*எதற்காக இந்த ஒன்றுகூடல்?*

இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது.  தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் உருவாக்குவது நீண்டகால திட்டமாகும்.

*யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?*

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளலாம். பார்வையளர்களுக்கோ மற்றவர்களுக்கோ கண்டிப்பாக அனுமதி கிடையாது.

*ஏன் முன்பதிவு அவசியம்?*

இம்முறை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கம் சிறியது என்பதால்.. அங்கே அமரக்கூடிய வசதிக்காக முன்பதிவு அவசியமாகிறது.

*இந்த ஒன்றுகூடலில் என்னென்ன நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது?*

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெற்றோர் சந்திப்பை மட்டுமே முதலில் யோசித்திருந்தோம். பெற்றோரின் மன அழுத்தம் போக்குதல் என்ற புள்ளிக்கு முக்கியத்துவம் அளித்து, ஹேப்பி பேரன்டிங் என்ற தலைப்பையும் முடிவு செய்தபின்னரே இந்த ஆண்டின் நிகழ்வை சற்றே மாற்றியமைத்திருக்கிறோம். முதலில் ஹேப்பி பேரண்டிங்கின் முக்கியத்துவத்தை முன் வைத்து சிறப்பு அழைப்பாளர்களின் உரையும், பின் பகுதியில் பெற்றோருக்கான ”டேலண்ட் ஷோ”வுக்கும் திட்டமிட்டிருக்கிறோம்.

*முன்பதிவுக்கு என்ன செய்யவேண்டும்?*

கீழே அரும்பு அறக்கட்டளையின் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை தொடர்புகொண்டு ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் தங்களின் வருகையை உறுதிபடுத்திக்கொள்ளலாம். முன்பதிவின் போதே தாங்கள் ஏதேனும் திறமையை வெளிப்படுத்த எண்ணினால்(உதா. பாடுவது, கவிதை வாசிப்பது, நடனம், தனி நபர் நடிப்பு என ஏதேனும் ஒன்று) அதையும் தெளிவாக சொல்லி விடுவது அவசியம்.

முன்பதிவுக்கு: 99402-03132

 

 

parent Meet invitation Full