தது போல் அண்ணன்மார் போட்டுப் பழையதான உடுப்புக்களை புதியதாய் போட்டுக் கொள்ளும் கட்டாயம் ஏதும் இவனுக்கு இல்லாமலிருப்பதே எனக்கு மிக்க மகிழ்சியாக இருக்கிறது. 🙂

அழகுத் தமிழில் குழந்தைக்கென ஒரு பெயரை முடிவு செய்து வைத்திருக்கிறோம். உறவுகளும், சுற்றமும் கூறுவதைப் பொறுத்தே அப்பெயர் இறுதி வடிவம் பெறும்.(அவனின் வாலிப வயதில் மாற்றிக்கொள்ளவும் நேரலாம்) அது வரை எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் அழைப்பது ”குட்டிப் பையா” என்றுதான்.

baby_bala

ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் இருக்கக் கூடிய சிரமங்களை உணர்ந்து கொண்டோம். ஏதேதோ காரணங்களுக்காக பெற்றவர் மீது இருந்த கோபம் கூட மகனின் பிறப்புக்குப் பிறகு குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

டாக்டரா, இன்ஞ்சினீயரா, பத்திரிக்கையாளரா, மென்பொருளாலரா என சில கேள்விகள் இப்போதே சுற்றத்தார் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. 🙂 ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அவன் அடிப்படையில் ஒரு நல்ல மனிதனாக மட்டுமே வளர்க்கப் பட வேண்டும். பிற தேர்வுகள் எல்லாம் அவனது சொந்த விருப்பத்தைப் பொறுத்ததாக மட்டுமே இருக்க வேண்டும். தூண்டுகோலாகவும், வழிகாட்டுதலாகவும் நல்ல கல்வியைக் கொடுக்க தயாராக இருக்கிறோம் நாங்கள்.

—–

பதிவு போட்டு வாழ்த்துகள் சொன்ன பதிவுலக சொந்தங்களின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பெற்றோர் ஆனதற்காக மட்டுமில்லாமல் நல்ல பெற்றோராக வாழ்நாள் முழுமைக்கும் வாழவுமாக எடுத்துக் கொள்கிறோம்.

நன்றி.

—–
பின் – குறிப்பு:- சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன். 🙂

பின் சேர்க்கை:- பலத்த எதிர்ப்புக்கு பின் தமிழில் – கனிவமுதன் – என்று பெயர் வைத்திருக்கிறோம்.


Comments

65 responses to “அப்பா!”

  1. gavaskar Avatar
    gavaskar

    hai. how are you. your article very true. your decision correct. congrats.

  2. ஆயில்யன் Avatar
    ஆயில்யன்

    //அடிப்படையில் ஒரு நல்ல மனிதனாக மட்டுமே வளர்க்கப் பட வேண்டும். பிற தேர்வுகள் எல்லாம் அவனது சொந்த விருப்பத்தைப் பொறுத்ததாக மட்டுமே இருக்க வேண்டும். தூண்டுகோலாகவும், வழிகாட்டுதலாகவும் நல்ல கல்வியைக் கொடுக்க தயாராக இருக்கிறோம் நாங்கள்///

    குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள் :))

  3. ஆயில்யன் Avatar
    ஆயில்யன்

    //சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன்//

    பா.க.சக்கு ஃபுட் போட்டிருக்கீங்க அப்படின்னு எனக்கு தோணுது !:)))

  4. வாழ்த்துக்கள் தலை

  5. ஆஹா…..உங்க படமா?

    அப்ப ..’அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமப் பொறந்துருக்கு’ன்னு கொண்டாடிடலாம்:-)))))

    மனிதம் நிறைந்த நல்ல மனிதனாக வளர்ப்பதுதான் நம்ம கடமை. மற்றதெல்லாம் அவரவர் வாழ்க்கைப் படிப்பு பார்த்துக்கும்.

    இனிய வாழ்த்துக்கள் பாலா தம்பதியினரே.

    குட்டிப்பையனுக்கு மனமார்ந்த ஆசிகள்.

  6. குசும்பன் Avatar
    குசும்பன்

    அண்ணே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! சந்தோசமான விசயம்!

  7. வாழ்த்துகள் மலர்வனத்துக்கும் பூத்த முதல் பூவுக்கும் விடுபடாமல் கவனித்துக் கொண்ட தல பாலபாரதிக்கும்

    அமோக ஆசிகள்.

    என்றேன்றும் நல்லவனாக குட்டிப் பையன் பெரிய மனிதன் ஆவான்.

    போட்ட விதை நல்லதல்லவா.

  8. குசும்பன் Avatar
    குசும்பன்

    //அது வரை எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் அழைப்பது ”குட்டிப் பையா” என்றுதான்//

    ”குட்டி தல” அப்பா பேச்சை கேட்காம அம்மா பேச்சு கேட்டு நல்லபுள்ளையா,சமத்துபுள்ள்ளையா இருப்பா!

  9. குட்டிப் பையனுக்கும், தங்களுக்கும், சகோதரிக்கும் வாழ்த்துக்கள் தல.

    //ஏதேதோ காரணங்களுக்காக பெற்றவர் மீது இருந்த கோபம் கூட மகனின் பிறப்புக்குப் பிறகு குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.//

    இது ஆரம்பம் தானே.பையன் வளர,வளர பொறுமையில புத்தராக மாத்திடுவான் உங்களை.:))

    //ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன்.//

    ஒரு வயதிலே உங்கள் தீர்க்கமான பார்வை (??!!) கண்டு வியந்தேன். :))

  10. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    நாங்க ‘குட்டித் தல’ன்னுதான் கூப்பிடுவோம்
    நீரு ஒருவகையா அப்பாவானதை நெனச்சு ‘யப்பா’ன்னு இருக்கு 🙂
    உம்மைப் போல பெருசை வாழ்த்த எவருக்கும் வயசில்லை என்பதால்..
    வாழ்த்துகிறோம்.

  11. வாழ்த்துக்கள் பாலா மாமா :).. குட்டிப்பையன் நல்லா பாத்துகோங்க.. நீங்க விரும்பிய மாதிரியே குழந்தையை வளர்க்கவும் வாழ்த்துக்கள்..

  12. குசும்பன் Avatar
    குசும்பன்

    ஆசிப் அண்ணாச்சி பா.க.சவுக்கு ஒரு புதுவரவு கிடைச்சு இருக்கு, சீக்கிரம் ”குட்டி தலையை” பா.க.சவில் தீவிர உறுப்பினரா ஆக்கிடுங்க!

  13. வாழ்த்துக்கள் தல 🙂

  14. //குசும்பன் says:
    August 15, 2009 at 11:37 am

    ஆசிப் அண்ணாச்சி பா.க.சவுக்கு ஒரு புதுவரவு கிடைச்சு இருக்கு,
    சீக்கிரம் ”குட்டி தலையை” பா.க.சவில் தீவிர உறுப்பினரா ஆக்கிடுங்க!//

    தலைமை பொறுப்பு கொடுத்துடலாமுன்னு முடிவு செஞ்சிருக்கோம். இனிமே தலையை செல்லமா படுத்துறதுக்கு குட்டித்தலதான் சூப்பர் சாய்ஸ் 🙂

  15. //ஆயில்யன் says:
    August 15, 2009 at 11:05 am

    //சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன்//

    பா.க.சக்கு ஃபுட் போட்டிருக்கீங்க அப்படின்னு எனக்கு தோணுது !:)))//

    ஆயில்ஸ்.. இதெல்லாம் பப்ளிக்கா சொல்லிக்க கூடாது. பதிவுல ஏறுனப்புறம் கும்முறதுக்கு மாத்திரம்தான் அலவ்டு 🙂

  16. //உம்மைப் போல பெருசை வாழ்த்த எவருக்கும் வயசில்லை என்பதால்..
    வாழ்த்துகிறோம்.//

    ஓஹோ..ஓ ஹோ!

  17. அண்ணே, மிக்க மகிழ்சியான செய்தி. வாழ்த்துக்கள்.

    குட்டிப்பையனுக்கு பா.க.ச ல முக்கியப் பதவி குடுக்க இருக்கோம்.

    கூப்புடுங்கப்பா ஆசிப் அண்ணாச்சியா, அவரே முடிவெடுக்கட்டும் என்ன பதவி குடுக்கிறதுன்னு.

  18. மங்களூர் சிவா Avatar
    மங்களூர் சிவா

    வ.வா.சங்கத்து மெயில்மூலமா செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

  19. குசும்பன் Avatar
    குசும்பன்

    எலேய் சோசப்பு குட்டி தலைக்கு அல்ரெடி நான் வொர்க் ஒன்னு அசைன் செஞ்சுட்டேன், மொட்ட இனி நேரங்கெட்ட நேரத்துல தூங்கிக்கிட்டு இருந்தா “வாட்டர் சர்வீஸ்” செஞ்சு எழுப்பி விட சொல்லி
    இருக்கேன்.

    கொஞ்சம் பெருசா ஆனதும் ட்ரம்ஸ் வாசிக்கிர மாதிரி கையில் ரெண்டு குச்சிய கொடுத்து தூங்கும் பொழுது “மொட்டயோட தொப்பையில்” டிரம்ஸ் சிவமணி மாதிரி வாசிக்க ட்ரைனிங் எல்லாம் கொடுக்கபோறேன்!

    இது ஒரு 5 ஆண்டு கால திட்டம், அதற்கும் மேலும் ஒரு புது உறுப்பினர் வந்தாலும் அவர்களுக்கும் பதவி வழங்கப்படும்!

  20. குசும்பன் Avatar
    குசும்பன்

    //சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன்.//

    சும்மா சொல்லாத தல, புள்ளை பிறந்த செய்தி கேட்டு திருஷ்டி பட்டுவிடக்கூடாதுன்னு உங்க சின்ன வயசு போட்டோவ போட்டு இருக்கீங்க! :))) எப்பூடி!

  21. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    தல காதுலதான் எம்மாம் பெரிய கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மலு???

  22. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    எல்லாருக்கும் திருஷ்டி பொட்டு கன்னத்துல சின்னதா வப்பாங்க
    தலைக்கு மட்டும்தான் அந்தக் காலத்துலேயே நெத்தில பெரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊசா வச்சிருக்காங்க
    ஏன்னா தல அப்பலேருந்தே வித்தியாசமானவர்

  23. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    குசும்பா

    ஐந்தாண்டு கால திட்டமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்
    இப்ப உடனே நடக்குற மாதிரி ஒரு அஞ்சு மாசத் திட்ட ஒண்ணு போடப்பு

  24. குசும்பன் Avatar
    குசும்பன்

    //எல்லாருக்கும் திருஷ்டி பொட்டு கன்னத்துல சின்னதா வப்பாங்க
    தலைக்கு மட்டும்தான் அந்தக் காலத்துலேயே நெத்தில பெரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊசா வச்சிருக்காங்க//

    அண்ணாச்சி அப்படி இல்ல நெற்றியில் மட்டும் தான் வெக்காம விட்டு ஒரிஜினல் கலர் வெளியில் தெரியுது, வித்தியாசமாக வெள்ளை பொட்டு முகம் முழுவதும் வெச்சு இருக்காங்க!நெற்றியில் மட்டும் கேப்:)))

  25. ஆசிப் மீரான் Avatar
    ஆசிப் மீரான்

    பா கு க ச வோட செயற்குழு உறுப்பினர் கூட்டத்தைக் கூப்பிடாமலேயே தலைவர் பத்விக்கு ‘குட்டி தல’ நியமிக்கப்படுகிறார்

    எதிர்ப்பவர்களுக்கு தல எழுதிய கவிதைகள் அனுப்பி வைக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்

  26. குசும்பன் Avatar
    குசும்பன்

    //எதிர்ப்பவர்களுக்கு தல எழுதிய கவிதைகள் அனுப்பி வைக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்//

    அண்ணாச்சி அதோட ஒரு டெரர் இனைப்பா மொட்டயோட இந்த போட்டோவையும் அனுப்பிவிடலாம், இன்னும் கொஞ்சம் மர்டர் வெறியா இருக்கும்:)))

  27. குசும்பன் Avatar
    குசும்பன்

    //உடனே நடக்குற மாதிரி ஒரு அஞ்சு மாசத் திட்ட ஒண்ணு போடப்பு//

    “வாட்டர் சர்வீசிங்” மொட்டய முகத்தி மட்டும் சும்மா சொய்ங்ங்ன்னு போக சொல்லிடலாம்!

    அப்புறம் ஆபிஸ் கிளம்பும் ட்ரஸில் நம்பர் டூவும் போக சொல்லிடலாம்

    அப்புறம் அழுவது மாதிரி நடிக்க சொல்லி மொட்டை அண்ணாச்சி மாங்கு மாங்குன்னு தொட்டிலை ஆட்ட வெச்சு ஆட்டி முடிஞ்சது ஈஈஈஈன்னு ”குட்டி தலையை” பழிப்பு காட்டி சிரிக்க சொல்லிடலாம்:)

  28. குசும்பன் Avatar
    குசும்பன்

    //உடனே நடக்குற மாதிரி ஒரு அஞ்சு மாசத் திட்ட ஒண்ணு போடப்பு//

    “வாட்டர் சர்வீசிங்” மொட்டய முகத்தி மட்டும் சும்மா சொய்ங்ங்ன்னு போக சொல்லிடலாம்!

    அப்புறம் ஆபிஸ் கிளம்பும் ட்ரஸில் நம்பர் டூவும் போக சொல்லிடலாம்

    அப்புறம் அழுவது மாதிரி நடிக்க சொல்லி மொட்டை அண்ணாச்சி மாங்கு மாங்குன்னு தொட்டிலை ஆட்ட வெச்சு ஆட்டி முடிஞ்சது ஈஈஈஈன்னு ”குட்டி தலையை” பழிப்பு காட்டி சிரிக்க சொல்லிடலாம்:)

  29. வாழ்த்துகள்!

  30. நேற்று தான் நல்ல சோறு கிடைக்கலைன்னு புலம்பின மாதிரி இருக்கு. திருமணம் முடிந்து,
    அதுக்குள்ள அப்பா ஆகிட்டீங்க 🙂

    அந்த நல்ல தமிழ்ப் பெயர் என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

    உங்களுக்கும் மனைவிக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகள் பாலா.

  31. தல நீங்க 1 வயசுல நல்லா தான் இருந்திருக்கீங்க! இப்பதான் பாவம் தங்கச்சி! எப்புடி இருந்த நீங்க இப்புடி ஆகிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  32. //அடிப்படையில் ஒரு நல்ல மனிதனாக மட்டுமே வளர்க்கப் பட வேண்டும்.//

    உண்மைங்க. பெற்றோருக்கு வாழ்த்துக்களும் குட்டிப் பையனுக்கு ஆசிகளும்!

  33. நான் ஆதவன் Avatar
    நான் ஆதவன்

    வாழ்த்துகள் தல….போட்டோல இருக்குற குழந்தைக்கு வீட்டு அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க 🙂

  34. இனிய வாழ்த்துக்கள். குட்டிப் பையனுக்கும் பெற்றோருக்கும் சேர்த்து.

    அன்புடன்,
    இராம.கி.

  35. சுபைர் Avatar
    சுபைர்

    வாழ்த்துகள் தலைவா..!

  36. வாழ்த்துகள் தல , புள்ள பெத்த மகராசிக்கு வாழ்த்துகள்

    குட்டிப்பையனுக்கு என் அன்பு , இனிமேவாவது பொறுப்பா நடக்க கத்துக்கோங்க 🙂

  37. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    //சும்மா.. ஒரு பில்டப்புக்காக எனது ஒருவயது படத்தை இணைத்திருக்கிறேன். //
    குழந்தைக்கு திருஷ்டி பட்டுற போகுதேன்னு உங்க படத்தைப் போட்டிருக்கீஙக தானே?!

    பதிவு இன்னும் படிக்கலை.. முழுக்கப் படிச்சுட்டு வரேன்.

  38. வாழ்த்துகள் தல…

    எங்களைப் பொறுத்த மட்டில் நாங்கள் அழைப்பது ”குட்டிப் தல” என்றுதான்.

  39. வாவ்…

    வாழ்த்துக்கள்…தாயும் சேயும் நலமுடனே வாழ வாழ்த்துக்கள்…!!!

    நல்ல தமிழ்பெயரா ? கலக்கல்…

    படம் அனுப்புங்க…

  40. வாழ்த்துகள் பாலா.

  41. மனமார்ந்த வாழ்த்துக்கள்…உங்களுக்கு இல்ல தல குட்டி தலைக்கு ;))

  42. வாழ்த்துகள் நண்பரே!!!

  43. குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள்

  44. வாழ்த்துக்கள் தம்பி..!

  45. குட்டித் தலைக்கும், அக்காவிற்கும், பெரிய தலைக்கும் வாழ்த்துகள்!!!

    இந்த ஃபோட்டோவும் சூப்பரா தான் இருக்கு…

  46. வாழ்த்துக்கள் தல 🙂

  47. வாழ்த்துக்கள்!

  48. தல எனக்கு நீங்க சொல்லா விட்டுட்டீங்க… மத்தவங்க சொல்லி தான் தெரியும்.

    சின்ன தல வளர்ந்து வாழ்வில் பெரிய சாதனைகளை நிகழ்த்த இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிவுலகின் சக்கரவர்த்திக்கும் வாழ்த்துக்கள்.

  49. krithika Avatar
    krithika

    Congrats! Even this name “kutti payyan” is good and different!

    PS: You look good in childhood!!! But how?!?!?

  50. வாழ்த்துக்கள் தல 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *